கர்நாடகா அரசின் அழுத்தத்திற்கு மத்திய அரசு அடிபணிய கூடாது.தமிழக மக்களின் கொந்தளிப்பை உணர்த்த கர்நாடகா காவிரி மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் . முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இது சம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் இன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டி சந்தித்து போது!
மேகதாது அருகில் 441.2 மீட்டர் உயரத்தில் 66.5 டி எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் திறன் உடைய அணை கட்டப்படும். இந்த அணை கே.ஆர்.எஸ். அணையை விட பெரிதாக இருக்கும்.
மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கி இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை கட்ட இடைக்காலத் தடை விதித்தது தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எல் கே ஹல்தர் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார் அப்போது தஞ்சாவூரில் பத்திரிகையாளர் சந்தித்த காவேரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்
காவிரியில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். வெளிப்படையாக கூறியதற்கு மத்திய அரசு அழுத்தத்தில்தான் கூறியுள்ளார் என்று டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது சம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் இன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டி சந்தித்து வருகின்ற 23 ஆம் தேதி டெல்டா மாவட்டத்தில் காவிரியில் மேகதாது அணை கட்ட விவாதிக்கப்படும் என்று காவிரி மேலாண்மை குழு தலைவர் பேசியது எதிர்ப்பு விவசாய சங்கம் சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் pஅவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழகத்தில் தற்போது வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள் எதிர்காலத்தில் பெருமளவு பாதிக்கப்படும். ஏற்கனவே பருவமழை பொய்த்து போனதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வறட்சியால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயம் கேள்விக் குறியாகும் என தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக அமைச்சர் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின் அவருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் .
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சட்டத்துக்கு புறம்பானதாகும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் சட்டத்திற்கும் எதிராகவும் செயல்பட்டு வருவதாகவும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட விடாமல் காவிரி உரிமைக்காக தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்றும் தமிழக மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் குழு டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டி அவர்கள்
பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு:
இடம் நந்தனம் – சென்னை,
நாள்:18.06.2022
ஜூன் 23 மத்திய அரசு, ஆணையத்தை கண்டித்து காவிரி டெல்டாவில் விவசாயிகள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி மேகதாது வரைவுத் திட்ட அறிக்கையை தீயிட்டுக் கொளுத்துவோம்
பி.ஆர்.பாண்டியன்
அறிவிப்பு
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் இன்று சென்னையில் தமிழக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாண்புமிகு கா துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:.
காவிரி பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக துரோகம் இழைக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு 2018ல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு மேகதாது அணை கட்ட வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவிற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து 2018 இல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ஓடி வரும் உபரிநீர் கர்நாடகம் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்ததால் அணை கட்ட முடியாது என தீர்ப்பில் காட்டிய பின்நிலுவையில் உள்ளது.நடுவர் மன்றமும் இதனை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக சட்ட விரோதமாக முயற்சி எடுப்பது அதற்கு இந்திய அரசு துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தற்போது கர்நாடக சட்ட விரோதமாக தயாரித்து கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வேன் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஆணையத் தலைவர் சவால் விடுவது மத்திய அரசின் அரசியல் அழுத்தத்தின் காரணத்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே காவிரி தமிழக உரிமையை பறிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக சதி செயலில் ஈடுபடுகிறது இதனை எதிர்த்து கடந்த 7ம் தேதி தமிழக அரசு மீண்டும் ஒரு வழக்கை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்திருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதால் அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவசரஅவசரமாக ஆணையத் தலைவர் அவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சவால் விடுவது ஒருதலை பட்சமானது. தமிழகத்தை அழிப்பதற்கு மத்திய அரசின் சதிக்கு துணை போவதாக அமையும். இதனை கண்டித்து வருகிற 23-ஆம் தேதி ஆணையக் கூட்டம் நடைபெறும் அதேநாளில் காவிரி டெல்டா விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கர்நாடகாவில் வரைவு திட்ட அறிக்கை நகலை தீயிட்டுக் கொளுத்துவோம்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு,காவிரி உரிமை மீட்புக்கான போராட்டத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டக் களத்தில் இருந்தார்கள். விவசாயிகளுடைய ஒருங்கிணைப்பில் போராட்டங்களை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கு ஏற்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக பாஜக கூட்டணி இருப்பதால் தமிழகத்தில் காவிரி உரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டக்களத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆணையம் மூலமாக மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு சதி செயலில் ஈடுபட்டுள்ளது எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.சட்டப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் கட்டமைத்து தீவிரப்படுத்தி நாள்தான் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும் என அவரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார்.
சென்னை மண்டல செயலாளர்
சைதை சிவா உடன் இருந்தார்
.
.