கருணை காட்டாத காவல் ஆய்வாளர்! உயிருக்கு போராடும் குழந்தை!
நடவடிக்கை எடுப்பாரா கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சகாயபுரம் கிராமம்( எளத்தேரி போஸ்ட்) சேர்ந்த சத்திய ஜோதி குடும்பத்துடன் கணவர் சரவணன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் மகன் வயது 12
ஜோசப் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு நேரத்தில்
வீட்டு உரிமையாளர் ஜோசப் பேரன் மில்லன் வயது 12 (தந்தைஇல்லை ) அம்மாமட்டும் உள்ளார்.கையில் சனிடேஷன் மற்றும் தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது சத்யஜோதி மகன் மீது கையில் வைத்திருந்த சானிட்டைசரை திடீரென்று உடம்புமீது ஊற்றி மில்லன் தீக்குச்சியை பற்ற வைத்து போட்டு விட்டான். உடனே சத்யஜோதி மகன் துடிதுடித்து வலிதாங்காமல் அலறி உள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உடல் முழுவதும் எரிந்து கொண்டிருந்த குழந்தையின் மீது எரியும் தீயை அணைத்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு உடல் முழுவதும் காயத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சதிய ஜோதியின் வீட்டு உரிமையாளர் ஜோசப் குழந்தைக்கு எவ்வளவு செலவு ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று ஆறுதலாக கூறி ஒரு சில நாட்கள் மட்டும் மருத்துவமனையில் சின்ன சின்ன செலவுகளை செய்து விட்டு தற்போது குழந்தைக்கு செலவு செய்யாமல் ஏமாற்றி வந்து கொண்டு வந்துள்ளார்.
வருமானம் இல்லாமல் வறுமையில் இருக்கும் சத்யஜோதி வீட்டு உரிமையாளர் ஜோசப் அவர்களிடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டுள்ளார் என்னால் செலவு செய்ய முடியாது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் புகார் கொடுங்கள் என்று சொல்லி அவர்களை மிரட்டி உள்ளார் .
இது சம்பந்தமாக வறுமையில் இருக்கும் சத்யஜோதி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு போய் சிகிச்சை அளிக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் பர்கூர்தாலுகா கந்திக்குப்பம் காவல் நிலையத்தில் ராஜாமணி உதவி ஆய்வாளரிடம் புகார் கொடுத்தார் .ஆனால் கந்திகுப்பம் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆயவாளர் வீட்டு உரிமையாளர் ஜோசப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு சத்யஜோதி புகாருக்கு சிஎஸ்ஆர் கூட போட்டு தராமல் இழுத்தடிப்பதாக தகவல் வந்துள்ளது.
புகார் கொடுத்து ஒரு வாரமாக சிஎஸ்ஆர் போடாதற்கு என்ன காரணம் என்று பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து உதவிஆய்வாளர் ராஜா மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பை துண்டித்து விடுகிறார்
யாருடைய தொலைபேசியையும
எடுப்பது இல்லை .
ஆகையால் தற்போது உயிருக்கு போராடி வரும் அந்த குழந்தையை காப்பாற்ற கருணை காட்டாத உதவி காவல் ஆய்வாளர் ராஜாமணி மீது மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து உயிருக்கு போராடும் குழந்தைக்கு மருத்துவத்திற்கு உதவ கேட்டுக்கொண்டுள்ளார் சத்யஜோதி.
எது எப்படியோ காவல் நிலையங்களில்
உயிருக்கு போராடும் குழந்தைகளுக்கு உதவி கேட்டுச் சென்றும் ஆய்வாளர் இப்படி கருணை இல்லாமல் நடந்து கொள்வது வேதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்களின் கருத்து!