லஞ்ச ஒழிப்புத் துறை

கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 200 டாஸ்மாக் கடைக்கு
40 லட்சம் ரூபாய் வரை தீபாவளிக்கு வசூல் செய்த டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி!

கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 200 டாஸ்மாக் கடைக்கு
40 லட்சம் ரூபாய் வரை தீபாவளிக்கு வசூல் செய்த டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி!

திருப்பூர் மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்க நிர்வாகி டாஸ்மாக் சூப்பர்வைசர் தமிழரசன்


திருப்பூர் மாவட்ட முழுவதும் சுமார் 250 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.

இதில் சுமார் 200 கடைகளுக்கு மேல் தீபாவளி இனாம் என்று திருப்பூர் டாஸ்மாக் தொழிற்சங்கம் பெயரில் நிர்வாகி தமிழரசன் ‘டாஸ்மாக் கடையில் மது விற்பனை பாகுபாடு இன்றி கடை ஒன்றுக்கு கட்டாயப்படுத்தி ரூ.20,000 வீதம் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளார். டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி தமிழரசன் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக் கும் போது குவாட்டர் பாட்டிலுக்கு அதிக படியாக வாங்கப்பட்ட ரூ.10 க்கு ரூ 2 வீதம் பங்கு கேட்டு மாதம் சுமார் ஒரு கோடி வசூல் செய்து சாதனை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த ஈரோடு இடைத்தேர்தலுக்கு கட்சி நிதி என்ற பெயரில் ஒரு பெரிய தொகை வசூல் செய்துள்ளார். இப்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் பல்வேறு முறையில் வசூல் செய்ய மூளையாக டாஸ்மார்க் சூப்பர்வைசர் தமிழரசன் இருந்து வருகிறார் என தகவல் வந்துள்ளது.
மேலும் வருகின்ற ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் டாஸ்மாக் ஏலம் என அடுத்தடுத்து வசூல் செய்ய மாஸ்டர் பிளான் வைத்துள்ளதாக அவருடன் நெருக்கமானவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.


அது மட்டும் இல்லாமல் திமுக தொழிற் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் பெயரைச் சொல்லி அனைத்து அதிகாரிகளையும் மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் சாமிநாதன் இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர்களுடன் நின்ற புகைப்படங்களை அவரது முகநூலில் பதிவிட்டு விளம்பரம் செய்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர் மாவட்டத்தில் யார் யாருக்கு பார் கொடுக்க வேண்டும் என்பதில் டாஸ்மாக் சூப்பர்வைசர் தமிழரசன் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவரது வசூலுக்கு கைத்தடிகளாக ஒரு சில சூப்பர்வைசர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் அவர்களின் பெயரை சொல்லி அனைத்து அதி காரிகளையும் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி, அவிநாசி பகுதிகளுக்கு குப்பர்வைசர் நரசிம்மன் சிறப்பாக வசூல் செய்து கொடுத்துள்ளதாகவும் இதற்கு அவருக்கு கைமாறாக ஏதாவது செய்வதற்கு பிரச்சனை மற்றும் விற்பனை குறைவாக இருந்த டாஸ்மாக் கடை என் 1948 அந்தக் கடையை பெருமாநல்லூர் பைபாஸ் ரோட்டில் மதுபான கடையை இடமாற்றம் செய்து கொடுத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
தாராபுரம் பகுதிக்கு சூப்பர்வைசர் செந்தில் ,
உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் பகுதிகளுக்கு சூப்பர்வைசர் விஜயன்.
பல்லடம் முழுவதும் சூப்பர்வைசர் வெங்கடாசலம்.
காங்கேயம் வெள்ளக்கோயில் பகுதிகளுக்கு சூப்பர்வைசர் கவிமொழி ஆகியோர் வசூல் செய்து கொடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
எந்த ஆட்சி வந்தாலும் தாராபுரம் டாஸ்மாக் கடைகள் முழுவதும் இவரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் டிசம்பர் 17 சேலத்தில் நடக்க உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பெரிய தொகை வசூல் வேட்டை நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் திமுக
கட்சி பெயரை சொல்லி வசூல் செய்யும்
இவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் கட்சி பெயரை சொல்லி டாஸ்மாக் கடைகளில் சூப்பர்வைசர் தமிழரசன் வசூல் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையானால் திமுக கட்சி தலைமை இது சம்பந்தமாக விசாரணை செய்து திமுக கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையில் ஈடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
தொழிற்சங்கம் நிர்வாகியும் டாஸ்மாக் சூப்பர்வைசர் தமிழரசன் அடுத்து நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளராக சீட் கேட்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அளவுக் நிறமையாக, நூதனமான முறையில் வசூல் செய்து கொடுக்கும் பணியை மிகத் துல்லியமாக செய்து வருவதாகவும் டாஸ்மார்க் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பரவலாக பேசி வருகின்றனர் .

எது எப்படியோ அனைத்து அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் கடைக்கண் பார்வை திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் சூப்பர்வைசர் தமிழரசன் மீது விழுகுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button