மாநகராட்சி

காரில் கொண்டு வந்த குப்பையை பொது இடத்தில் வீசி சென்றவருக்கு 2000 ரூபாய் அபராதம் !

கோவை மாநகராட்சி,மத்திய மண்டலம், நஞ்சுண்டாபுரம், 62 வது வார்டு,  பிரதான சாலையில் காரில்  கழிவு குப்பைகளை கொண்டு வந்து  பொது இடத்தில், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்,விதிமீறி வீசி சென்ற காரை மடக்கி பிடித்த மாநகராட்சி மத்திய மண்டல சுகாதார ஆய்வாளர் டி.ஜெகநாதன், உதவியாளருடன் சென்று குப்பை கழிவுகளை காரில் வந்து கொட்டி சென்ற நபர்களுக்கு, ரூபாய் 2000,  அபராதம் விதித்து உடனடியாக வசூலித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினார், மாநகராட்சி அதிகாரிகளின் செயலை கண்ட பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர், இது போன்று கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர், இதனை  மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் , நேர்மையாக பணி செய்த சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், அவருடன் கண்ணியத்துடன் பணி செய்த,தினேஷ் குமார்,  கார்த்திகேயனை  பாராட்டி ஊக்கபடுத்தினார்

Related Articles

Back to top button