கள்ளக்காதலுடன் சென்ற மனைவி ! தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்! அனாதையாக நிற்கும் மூன்று குழந்தைகள்! பாலமேடு காவல்துறையின் அலட்சியப் போக்கால் நடந்த சோக சம்பவம்!

மதுரை பாலமேட்டில் காதல் திருமணத்தை மீறிய உறவு காரணமாக கள்ளக்காதலுடன் மனைவி சென்றதால் விரக்தி அடைந்த கால் டாக்ஸி உரிமையாளர் பாலமேடு காவல் நிலையம் முன்பு தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம் உரிய நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மூன்று குழந்தைகள் அனாதைகளான பரிதாபம்மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்வேந்தன் வயது 35 மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை வயது 30 இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பொன் வேந்தன் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் சமீப காலத்தில் சொந்தமாக கால் டாக்ஸி வாங்கி அதன் உரிமையாளராக இருந்து வருகிறார் அவரது மனைவியான முத்துப்பிள்ளை பாலமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்இவர்களுக்கு சரவணன் வயது 12 சண்முகம் வயது 9 சக்தி வயது 7 ஆகிய மூன்று ஆண்குழந்தைகள் உள்ளது இவர்கள் பாலமேட்டில் உள்ள பள்ளியில் முறையே ஆறாம் வகுப்பு நான்காம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர் பொன்வேந்தன் மனைவி முத்துப்பிள்ளைக்கு வேறு சில ஆண்களுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது இதனை அடுத்து தொழில் விஷயமாக இவர்கள் பாலமேடுகாவல் நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த முத்து பிள்ளைக்கு பல்வேறு நபர்களுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது இதனை அறிந்த அவரது கணவர் பொன்வேந்தன் அவ்வப்போது மனைவியை கண்டித்து வந்துள்ளார் இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக வேலைக்கு சேர்ந்த பொன்வேந்தன் 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து சென்றுள்ளார்இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துப்பிள்ளை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது இதனை அறிந்த முத்து பிள்ளையின் கணவர் பொன்வேந்தன் உடனடியாக சென்னையிலிருந்து பாலமேடு திரும்பி வந்துள்ளார் வந்தவர் ஞாயிற்றுக்கிழமை காலை பாலமேடு காவல் நிலையத்தில் தனது மனைவி வேறொருடன் ஓடி விட்டதாக புகார் அளித்துள்ளார் புகாரின் மீது விசாரணை செய்வதில் தாமதப்படுத்திய காவல்துறையினர் மனைவியை கண்டுபிடித்து தருவதாக சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் தனது மனைவி இவருடன் ஓடி விட்டதால் கடும் மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருந்து வந்த பொன்வேந்தன் நேற்று மாலை காவல் நிலையம் சென்று மனைவியை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டுமென கேட்டுள்ளார் இதற்கு பாலமேடு காவல் துறையினர் உரிய பதிலளிக்காததால் வீட்டிற்கு வந்த பொன்வேந்தன் மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலமேடு காவல் நிலையம் முன்பாக தனக்குத்தானே மன்னென்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார் அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன் வேந்தன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்துள்ளார் இறப்பதற்கு முன்பு தனது மூன்று குழந்தைகளையும் தனது சகோதரியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்லுமாறு கூறியதாக அவரது சகோதரியின் கணவர் தெரிவித்தார் கடும் மன உளச்சலில் இருந்த பொன் வேந்தனை காவல்துறையினர் முறையாக அழைத்து உரிய வகையில் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்திருந்தாலோ அல்லது தக்க ஆலோசனைகள் வழங்கியிருந்தாலோ அநியாயமாக அப்பாவியின் உயிர் போயிருக்காது என அருகில் இருந்தவர்கள் கூறினர்.காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியின் திருமணத்தை மீறிய தகாத உறவு காரணமாக தனது மூன்று ஆண் குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றது அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் கள்ளத்தொடர்பு காரணமாக தங்களின் வாழ்க்கையையும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே நிமிடத்தில் பறிகொடுத்தது பரிதாபத்தை ஏற்படுத்திஇருப்பதாக தெரிவித்தனர்