கனிமவள இணை இயக்குனருக்கு அனுமதி இல்லாத சட்டவிரோதமாக செயல்படும் மூன்று கல் குவாரிகள்!அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்! காத்திருக்கும் சமூக ஆர்வலர்கள்!

ஆற்றில் இருக்கும் மணலை எடுத்த பின்பு
மழை வந்தால் ஆற்றில் மணல் வந்துவிடும்!
மலையை வெட்டி எடுத்து விட்டால் திரும்ப மலையை பெற முடியாது!
நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்சரிக்கை!
- அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள் அதிகரிப்பு!
- அரசுக்கு வருவாய் இழப்பு!
- ..தரமற்ற எம்சாண்ட் விற்பனை!
- அளவுக்கு அதிகமாக லாரிகளில் எம் சான்ட் வெளிமாநிலங்களுக்கு கடத்தல்!
- அரசே குவாரிகளை ஏன் நடத்தக்கூடாது!
- தரமான எம்சாண்ட் தயாரிக்கப்படுகிறதா என்ற சோதனை செய்ய சோதனைச்சாவடி இல்லை!
இதையெல்லாம் கனிமவளத்துறை ஏன் கடைபிடிக்கவில்லை! - இதற்கெல்லாம் சட்டங்கள் இயக்கப்படவில்லை!
தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளில் பாறைகளில் இருந்து எடுக்கும் தரமற்ற எம்சாண்ட் வைத்து கட்டும் மிஷின் வைத்து கட்டவும் கட்டிடங்களை கண்டுபிடிப்பதற்கு அனுபவம் இல்லையா?
இல்லை தரமற்ற எம்சாண்ட் விற்பனையை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறுகிறார்களா?
கடந்த அதிமுக ஆட்சியில் 4 வருடம் முன்பு எம் சான்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது இருந்த அரசு தரமற்ற முறையில் தான் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லாமல் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 5 லட்ச ரூபாய் அபராதமும் ஒரு வருடம் நிறுவனத்தை சீல் என அரசு உத்தரவு !
ஆனால் அந்த உத்தரவை அரசு அதிகாரிகள் கிடப்பில் போட்டதற்கு யார் காரணம்!
தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கும் திமுக அரசு அமைச்சர்கள் கடந்த அதிமுக ஆட்சி மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்ததை மறக்க முடியாது! தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஏன் இதை கண்டுகொள்வதில்லை என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்!
செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 86 உற்பத்தி எம்சான்ட் இடங்களில் 40 இடங்களுக்குத் தான் அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. என்ற அதிர்ச்சித் தகவல்!
தரமற்ற எம் சான்ட் தயாரித்து விற்கும் நிறுவனங்கள் மீது நான்கு வருடங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்!?
கனிமவளத்துறை அதிகாரிகளின் திருட்டுக் கல்குவாரிகள்!??
தவறுகளைத் தட்டிக் கேட்க்கும் அதிகாரிகளே தவறு செய்தால் யாரிடம் போய் சொல்வது? கனிமவளத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே எந்த வித அரசு அனுமதியுமின்றி ஒரு ஊரையே வளைத்து அங்குள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிக்கின்றார் – இதை யாரிடம் சொல்ல முடியும் ? என்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதி வாழ் மக்கள். – அப்படி என்ன பிரச்சனை என்ற கேள்வியுடன் குற்றச்சாட்டுக்குள்ளான பஞ்சப்பள்ளி அடுத்த திப்ப சத்திரம் என்ற ஊரில் களமிறங்கினோம் – நமக்கு ஒரு நண்பர் வாயிலாக கிடைத்த ஒரு சமூக ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டு பேசினோம் – நாம் இருக்கும் இடத்தை அவருக்கு தெரியப்படுத்தினோம்- அதற்கு அவர் “அங்கேயே காத்திருங்கள் பத்து நிமிடத்தில் வருகின்றேன்”. என்று கூறி தொடர்பைத் துண்டித்தார். அவர் கூறியது போல் நாம் நின்ற களத்தில் களமிறங்கியவர் எங்களை அடையாளம் கண்டு வணக்கம் ஐயா என் பெயர் ராஜவேல்_ நான் பசுமை மக்கள் சேவை மையத்தில் சாதாரண உறுப்பினர் ” – என்றார் – “எங்கள் அழைப்பை ஏற்று வந்தமைக்கு மிக்க நன்றி கூறினார்.அவரிடம்
என்ன தான் பிரச்சனை? நீங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை மனு வாயிலாக போராடி வருகின்றீர்கள். என்ன பிரச்சனை? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்”. என்று கேட்டதற்கு ஆவேசத்துடன் அவர் ” என்ன சொல்ல? எதைச் சொல்ல? அவ்வளவு அநியாயம் இங்கே நடக்குது .சுரேஷ் என்கிற நபர் இப்போ கணிமவளத் துறையில் சேலம் இணை இயக்குநராக இருக்கின்றார். இதற்கு முன்பு சேலத்தில் mines AD யாக இருக்கும்போதே பல குவாரிகள் அனுமதியில்லாமல் செயல்படுவதற்கு பல கோடிகளை ரூபாய் லஞ்சமாக வாங்கிக் குவித்தவர். இவர் கடலூரைச் சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.சி.சம்பத்தோட மாப்பிள்ளை- மாமா கேசி சம்பத் உதவியோடு பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள டி.டி.யாக பொறுப்பேற்றார். அதன் பின்பு பர்கூர், தேன்கனிக்கோட்டை , திப்ப சத்திரம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்ப்பட்ட கல்குவாரிகளைக் கண்டு பிடித்து அந்த கல்குவாரி உரிமையாளர்களிடம் பல லட்சங்களை பெற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளார் – அதற்குப் பின்பு கடலூரில் இருந்த தன்னோட மாப்பிள்ளை கார்த்திக்கை வரவழைத்து அந்த அனுமதியில்லாத மூன்று கல் குவாரிகளை அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக இன்று வரை இயங்கி வருதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதில் என்ன ஒரு விசேசமான செய்தி என்றால் இவர் கிருஷ்ணகிரி டி.டி.யாக இருக்கும் போதே இவருக்கு திருவண்ணாமலை JD ஆக புற பதவி உயர்வு வந்தும் கூட சுரேஷ் கிருஷ்ணகிரியை விட்டு நகரவில்லை _ கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத் துறைக்கு கடைசி வரை டி.டி.யாக யாரையும் இவர் வர விரும்பவில்லை . இவருக்கு கிருஷ்ணகிரியில் ஒரு கைத்தடியும் மற்றும் ஏற்க்கனவே குவாரியில் மேலாளராக பணியாற்றிய ஒரு கைத்தடியும் இவங்கதான் எடுபிடியாக இருக்காங்க. உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சராக இருந்த அ.தி.மு.க-அன்பழகனுக்கு பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்து சில கோடிகளை அமுக்கியவர் தான் இந்த mines. JD( கேடி )சுரேஷ் -அ.தி.மு.க.ஆட்சி போய் தி.மு.க.ஆட்சி வந்ததும் கேடி சுரேஷை வெயிட்டிங் லிட்ஸ்ட்டில் வைச்சாங்க. அதற்கிடையில் ஒசூர் தி.மு..க .எம்.எல்.ஏ.சுரேசை மிரட்டி தனக்கு ஒரு கோடி – பேரம் பேசி கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜிடம் அழைத்துச் சென்று 5 கோடி வரை வாங்கிக் கொடுத்து இன்று மைன்ஸ் கேடி JDசுரேஷை நிம்மதியாக விட்டிருக்காங்க என்ற அதிர்ச்சித் தகவலை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இதைவிடப் பெரிய கொடுமை துறை சார்ந்த அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்து மிகப்பெரும் தொகையைக் கொடுத்து அவரின் ஆசியுடன் சேலம் மண்டல JD ஆகி இப்போ சேலத்திலிருந்து தன்னோட மூணு திருட்டுக்கு குவாரிகளையும் GPRS கருவி மூலம் கண்காணிச்சிட்டு இருக்காறு என்ற அதிர்ச்சித் தகவலையும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆட்சி மட்டும் தான் திமுக கையில் வந்துள்ளதாகவும் அதிகாரம் எல்லாம் இன்று வரை அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகளின் கையில் அப்படியே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்!
சுரேஷ் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு ஊழல் செய்து சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் இன்னும் மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் ? இன்னைக்கு துறை அமைச்சர் சொல்கிறார் யாரும் கேட்க்காமலே மாத மாதம் அதிகாரி கோடி ரூபாய் கொடுக்கிறார் என்று மறைமுறை முகமாக சொன்னதாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது!?
திப்ப சத்திரம் – பக்கத்தில பஞ்சப்பள்ளி டேம் அருகே உள்ள மலைகளில் இரவு நேரங்களில் வெடி வைக்கிறாங்க.இதனால் காட்டுக்குள்ள இருக்கிற யானைகள் எல்லாம் ஊருக்குள்ள வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் போலி அனுமதி சீட் (பர்மீட் )போட்டு சர்வ சாதாரணமாக மலைகளை குடைந்து கற்களை கடத்துறாங்க என்றும் பல முறை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்றும்
இந்த செய்தியை தற்போது உள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும்.சட்டவிரோதமான செயலைச் செய்துக் கொண்டிருக்கும் அரசு அதிகாரி JD சுரேஷ் பணியிடை நீக்கம் செய்து அரசு அதிகாரியாக இருந்துகொண்டு அளவிற்கதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அனைவரின் கோரிக்கை .
என்றார் ராஜவேல். தொடரும்…….அத்தியாயம் 2
சம்பந்தப்பட்ட திப்பசத்திரம் குவாரியை பார்வையிட்டோம். தைரியமாக பலர் பணியாற்றி வருகின்றனர் – ஆழ்துளையிடும் இயந்திரங்கள் . டிப்பர் லாரிகள் அணிவகுத்து நின்றது. மாவட்ட கனிமவளத் துறையின் அனுமதியின்றி கடந்த பத்து ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியே கனிமத்தைக் கடத்தும் வரலாற்றின் தொடக்கம் இந்திய அளவில் இது தான் என்பதே உண்மை. இனியாவது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்களா?பொறுத்திருந்து பார்ப்போம். பொன் – சுதாகர் _