நகராட்சி

கழிவு நீர் கால்வாய் தூர்வார்தல் மற்றும் ஆங்காங்கே குப்பைகள் அகற்றாமல் தேங்கி கிடப்பதாகவும்   சாலை வசதி குடிநீர் வசதி இதுபோன்று  மக்களின் பல பிரச்சனைகள் சரி செய்யாமல் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசா !?சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப்பரிசும், 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கி கௌரவிக்க உள்ளார்.


இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்
நகராட்சிக்குட்பட்ட மங்காபுரம், அய்யம்பட்டி, காளியம்மன் நகர், வ.உ.சி‌.நகர், திருவண்ணாமலை ரோடு, ஆத்துக்கடை தெரு, ராஜாஜி சாலை, வ.உ.சி.நகர், சக்கரை குளம், மல்லபுரம் தெரு, பாஞ்சால வேலி தெரு போன்ற இடங்கள் மற்றும்
ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சர்க்கரை  குளம் முழுவதும்  பாசி பிடித்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும். குளத்தில் நான்கு மூலைகளிலும் குப்பைகளை கொட்டி உள்ளதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர்
நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. எந்த வார்டிலும் குறைகள் இல்லாமல் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் குப்பைகள் ஆங்காங்கே கிடைப்பதை காண முடிகிறது.
குப்பைகளை முறையாக அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. . பல தெருக்களில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கழிவு நீர் கால்வாயில கால்வாய்கள் தூர்வார் படாமல் அடைப்பு ஏற்பட்டு சாக்கடையில் இருக்கும் கழிவு நீர் சாலைகளில் தேங்கி நின்று ஆதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு  முன்பு குப்பைகளை சுகாதாரமற்ற நிலையில்  போட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மங்காபுரம், அய்யம்பட்டி பகுதி சேர்மனோட வார்டு பகுதி. இந்த ஏரியாவுலேயே நிறைய தெருக்கள்ல கழிவுநீர் கால்வாய் தூர்வாராம தண்ணி தேங்கி நிக்குது என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவலாக வந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட தெருக்களின் அவல நிலை



அதை சுத்தம் பண்றதுக்கு நகராட்சிக்கு நேரம் இல்லையா என்று தெரியவில்லை!அந்த அளவுக்கு இந்த ஊரு மோசமா இருக்கிறதா என்று தற்போது கேள்வி எழுப்பி உள்ளனர்.
இவ்வளவு குறைகள் இருக்கிற நகராட்சி ஆய்வுசெய்து சிறந்த நகராட்சின்னு அறிவுத்திருப்பதாக சொன்னால் எங்களால நம்பவே முடிய வில்லை என்று  சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வருவதையொட்டி ரத வீதிகளை சுத்தம் செய்ததோடு  சேர்ந்து சில தெருக்களையும் சுத்தம் செய்தார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்


அதன் பின்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி சேலத்தை சேர்ந்த சுல்தானா அதிகாரி தலைமையில்
அதிகாரிகளை அழைத்து வந்து ஆய்வு செய்த போது
சுகாதாரம், கழிவு மேலாண்மை, வரிவசூல், நிதி நிலைமை, பணிகள் உள்ளிட்டவைகள் அடிப்படையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் எல்லா நிலையிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்  கழிவு நீர் கால்வாய் தூர்வார்தல் மற்றும் ஆங்காங்கே அகற்றாமல் தேங்கி கிடப்பதாகவும்   என்றும்  சாலை வசதி குடிநீர் வசதி இதுபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பல பிரச்சனைகள் சரி செய்யாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
மக்களின் பிரச்னைகளை சரி செய்வதில் கவுன்சிலர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் மறுகட்டமைப்பு செய்தல் பணிகள் செய்யப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் யூனியன் பகுதியும், நகராட்சி பகுதியும் சேருமிருடத்தில் கொட்டப்படும் கழிவுகளை சேகரிப்பதில் உள்ள பிரச்னையை சரிசெய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது”என்று நகராட்சித் தலைவர் ரவிக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
நகராட்சியில் தற்போது இருக்கும் பிரச்சினைகள் குறித்து கவனத்துக்கு வந்துள்ளது. கூடுதலாக ஆட்களை பணியமர்த்தி அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆணையாளர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார். எது எப்படியோ தமிழக அரசால் அறிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு போய் சேர்க்கும் முக்கிய பணியில் மாவட்ட ஆட்சியாளர்கள்மற்றும் நகராட்சி ஆணையர்கள் அதிகாரிகள் இருக்கின்றன. இதுபோல் குற்றச்சாட்டுகள் எழும் பொழுது இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தமிழக அரசுக்குதான் இருக்கிறது என்றும் ஆனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் மக்களிடையே உள்ள நன்மதிப்பை சீர்குலைக்கும் எண்ணத்தில் ஒரு சிலர் தவறான தகவல்களை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் இதில் உண்மை தன்மை அறிய நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான் நேர்மையான சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button