லஞ்ச ஒழிப்புத் துறை

ஒரு கோடி மதிப்புள்ள குடியிருப்பு பகுதிகளை போலி ஆவணங்கள் மூலம்  வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க  10 லட்சம் லஞ்சம்!  திருவோணம் சார்பதிவாளர் மீது  நடவடிக்கை எடுப்பார்களா பத்திர பதிவுத்துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?

போலியான கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து மற்றும் சீல் வைத்த ஆவனகளை வைத்து பத்திரப்பதிவு செய்ய பல லட்சம் லஞ்சம்! திருவோணம் சார்பதிவாளர் . 

திருவோணம் சார் பதிவாளர் ( பொறுப்பு) v. சண்முகசுந்தரம்

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு தாலுக்கா (தற்போது திருவோணம் தாலுக்கா) வெட்டுவாக்கோட்டை பாண்டி பழமனைக் காடு கிராமத்தில் பட்டு விடுதி ஊரணிபுரம் வீட்டு மனை பட்டா எண் 80 , சர்வே எண் 425 / 1A ல் மனை ஏர்ஸ் 0.20.30 -க்கு செண்டு 50 இல்கு.பிச்சைமுத்து,கு.காந்தி இவர்கள் ஓட்டு வீடு மற்றும் மாடி வீடு கட்டி வசித்து வரும்  இடத்தை அதே முகவரியில் வசித்து வரும்

ஆவணம் எழுத்தர் ( உரிமம் எண் C28/PKT/1984 ) வே.ராஜேந்திரன்  மகன் சபரிநாதன்,

சின்னையன் என்ற நபர் அந்தப் பகுதி வயல் பகுதி எனவும் , இதில் நடுப்புரம் புஞ்சை ஏர்ஸ் 0.06.50 – க்கு செண்டு 16 மட்டும் உரிமை எனவும் ,இதில் நெல் சாகுபடி செய்துள்ளதாகவும் சிட்டா அடங்கல் மற்றும் வாரிசு சான்று போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து திருவோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர் .

இந்த பத்திரப்பதிவு செய்வதற்கு திருவோணம் சார்பதிவாளர்( பொறுப்பு ) V.சண்முகசுந்தரம்,ஆவணம் எழுத்தர் ( உரிமம் எண் C28/PKT/1984 ) வே.ராஜேந்திரன் மற்றும் அவரது மகன்கள் சபரிநாதன், திருமலைவாசன்,கிராம உதவியாளர் விவேக் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டுச்சேர்ந்து மேற்கண்ட சின்னையன் என்பவரிடம் சுமார் 10  லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலரின் VAO வின் கையொப்பம் போட்டு அந்த கிராம நிர்வாக அலுவலக ரப்பர் ஸ்டாம்ப்பை போலியாக தயாரித்த பயன்படுத்தி கடந்த 31/01/2024 அன்று திருவோணம் சார்பதிவகத்தில்  சின்னையன் என்பவர் பெயரில் கிரையப்  பத்திரம் செய்துள்ளனர்.கிரயப் பத்திரம் எழுதி கொடுப்பவர்  சிவரஞ்சனி என்பவர் கிரையம் எழுதி பெறுபவர் எனவும் ,போலியாக தயாரித்த அடங்கல் ஏர்ஸ் 0.06.50 -க்கு செண்டு 16 – க்கு பதிலாக செண்டு 21  என தவறாக கிரைய ஆவணம் தயாரித்து 128 / 2024 நம்பராக சட்ட விரோதமாக பதிவு செய்து நிலமோசடியில் ஈடுப்பட்டுள்ளார்கள்.  கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து சீல் இரண்டையும் போலியான ஆவணங்களை வைத்து கள ஆய்வு பணி மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட உடந்தையாக செயல்பட்ட சார் பதிவாளர்மற்றும் இந்த பத்திரப்பதிவு செய்யும்போது சாட்சியாக  ராதாகிருஷ்ணன், ஜெயபால் இருவரும்  பெற்றுக்கொண்டு கையொப்பம் போட்டுள்ளனர்.இதனை கேள்விபட்டு தகவல் அறிந்த மனை இடம் மற்றும் வீட்டு உரிமையாளர் பிச்சைமுத்து மகன் செந்தில்குமார் என்பவர் தனக்கு சொந்தமான வீடுகள் மற்றும் மனை இடத்தை

நெல் பயிர் செய்துள்ள விவசாய நிலம் என சார் பதிவாளர் பதிவு செய்த இடம்

சட்ட விரோதமாக போலியாக நெல் சாகுபடி வயல் பகுதி என கிரைய ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ள விபரத்தை தான் சார்ந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

அதன் தொடர்பாக மேற்கண்ட  சட்ட விரோதமாக போலியாக கிரைய பத்திரம் செய்து பதிவு செய்து நிலமோசடி செய்த ஆவணங்கள் மற்றும் உரிமையாளருக்கு சொந்தமான ஒரிஜினல் ஆவணங்கள்,மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களின் விபரங்களை சேகரித்து கொண்டும் அதனை 7/02/2024 அன்று மனுவாக தயாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ஆதரவாக சங்கத்தின் நிர்வாகிகள் சிலர்

கடந்த 8/2/2024 அன்று திருவோணம் சார்பதிவகத்தின் (பொறுப்பு ) பதிவாளர் சண்முகசுந்தரத்திடம் மேற்கண்ட கிரைய ஆவணம் குறித்து புகார் மனு அளித்து விட்டு அலுவலகத்திலிருந்து வெளியே  வந்த போது எதிரே ஆவண எழுத்தர் அலுவலகம் வைத்து கொண்டு போலியாக நிலமோசடி ஆவணம் பதிவில் ஈடுப்பட்டு வரும் சபரிநாதன், திருமலைவாசன்,செ.பாலமுருகன், வே.பன்னீர்செல்வம், சா.ஜெயபாலன்,V.சண்முகசுந்தரம் மற்றும் அடையாளம் தெரியாத அவர்களின் அடியாட்கள் கும்பல் 25 – க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எங்கள் மீதே புகார் மனு கொடுகிரிங்களா என்று தகாத வார்த்தைகளால் பேசி அவர்கள் கையில் வைத்து இருந்த உருட்டுக்கட்டை, கத்தியை கொண்டு சராமாரி தாக்கியும், அடித்தும், உங்கள் அனைவரையும் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்றும் மிரட்டி விட்டு சென்று விட்டனர் . இந்த தாக்குதலில்

வீரக்குமாரி ,அலமேலு இருவருக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 8/02/2024 அன்று சேர்க்கப்பட்டு 14/02/2024 வரை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பெற்று வந்தனர்…இது தொடர்பாக , நில மோசடியில் ஈடுப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி 7/02/2024 அன்று கணினி மூலம்  திருவோணம் காவல் நிலையத்தில் 8/2/2024 அன்று மதியம் சுமார் 1 மணியளவில் பி.செந்தில்குமார் என்பவர் புகார் மனு அளித்தார் ..அதே போல்.8/02/2024 அன்று நிலமோசடியில் ஈடுபட்டு வந்தவர்கள் கொடூர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயம் அடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த வீரக்குமாரியிடம் மறுநாள் 9/2/2024 அன்று திருவோணம் காவல்துறை பாஸ்கரன் என்பவர் சென்று வாக்குமூலம் கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும்,கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்தும் வாக்கு மூலமாக புகார் மனு அளித்த்துள்ளனர் .

ஆனால் செந்தில்குமார்,வீரகுமாரியிடம் புகாரை பெற்று கொண்ட திருவோணம் காவல்துறையினர்கள் நிலமோசடியில் ஈடுப்பட்டவர்கள் மீதோ…? அதே போல் கொடூர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு ,கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீதோ… வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்காமல் மாறாக உண்மைக்கு புறம்பாக, சட்ட விரோதமாக நிலமோசடி செய்த ரவுடி கும்பலுக்கு ஆதரவாகவும் , நிலமோசடி செய்ததில் முக்கிய நபரான ரா.சபரிநாதனின் பல கோடி சொத்திற்கும்,பணத்திற்கும் ஆசைப்பட்டு திருவோணம் காவல்துறை சோரம்போகி தாக்குதல் நடத்திய அவனிடமே சம்பவம் நடந்த மறுநாள் 9/02/2024 அன்று ஒரு பொய் புகாரை பெற்று கொண்டும் அதே மறுநாளில் 9/2/2024 அன்று நிலமோசடி பதிவாளர் (பொறுப்பு ) சண்முகசுந்தரத்திடம் ஒரு பொய் புகாரை பெற்றுகொண்டும்.! மேற்கண்ட ,நிலமோசடி, ரவுடிகள் செய்த தவறுகளை மறைப்பதற்காக…? அதிகார பூர்வமாக உரிய ஒரிஜினல் ஆவணங்களோடு உண்மை தன்மையை வெளிகொண்டு வந்து வைக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கேட்டு தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் V.K.சின்னத்துரை ,சி.செல்வம்,P.செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளனர் ஆனால் எந்த ஒரு முன் அறிவிப்போ ,காவல்துறை  அனுமதி பெறாமல் திருவோணம் காவல்துறையினர்களின் உதவியோடு 9/02/2024  காலை சுமார் 9 மணியளவில் பட்டுக்கோட்டை to கந்தர்வகோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் திருவோணம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் போலி பத்திரப்பதிவு செய்ய உறுதுணையாக இருந்த முக்கிய நபர் ரா.சபரிநாதன் தலைமையில் ரவுடி கும்பல்கள் சுமார் 80 பேர் திடீர் என சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். சாலை மறியலால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் ,அவசரமாக செல்ல வேண்டிய பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாமலும் சுமார் 1 மணி நேரம் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர்…! ஆனால் இந்த மறியல் போராட்டத்தை காரணம் காட்டி திருவோணம் காவல் நிலைய SP.ஏட்டு மணிகண்டன்,SP.SI.ஜெயக்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் விஷ்ணு பிரசாத், காமராஜ் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக ஒத்து ஊதிய உளவுத்துறை தலைமை காவலர் தமிழ்மணி உள்ளிட்ட சில காவலர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஒரத்தநாடு உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு உண்மைக்கு புறம்பான சில நடக்காத சம்பவங்களை நடந்ததாக கூறி மேற்கண்ட இரண்டு பொய் புகார் மீதும் வழக்கு பதிவு செய்து (கு.வ.எண் ( 1 ) 44/2024 , ( 2 ), 46/2024 ) கீழ் 10/02/2024 அன்று நள்ளிரவு தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னத்துரை என்பவரை கைது செய்தனர். அப்போது இப்பகுதிகளில் தொடர்ந்து நிலமோசடி நடந்து வருவதாக அதனை உரிமையாளர்கள் கேட்டால் அவர்கள் மீதே கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்கும், ரவுடிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதை கண்டித்தும்…? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் கேட்டு போராடிய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னத்துரை என்பவரை கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர் மீது போடப்பட்ட இரண்டு பொய் புகார் வழக்கினை ரத்து செய்திட வலியுறுத்தியும் 10/02/2024 அன்று மதியம் 12 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளும், பெண் விவசாயிகளும் , உறவினர்களும் மற்றும் பொதுமக்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை to கந்தர்வக்கோட்டை நெடுஞ்சாலையில் சிவவிடுதி பிரிவு சாலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்,
.அப்போது மறியல் போராட்ட இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர்கள் விஷ்ணு பிரசாத், காமராஜ் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள் உங்களது கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்து பிறகு விடுதலை செய்து விடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்து போராட்டத்தை கைவிடுங்கள் என்று வலியுறுத்தி உள்ளனர்….இதனை ஏற்று கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.பிறகு காவல்துறை உத்தரவாதம் அளித்தபடி சின்னத்துரையை விடுதலை செய்யுங்கள் என கேட்டுள்ளானர் .அப்போது விடுதலை செய்யாமல் மாறாக ஆவணங்களை வைத்து சட்ட விரோதனமாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த நபர்களுக்கு சில அரசியல் ஆதரவாகவும், சில அரசியல் கட்சியினரின் தலையீடு அழுத்தத்தாலும் காவல்துறையினர்கள் மாலை இரவு நேரத்தில் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
இந்த மேற்கண்ட தன்மை நிலையை விளக்கியும் ,
பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டியும்,சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் ஒரு சிலர் தங்களுடைய சுயலாபத்திற்காக பல லட்சம் பணத்திற்குகாக நிலமோசடி, செய்பவர்களுக்கு ஆதரவாக  வைக்கப்பட்ட நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும், இரண்டு பொய் வழக்கினையும் ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ,தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவார் அவர்களுக்கும், தமிழ்நாடு லஞ்ச ஒலிப்பு காவல்துறை இயக்குனர் அவர்களுக்கும்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் .தீபக் ஜேக்கப் அவர்களுக்கும்
,தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அவர்களுக்கும் ,தஞ்சாவூர் பதிவுத்துறை துணைத்தலைவர் ஆனந்த் அவர்களுக்கும், பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர் திரு.சுரேஷ்பாபு அவர்களுக்கும், தஞ்சாவூர் லஞ்ச ஒலிப்பு காவல் உதவி கண்காணிப்பாளர் நந்தகோபால் அவர்களுக்கும், ஒரத்தநாடு வட்டாச்சியர் அவர்களுக்கும் , ஒரத்தநாடு உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு நேரிலும், தபாலிலும்,மெயில் மூலமாகவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ஒரத்தநாடு வட்டாச்சியர் .சுந்தரவள்ளி அவர்கள்…வெட்டுவாக்கோட்டை பாண்டிபழமனைக்காடு கிராம நிர்வாக அலுவலர் திருமதி.நந்தினி அவர்களிடம் உரிய விசாரணை செய்து உண்மை தன்மை அறிந்து போர்சரியாக அடங்கல் மற்றும் வாரிசு சான்று தயாரித்தவர்கள் ” மீது நடிவடிக்கை எடுத்திடவும், ஆவணங்களை தயாரித்து அடங்கல் மற்றும் வாரிசு சான்றை கொண்டு 31/01/2024 அன்று பதிவு செய்யப்பட்ட 128 / 2024 என்ற நம்பர் கொண்ட கிரைய ஆவணத்தை ரத்து செய்திட வேண்டியும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும், பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அவர்களுக்கும் தபால் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளார்கள் … …
.மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நந்தினி அவர்கள், பாண்டிபழமனைக்காடு கிராமத்தில் பணியில் இருக்கும்போதே தன்னுடைய கையெப்பத்தை போலியாக தன்னை மாதிரியே கையெப்பம் செய்தும்,என்னுடைய கிராம ரப்பர் ஸ்டாம்ப் சீல் கட்டை மாதிரியே போலியாக தயாரித்து அடங்கல் மற்றும் வாரிசு சான்று தயாரித்து கிரைய ஆவணம் பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி சம்பந்தப்பட்ட திருவோணம் காவல்நிலையத்தில் கைபட புகார் மனு அளித்துள்ளார். அதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதன் பின்பு கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் வருவாய்துறை அரசு அதிகாரிகளே முன்வந்து புகார் அளித்தும்  காவல்துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் SP.ஏட்டு மணிகண்டன், SP.SI.ஜெயக்குமார், திருவோணம் காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளு ஊக்கம் அளித்து பாதுகாத்து வருகிறார்கள் என தெரியவருகிறது. இவ்வளவு உன்மையான நிலை அறிந்தும் ,உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் திருவோணம் காவல்துறையினர்கள் மேற்கண்ட போர்சரி, கும்பல் மீது கைது நடவடிக்கை எடுக்க முன்வராத போக்கை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பின் சங்கங்களின் சார்பில் கடந்த 4/03/2024 அன்று ஊரணிபுரம் கடைத்தெருவில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து திருவோணம் காவல்நிலையத்திலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடத்திலும் மனு கொடுக்கப்பட்டுருந்தோம். இந்த ஆர்ப்பாட்டம் மனுவை பார்த்த உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் என்பவர் உடனே மாவட்ட செயலாளர் VK.சின்னத்துரை செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திரிங்களா உன் மீது இரண்டு அடிதடி, கொலை மிரட்டல் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது பத்தாதா , உன்னை பார் உன் மீது சில வழக்குகள் உள்ளது எனவும், காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துராய் என்றும் SP.ASP யிடம் கூறி குண்டாஷ் சட்டத்திலோ, அல்லது அரசுக்கு எதிராக போராட்டம்,ஆர்ப்பாட்டம் செய்கிறாய் என நிரந்தர குற்றவாளிகள் ( HS ) கெட்ட குணத்தோர் பட்டியலில் சேர்த்து ஒரு ஆண்டுகாலம் வெளியில் வரமுடியாமல் சிறையில் வைத்து விடுவேன் என்று அச்சுருத்தல் செய்து மிரட்டினார்… பிறகு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என ASP மூலம் 3/03/2024 அன்று இரவு மறுபளிப்பு கடிதம் தந்து விட்டார். மீரி ஆர்ப்பாட்டம் நடத்தினால் அனைவர் மீதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார் …..?
எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகளும்,

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் தாழ்தாமல் மேற்கண்ட போர்சரி, ரவுடி கும்பல் மீதும்,அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்ட மேற்கண்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள்..

எது எப்படியோ வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் நில மோசடி சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து 45 நாட்கள் மேல் ஆகியும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை இதற்கு பின்புலமாக அரசியல் முக்கிய புள்ளிகள் இருக்கிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே வருவாய்த்துறை அலுவலக சீல் மற்றும் வருவாய் துறை அலுவலர்களின் கையொப்பம் போட்டு போலியான சிட்டா அடங்கள் தயாரித்து குடியிருப்பு பகுதியாக இருக்கிற இடத்தை நெல் விவசாயம் செய்து வரும் நிலம் என கலா ஆய்வு மேற்கொள்ளாமலே பத்திரப்பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்ட திருமணம் சார்பதிவாளர் மீது உடனடியாக பத்திரப்பதிவு ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம் பத்திரப்பதிவுத் துறை ஐஜி மற்றும் பஞ்சவழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button