கள்ளக் காதலனுடன் கணவனுக்கு மது ஊத்தி கொடுத்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டுச் சென்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
முதலில், ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என, சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இது தொடர்பாக, ஒட்டன்சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் , சோழவந்தான் அருகே இரும்பாடி ரயில்வே தண்டவாளத்தில், கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஒட்டன்சத்திரம் இடும்பன் குரும்பபட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த சக்தி கணேஷ் வயது 30. அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினந்தோறும் குடித்து வந்து மனைவி பரமேஸ்வரியை அடித்து துன்புறுத்தி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பரமேஸ்வரி உறவினர் ஒருவர் பரமேஸ்வரி வீட்டில் தங்கி இருந்த எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்த கண்ணன் என்பவருக்கும் பரமேஸ்வரிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து, கணவன்யிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது அதனைத் தொடர்ந்து, பரமேஸ்வரியும் கள்ளக்காதலன் இருவரும் சேர்ந்துபரமேஸ்வரியின் கணவர் சக்தி கணேசை தீர்த்து கட்ட முடிவு செய்தனர் . குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை கள்ளக்காதலனுடன் சோழவந்தான் அருகே அழைத்து வந்து கணவனுக்கு கள்ளக்காதலனை வைத்து மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார் மனைவி பரமேஸ்வரி. பின்னர் போதையில் இருந்த கணவரை கள்ளக்காதலன் கண்ணன் மற்றும் மனைவி பரமேஸ்வரி கொலை செய்துரயில்வே இந்த வளத்தின் குறுக்கே போட்டு தப்பிச் சென்றுவிட்டனர். ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த பரமேஸ்வரின் கணவனை காவல்துறையினர் பற்றி பிரோத உடல் பிரோத பரிசோதனை செய்ததில் பரமேஸ்வரி கணவன் கொலை செய்யப்பட்டது விசாரணை முடிவில் தெரியவந்தது.கணவனை கொன்ற மனைவி மற்றும் கணவனை கொலை செய்ய உண்மையாக இருந்த கள்ளக்காதலன் ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்த ரயில்வே போலீசார் அவர்களை மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் சோழவந்தான் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.