மாவட்டச் செய்திகள்

கண்மாயில் இருக்கும் ஆக்கிரமிப்பை5 கிராம மக்களிடம் ஒப்படைக்கா விட்டால் தேனி மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிக்க வைப்போம் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் !

ஆக்கிரமிப்பில் இருக்கும் உடை குளம் கண் மாய் 5 கிராம மக்களிடம் ஒப்படைக்காவிட்டால் தேனி மாவட்டம்  முழுவதும் ஸ்தம்பிக்க வைப்போம் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்!

அரசு இயந்திரங்களை பயன்படுத்தி கண்மாய் ஆக்கிரமிப்பு!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க வழிகாட்டும் குழு தலைவர் சலேத்து மனுவில்,

தேவாரம் சிந்தலைச்சேரி
உடைகுளம் கண்மாய் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்திரவின் படி. 60 நாட்களில் சிந்தலைச்சேரி உடை குளம் கண்மாய் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – தமிழ்நாடு சட்ட  பேரவை பொதுக் கணக்கு குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  உத்தரவு!

பல ஆண்டு காலங்களாக இழுபறியில் கிடந்த தேனி  டி. சிந்தலைசேரி உடைகுளம் கண்மாய் தொடர்பாக, ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களை  நடத்தி முடித்து காத்திருந்த  நிலையில்  பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர், இறுதி கட்டமாக பொது கணக்கு குழுவிற்கு சலேத்து என்பவர்  தலைமையில், ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.2019 ஆம் ஆண்டு சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, உடை குளம் கண்மாயில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான ஆட்கள், டி ஆர் ஓ விசாரணையில் இருந்தும், தொடர்ந்து வேலை செய்ததோடு, அடியாட்களை கண்மாயில் தங்க வைத்துக் கொண்டு, 5 கிராம மக்களுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இறுதியாக போராட்டக் களத்தில் இருந்தவர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டதாகவும், தேவாரம் காவல் நிலையத்தில் புகார்களுக்கு மேல் புகார்கள் கொடுத்து பார்த்தது இளங்கோவன் தலைமையிலான கூட்டம் என்றும்,
இளங்கோவனுடன் களத்தில் இறங்கிய தேவாரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் அவரது தகப்பனார் ஆகியோரும், என்னவெல்லாம் செய்தனர் என்ற பரபரப்பாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் அவர்களிடம்  ஐந்து கிராமத்தைச் சேர்ந்த 350 பேர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். உடை குளம் கண்மாயை நோக்கி சிந்தலைச் சேரியில் இருந்து ஊர்வலம் நடத்தினர். கண்மாய் கரையில் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
மீண்டும் மீண்டும், தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நினைவூட்டினர். எதுவும் நடக்கவில்லை.
புதிய ஆட்சியராக ஆர்.வி.ஷஜீவனாவும்  வந்து சேர்ந்தார் தேனிக்கு……
அவர் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்றாவது நாள் அவரையும் சந்தித்து உடை குளம் கண் மாய் தொடர்பான மனுவை அளித்தனர். ஆனால் புதிதாக பதவியேற்ற தேனி மாவட்ட ஆட்சியர் சொன்ன பொறுப்பற்ற பதிலால் வெறுப்புற்ற பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பிறகு சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை, இரண்டு வழக்கறிஞர்களை  கமிஷனர்களை நியமித்து, கண்மாயை ஆய்வு செய்யச் சொல்லியதால், சங்கத்தின் வழிகாட்டும் குழுத்தலைவர் சலேத்து என்பவர் வழக்கறிஞர் ஆணையர்களிடம் நெருக்கடியை உண்டாக்கி வந்த நிலையில், ஆத்திரமுற்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான கூட்டம், தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டு இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில், 31-08-2023 அன்று, தேனி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற சட்டபேரவை பொது கணக்கு குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில்,
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் வழிகாட்டும் குழு தலைவர்  சலேத்து என்பவர் தலைமையில்,  சாமிநாதன், பரமசிவன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுக் கணக்கு குழு தலைவரிடம் உடை குளம் கண்மாய் தொடர்பாக நம்முடைய சட்டப் போராட்டத்தை முன்னிறுத்தி பேசிய சலேத்து என்பவரின் உரையை முழுமையாக கேட்ட பொது கணக்கு குழுவினர்,
60 நாட்களுக்குள் DRO இது தொடர்பான  விசாரணை முடிவை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாயில் வேளாண்மை பொறியியல் துறையின் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து தென்னங்கன்றுகளை ஊன்றுவதற்கு உடந்தையாக  தேனி மாவட்ட  வருவாய் நிர்வாகம் இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
பொதுக்கணக்கு குழுத்தலைவர் உத்தரவின் அடிப்படையில், 60 நாட்களுக்குள் டி ஆர் ஓ விசாரணை முடிக்கப்பட்டு உடைகுளம் கண்மாய் 5 கிராம மக்களிடம் ஒப்படைக்காப்படா விட்டால்,அடுத்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர்  நடத்தவிருக்கும் போராட்டம், தேனி மாவட்டம்  முழுவதும் ஸ்தம்பிக்க செய்யும் என்பதை நினைவூட்டுவதாக தெரிவித்தனர்.
கூடுதலாக, சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு வந்த பிறகு, DRO விசாரணையில் இருக்கும் ஒரு கண்மாயில், அரசு இயந்திரங்களை பயன்படுத்தி கண்மாயை ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக,
முன்னாள்  ஐஏஎஸ் அதிகாரி இளங்கோவன், தேவாரத்தைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோர் மீது, தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும் முறையான நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும்.
கூடுதலாக, கண்மாயில் தொடர்ந்து ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பல் மீதும் முறையான நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, முறையாக விசாரணை நடத்தாத DRO பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட  வேண்டும் என்பதே, எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, உடை குளம் கண்மாயில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான ஆட்கள், டி ஆர் ஓ விசாரணையில் இருந்தும், தொடர்ந்து வேலை செய்ததோடு, அடியாட்களை கண்மாயில் தங்க வைத்துக் கொண்டு, 5 கிராம மக்களுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இறுதியாக போராட்டக் களத்தில் இருந்தவர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டதாகவும், தேவாரம் காவல் நிலையத்தில் புகார்களுக்கு மேல் புகார்கள் கொடுத்து பார்த்தது இளங்கோவன் தலைமையிலான கூட்டம் என்றும்,
இளங்கோவனுடன் களத்தில் இறங்கிய தேவாரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் அவரது தகப்பனார் ஆகியோரும், என்னவெல்லாம் செய்தனர் என்ற பரபரப்பாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் அவர்களிடம்  ஐந்து கிராமத்தைச் சேர்ந்த 350 பேர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். உடை குளம் கண்மாயை நோக்கி சிந்தலைச் சேரியில் இருந்து ஊர்வலம் நடத்தினர். கண்மாய் கரையில் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
மீண்டும் மீண்டும், தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நினைவூட்டினர். எதுவும் நடக்கவில்லை.
புதிய ஆட்சியராக ஆர்.வி.ஷஜீவனாவும்  வந்து சேர்ந்தார் தேனிக்கு……
அவர் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்றாவது நாள் அவரையும் சந்தித்து உடை குளம் கண் மாய் தொடர்பான மனுவை அளித்தனர். ஆனால் புதிதாக பதவியேற்ற தேனி மாவட்ட ஆட்சியர் சொன்ன பொறுப்பற்ற பதிலால் வெறுப்புற்ற பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பிறகு சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை, இரண்டு வழக்கறிஞர்களை  கமிஷனர்களை நியமித்து, கண்மாயை ஆய்வு செய்யச் சொல்லியதால், சங்கத்தின் வழிகாட்டும் குழுத்தலைவர் சலேத்து என்பவர் வழக்கறிஞர் ஆணையர்களிடம் நெருக்கடியை உண்டாக்கி வந்த நிலையில், ஆத்திரமுற்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான கூட்டம், தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டு இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில், 31-08-2023 அன்று, தேனி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற சட்டபேரவை பொது கணக்கு குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில்,
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் வழிகாட்டும் குழு தலைவர்  சலேத்து என்பவர் தலைமையில்,  சாமிநாதன், பரமசிவன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுக் கணக்கு குழு தலைவரிடம் உடை குளம் கண்மாய் தொடர்பாக நம்முடைய சட்டப் போராட்டத்தை முன்னிறுத்தி பேசிய சலேத்து என்பவரின் உரையை முழுமையாக கேட்ட பொது கணக்கு குழுவினர்,
60 நாட்களுக்குள் DRO இது தொடர்பான  விசாரணை முடிவை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாயில் வேளாண்மை பொறியியல் துறையின் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து தென்னங்கன்றுகளை ஊன்றுவதற்கு உடந்தையாக  தேனி மாவட்ட  வருவாய் நிர்வாகம் இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
பொதுக்கணக்கு குழுத்தலைவர் உத்தரவின் அடிப்படையில், 60 நாட்களுக்குள் டி ஆர் ஓ விசாரணை முடிக்கப்பட்டு உடைகுளம் கண்மாய் 5 கிராம மக்களிடம் ஒப்படைக்காப்படா விட்டால்,அடுத்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர்  நடத்தவிருக்கும் போராட்டம், தேனி மாவட்டம்  முழுவதும் ஸ்தம்பிக்க செய்யும் என்பதை நினைவூட்டுவதாக தெரிவித்தனர்.
கூடுதலாக, சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு வந்த பிறகு, DRO விசாரணையில் இருக்கும் ஒரு கண்மாயில், அரசு இயந்திரங்களை பயன்படுத்தி கண்மாயை ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக,
முன்னாள்  ஐஏஎஸ் அதிகாரி இளங்கோவன், தேவாரத்தைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோர் மீது, தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும் முறையான நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும்.
கூடுதலாக, கண்மாயில் தொடர்ந்து ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பல் மீதும் முறையான நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, முறையாக விசாரணை நடத்தாத DRO பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட  வேண்டும் என்பதே, எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button