கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! உயிருக்கு போராடும் பச்சை மலை ( காப்பி எஸ்டேட் சவுத் ) பெண் கூலித் தொழிலாளி! இழப்பீடு வழங்க மறுக்கும் மருத்துவர்! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்!
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி !
வால்பாறையில் மொத்தம் ஐந்து தேயிலை நிறுவனங்களின் தோட்டங்களும் அரசாங்கத்தின் டாண்டீ (TANTEA)நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களும் உள்ளன. இதில், 30,000 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.345 தினசரி ஊதியமாக உள்ளது. இவர்கள் இதை வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. இந்த நிலையில் 3000 தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
வால்பாறையில் அரசு மருத்துவமனை 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில்
எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை .
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி நோயாளிகள் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் மற்றும் இரவு காவலர் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை கோவை மாவட்ட நிர்வாகமும் மருத்துவ அதிகாரிகளும் மின்சார வாரியமும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
வால்பாறை மையப்பகுதி அமைந்துள்ள அரசு மருத்துவமனை 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம், குடிதண்ணீர், துப்புரவு பணி உள்ளிட்ட பணிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே இதனை கருத்தில் கொண்டு துப்புரவு பணியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்; தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த அடிப்படை வசதி இல்லாத அரசு மருத்துவமனைக்கு செல்லாத வால்பாறை கூலித்தொழிலாளிகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவ கிளினிக் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கவனக்குறைவால் தவறான சிகிச்சை அளித்து வருவதாகவும் அதனால் பல கூலித் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ள தாகவும் அதிர்ச்சி தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பேச்சியம்மாளுக்கு 23 / 6 /2023 அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டாடா காபி லிமிடெட் நிறுவனத்தில் உள்ள ஹாஸ்பிடலில் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
அதன் பின்பு வலி தாங்க முடியாத பேச்சியம்மாள் வால்பாறையில் உள்ள டாக்டர் M.முனுசாமி டாக்டர் M.செந்தில்நாத் இவர்களுக்கு சொந்தமான செந்தில் கிளினிக் சென்றுள்ளார்.
பேச்சியம்மாள் உடல்நிலை சரியில்லை என்று டாக்டர் முனுசாமி இடம் கூறியுள்ளார்.
டாக்டர் முனுசாமி பேச்சியம்மாளை பரிசோதனை செய்யாமல் கவன குறைவால் தவறாக ஏதோ ஒரு ஊசியை போட்டு மருந்து கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன் பின்பு சில நாட்களில் பேச்சியம்மாளுக்கு ஊசி போட்ட இடத்தில் அலர்ஜி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் இருந்துள்ளார். உடனே பேச்சியம்மாளின் கணவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ஊசி போட்டதில் (infection) தொற்று ஏற்பட்டிருப்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறுவை சிகிச்சை செய்துள்ளனர் .
அதன் பின்பும் பேச்சியம்மாளுக்கு அந்த இடத்தில் குணமாகவில்லை. அதன்பின்பு பேச்சியம்மாளின் கணவன் கோவை துடியலூரில் உள்ள லட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் இதுவரை குணம் அடையவில்லை இருந்தாலும் பேச்சியம்மாள் கணவர் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து கொண்டு வரும் நிலையில் வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ஊசி போட்ட தவறான சிகிச்சையால் கூலித் தொழிலாளி பேச்சியம்மாள் கால் பகுதி அழுகிய நிலையில் தற்போது இருப்பதால் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுவது அவருடைய ஒரு கால் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம் என்று வேதனையுடன் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளி 53 வயது பெண்மணி என்று கூட இறக்கம் காட்டாமல் தன்னுடைய பண பலம் அதிகார பலத்தை பயன்படுத்தி தான் செய்த தவறை மறைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. வால்பாறையில் உள்ள தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகி களுக்கு தெரியாமல் வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவர் செலவுக்கு தருவதாக பாதிக்கப்பட்ட பேச்சியம்மாளின் மகன்களிடம் கூறியுள்ளார் .ஆனால் அதை பேச்சியம்மாளின் மகன்கள் வாங்க மறுத்து விட்டனர்.இதுவரை பேச்சியம்மாள் கணவர் ஐந்து லட்சம் ரூபாய் வரை தன்னுடைய மனைவிக்கு செலவு செய்துள்ளதாகவும் இன்னும் குணமாகவில்லை என்றும் அது மட்டும் இல்லாமல் ஒரு கால் எடுக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம் என்று வேதனையுடன் கூறியும் அதை டாக்டர் முனுசாமி காது கொடுத்து கேட்கவில்லையாம். ஏனென்றால் டாக்டர் முனுசாமி வால்பாறையில் இருக்கும் பெட்ரோல் பங்க் வணிக வளாகம் அதுபோன்று பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளாராம். வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் ஏழை எளிய கூலித் தொழிலாளிகளுக்கு சிகிச்சை பார்த்து தற்போது பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு அதிபராக இருக்கும் செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி வால்பாறையில் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தேயிலை தோட்ட கூலி தொழிலாளி பேச்சியம்மாளுக்கு தவறான சிகிச்சை மற்றும் கவனக்குறைவால் ஊசி போட்ட காரணத்தினால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். ஆகவே தவறான சிகிச்சை அளித்ததால் தான் கூலித்தொழிலாளி பெண்மணிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . ஆனால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண் கூலித் தொழிலாளர் பேச்சியம்மாளுக்கு தவறான சிகிச்சை அளித்த செந்தில் கிளினிக் மருத்துவர் முனுசாமி இடம் உரிய இழப்பீடு பெற்று தர ஏன் முயற்சி எடுக்கவில்லை என்று தெரியவில்லை!
தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு நல சங்க நிர்வாகிகள் முன் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் அனைத்து கூலித் தொழிலாளிகளின் கோரிக்கையாகும்.
தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி மீது கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி மீது வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் அது மட்டும் இல்லாமல் கவன குறைவால் பேச்சியம்மாளுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. எது எப்படியோ பணபலம் அதிகார பலம் அரசியல் பலம் இருக்கும் வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி தேயிலை தோட்டத் தொழிலாளி பேச்சியம்மாளுக்கு அளித்த தவறான சிகிச்சைக்காக முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்த குடும்பத்திற்கு இழப்பீடு தொகை 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அது மட்டும் இல்லாமல் இனிமேல் எந்த ஏழை எளிய கூலி தொழிலாளிகளுக்கு கவனக்குறைவால் தவறான சிகிச்சை அளிக்கும் எந்த மருத்துவராக இருந்தாலும் அவர்களை சட்டரீதியாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க மணு கொடுக்கப் பட்ட நிலையில் தற்போது
பொறுத்திருந்து பார்ப்போம் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இணை இயக்குனர் நடவடிக்கையை!