கனிமவளம் கொள்ளை! கைகட்டி வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மற்றும் கனிமவள துறை உதவி இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!?
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில், கிராவல் மண் குவாரி, சிறு கனிமங்கள் சட்டப்படி நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அனுமதி பெற்றுள்ள கல்குவாரிகளின் மேற்பகுதியில் உள்ள கிராவல் மண், எடுக்க மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நீதிமன்றம் அமைச்சர் கூறியதை எல்லாம் காற்றில் பறக்க விட்ட திண்டுக்கல் மாவட்டம் கனிமவளத்துறை
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தற்போது மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டுவதில் முன்புறமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வேடசந்தூர் வட்டம், குஜிலியம்பாறை வட்டம், நிலக்கோட்டை வட்டம், தாடிக்கொம்பு வட்டம், நத்தம் வட்டம், வத்தலக்குண்டு வட்டம் பகுதிகளில் உள்ள பல்வேறு சேம்பர்களுக்கு சட்டவிரோதமாக தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில்
செம்மண் அள்ளி கடத்தி கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இப்பகுதிகளில் செம் மண் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டி
சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம்,
ஒருங்கிணைப்பாளர்
நா.சண்முகம்,
47, பசுபதி லேஅவுட், கரூரைச் சேர்ந்தவர் 13-02-2024
அன்று
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார் .
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வேடசந்தூர் வட்டம், குஜிலியம்பாறை வட்டம் நிலக்கோட்டை வட்டம், தாடிக்கொம்பு வட்டம், நத்தம் வட்டம், வத்தலக்குண்டு வட்டம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக நடந்து வரும் சிறு கனிம செம் மண் கொள்ளையை
சட்டவிரோதமாக தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில் அள்ளி கடத்தப்படும் சட்டவிரோத செம்மண் மற்றும் வண்டல் மண் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க கோரி அரசாணை 135/2009 மற்றும் அரசாணை 170/2020ன் படி கனிமக் கடத்தலை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரியான தங்களிடம், கனிமக் கடத்தல் – சமூக சொத்து கொள்ளை போவது தொடர்பாக ஆதாரங்களுடன், பல நாட்களாக தொடர்ந்து வாட்ஸ்அப் வழியாகவும் புகார் கொடுத்தும், பேசியில் தகவல் கொடுத்தும் வருகிறோம்.
ஆனால் கனிமக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் திண்டுக்கல் மாவட்டம்
வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் கிராவல் ஜெயின் மற்றும் மண் குவாரி தலைவர் மற்றும் கரூர் சிவா இவர்களுடன் திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் கோர்த்துக்கொண்டு சட்டவிரோதமாக தொடர்ந்து கனிம வளங்களை கடத்தி வருவதாகவும் இதை எதிர்த்து கேட்டால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்துதான் இந்த கனிம வளம் கடத்தல் நடப்பதாகவும் ஆகையால் இந்த கனிம வளம் கடத்தலை தடுத்து நிறுத்த முடியாது என்றும் பரவலாக பேசி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
கனிம வளம் தொடர்ந்து கடத்திச் செல்வதற்கு பழனி கோட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளைத் தவிர யாரும் இந்த கனிமவள திருட்டை தடுக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் முதல் அனைவரும் தடுத்து நிறுத்த அரசு அரசாணை பிறப்பித்தும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். பட்டா நிலங்களில் செம்மண் அள்ள யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டால் பதில் இல்லை. முறையாக மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் செம்மண் அள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் கூறிய பின்பும் தற்போது செம்மண் திருட்டு நடைபெறுவதை தடுக்க உடனடியாக தகுந்த விசாரணை நடத்தி சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி எடுத்து கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் அதேபோல் சட்ட விரோத கனி மவளக் கடத்தலை ஈடுபடுபவர்கள் மீது அரசாணை 135/2009 மற்றும் அரசாணை 170/2020ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt of court)* நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகவே
கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கிராவல் மண் கொள்ளையர்கள் மீது, போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும்புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.