கஞ்சா போதையில் வீடு புகுந்து கும்பலாக கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யாத உடுமலை நகர் காவல் நிலையம் !நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.!
கஞ்சா போதை சமூக விரோதிகளின் கூடாரமாக உடுமலை!
உடுமலையில் வீடு புகுந்து கும்பலாக கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா போதை ஆசாமிகள் ! வழக்குப் பதிவு செய்யாத
உடுமலைப்பேட்டை காவல் நிலையம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரம் மாரியம்மாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மகன் சசிக்குமார் வயது 37 கூலித் தொழிலாளியான இவர் நேற்று 26-10-2023 வேலை முடிந்து வீடு திரும்பிய போது இரவு 10.00 மணியளவில் இவரது மனைவியிடம் சில ஆண்கள் போதையில் தகராறு செய்ததாகவும் தட்டிக் கேட்ட இவரையும் மிரட்டியுள்ளனர்
தகராறு செய்தவர்கள் கஞ்சா போதையில் இருந்ததால் போலீஸில் புகார் செய்வதாக கூறிக் கொண்டு தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டதாகவும் அதனால் கோபமடைந்த கஞ்சா போதை கும்பல் வீடு புகுந்து சசிக்குமாரையும் மனைவியையும் கடுமையாக தாக்கிவிட்டு சசிக்குமாரை வெளியில் இழுத்து வந்து கற்கலால் தலை மார்பு பகுதியில் கடுமையாக தாக்கிவிட்டு குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் எங்களை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர் மனைவி இவரை மயங்கிய நிலையில் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தனக்கும் ரத்தக்காயம் மற்றும் வலி இருந்ததால் தானும் உள்நோயாளியாக
சிகிச்சை பெற்று வருகிறார்…
சம்பவத்தின் போது போலீஸ் அவசர எண் 100 மூலம் தகவல் தெரிவித்திருந்தும் இரவு 11.00 மணியளவில் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உடுமலை நகர காவல் நிலையத்தில் இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தகவல்.
மேற்படி மாரியம்மாள் நகரில் தொடர்ந்து தடையின்றி கஞ்சா விற்பனை நடை பெற்று வருவதால் அந்த கஞ்சா போதையில் இரவு நேரங்களில் அத்துமீறும் நபர்கள் குறித்து காவல்துறையில் புகாரளித்தாலும் விசாரணை மேற்கொள்ளாமல் சமரச மாக பேசி முடித்து கொள்ள காவல்துறை முயற்சி செய்து வருவதாக பாதிக்கப் பட்ட நபரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு சமீப காலமாக போதை பொருள் ஒழிப்பதில் மும்முரம் காட்டும் இந்த சமயத்தில் சரளமாக கஞ்சா விற்பனை தங்கு தடையின்றி உடுமலை பகுதியில் நடைபெறுவது குறித்து மக்கள் அச்ச மடைந்து வருகின்றனர்