கப்பம் கட்டினால் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி ! கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் சேலம் கனிமவளத்துறை இணை இயக்குநர்!
கப்பம் கட்டினால் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி ! கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் சேலம் கனிமவளத்துறை அதிகாரி!
கொள்ளை போகும் கனிம வளங்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ்நாடு முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளும் 3500க்கும் மேற்பட்ட
எம் சாண்ட் குவாரிகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு எம் சாண்ட் குவாரிகளுக்கும் பத்து வருடம் கல் உடைக்க மட்டுமே அனுமதி.
மீண்டும் கல் உடைத்து எம் சாண்ட் குவாரிகள் இயங்க அனுமதி நீடிக்க வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு மாதமும் லாரிகளுக்கு பர்மிட் வாங்கவேண்டும். ஜல்லி, கிரஷர் கற்களை லாரிகளில் விற்பனைக்கு அனுப்ப பர்மிட் அவசியம். இதை ஒவ்வொரு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ற அதிகாரி தான் வழங்குவார். இது தான் கனிமவளத் துறையின் நடைமுறையாகும்.
சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல் குவாரிகள் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மட்டுமே அனுமதி பெற்ற 388 எம் சாண்ட் குவாரிகள் இருக்கின்றன . அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பல நூறு எம் சாண்ட் குவாரிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஓமலூர் வட்டாரத்தில் கல் குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது.
அதிலும், காடையாம்பட்டி தாலுக்காவில் மிக அதிகமாக கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவை முறையாக அனுமதி பெறாமலும், புதுப்பிக்கப்படாமலும் செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கனிம வளங்கள் நாளுக்கு நாள் கொள்ளை போவதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் கனிம பொருட்களை வெட்டி எடுக்கக் கூடாது என விதிகள் இருக்கின்றன. பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது.
ஆனால் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆயிரக்கணக்கான லோடு கனிம பொருட்கள் தினந்தோறும் கொள்ளை போய் கொண்டிருக்கின்றன. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள், மலைக் குன்றுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இது எல்லாம் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக சேலம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி திருமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பட்டா நிலங்களில் பெரிய அளவிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கனிமக் கொள்ளை அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில்
சேலம் மாவட்டத்தில் தற்போது பர்மிட் வாங்கப் போன கிரஷர் உரிமையாளர்களிடம் சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி அமைச்சரைப்போய் பார்த்து விட்டு வாங்க அப்புறம் தான் பர்மிட் வழங்கப்படும் என கூற, அந்த சூட்சுமம் பிறகு தான் வெளிப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்தவற்றை நாம் சந்தித்த பல கிரஷர் உரிமையாளர்கள் கூறியதாவது,
“எங்க தொழிலை பொறுத்த
வரை நூறு சதவீதம் சரியா செய்யமுடியாது. பாறைகளை உடைக்க வெடிமருந்து பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் பார்த்து தடை செய்யப்பட்ட அல்லது அனுமதி பெறாமல் வெடிமருந்து வைத்துள்ளதாக எங்களை கைது செய்யவும் முடியும். லாரிகளுக்கு பர்மிட் பொறுத்தவரை நூறு லோடு, இருநூறு லோடு என பர்மிட் வாங்குவோம். ஆனால் தொள்ளாயிரம் லோடு, ஆயிரம் லோடு அனுப்புவோம். இதுவெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான். பர்மிட் இல்லையென்று ஆர்.டி.ஓ, தாசில்தாரை விட்டு லாரியை பிடித்துக் கொண்டு போவார்கள். இப்படி பல பிரச்சினைகள் இத்தொழில் உள்ளன. இதனால் தான் துணை இயக்குநர், அமைச்சரின் உத்தரவுக்கு நாங்கள் அடிபணிய வேண்டியுள்ளது.
சின்ன சின்ன அளவில் குவாரி நடத்தும் கிரஷர் உரிமை
யாளர்கள் முதல் பெரிய அதிபர்கள் வரை தனித்தனியாக பிரிக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரியே ஒரு நிறுவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி சிறு கிரஷர் நிறுவனங்கள் 50 ஆயிரம், அடுத்து 70 ஆயிரம், தொடர்ந்து 1 லட்சம்… பெரிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று, நான்கு லட்சங்கள் என பங்குத் தொகை போல பிரித்து ஒரு மாவட்டத்திற்க்கு ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்யும் பொறுப்பை அந்தந்த மாவட்ட அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளாராம் சேலம் மாவட்ட கனிமவள துறை அதிகாரி.
கடந்த சில வாரங்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களிடம் கனிம வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக வசூல் நடத்தி வருகின்றனர். கப்பம் கட்டாத கல் குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மாத இறுதிக்குள்
கட்ட நிபந்தனை.
வேண்டும் என கெடு வைத்துள்ளனர். இதனால் தான் சேலம் மாவட்டத்தில் ரெகுலராக வழங்கும் குவாரி பர்மிட் கூட வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்குவாரி உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எது எப்படியோ
சுற்றுச்சூழலை மாசு படுத்த மாட்டோம், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க மாட்டோம், உள்ளூர் வாசிகளுக்கு வேலை தருவோம்’ – இப்படியெல்லாம் தமிழக அரசுக்கு உத்தரவாத பத்திரம் எழுதிக் கொடுத்த குவாரிகளின் உரிமையாளர்கள் ஒரு பக்கம் இயற்கைக்கு வெடி வைக்க சுற்றுச்சூழலை சீரழித்து கிரானைட் குவாரிகளின் ஆக்டோபஸ் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி விழுங்கிக் கொண்டு இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்.ஆகவே தமிழகம் முழுவதும் அரசு நிலங்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் திருட்டில் பயனடைந்த அரசு அதிகாரிகள் மீதுசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.