காவல் செய்திகள்

காவல்துறைக்கு சவாலாக கஞ்சா,போலி மது பாட்டில், மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள்! கட்டுக்குள் கொண்டு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி! பாராட்டும் பொதுமக்கள்!

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியில் உசிலம்பட்டி அமைந்துள்ளது . உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 10 காவல் நிலையங்கள் இருக்கின்றன.
உசிலம்பட்டி காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக செந்தில் குமார் பொறுப்பேற்ற நாளிலிருந்து தற்போது வரை கொலை கொள்ளை வழிப்பறி கஞ்சா மற்றும் போலி போலி மது பாட்டில் விற்பனை தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஆகிய சட்டவிரோத சம்பவங்கள் காவல்துறைக்கு சவாலாக இருந்து வந்தது.

சமூக விரோதிகளின் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உசிலம்பட்டி காவல் உட்கோட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். குறிப்பாக உசிலம்பட்டி காவல் உட்கோட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கொடுத்து வந்தனர். உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா, லாட்டரி, சட்ட விரோத போலி மது விற்பனையை அனுமதிக்க முடியாது. கஞ்சா விற்பனை செய்வதால் அதை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் இதனால் அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணத்துடன் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி
உசிலம்பட்டி காவல் உட்கோட்ட பகுதிகளில் காவல்துறைக்கு சவாலாக இருந்த
கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனையை தடுத்து நிறுத்த 24 மணி நேரமும் தனிப்படை காவலர்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி ,போலி மது பாட்டில் விற்பனை மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் நடக்கும் விபச்சாரம் மற்றும் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து உசிலம்பட்டி காவல் உட்கோட்ட காவல்துறையினரின் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தி வருவதால் போதைக்கு அடிமையாக இருந்த பள்ளி கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் உசிலம்பட்டி துணை காவல் கண் காணிப்பாளரின் செயலை கண்டு உசிலம்பட்டி பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் உசிலம்பட்டி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்களாக இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் உசிலம்பட்டி பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களை ஒரு சில காவல் நிலையங்களில் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை ஆகையால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி பகுதி சமூக ஆர்வலர்கள் உசிலம்பட்டி துணை காவல் கண் காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு புகாரின் மீது உண்மை தன்மை கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கு உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவுறுத்தியதன் பெயரில் பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருவதாகவும் மேலும் ஏழை எளிய மக்கள் அவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி காவல் நிலையங்களில் கொடுத்த உடனே அந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படுகிறதா என உசிலம்பட்டி காவல் உட் கோட்டம் காவல் நிலையங்களுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த புகாரின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் உசிலம்பட்டி காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் காவல் துறையினரிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து பணியின் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஓய்வு எடுக்க விடுமுறை எடுத்து கொள்ளவும் அறிவுரை வழங்கி வருவதால் உசிலம்பட்டி காவல் உட்கோட்ட காவல் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அன்பாக பேசி அவர்கள் வழங்கும் மனுவை பெற்றுக் கொண்டு மனுவின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தங்களது பணியை நேர்மையான முறையில் சிறப்பாக பணியாற்றி வருவதால் பொதுமக்கள் பலரும் உசிலம்பட்டி காவல் உட்கோட்ட அனைத்து காவல் துறையினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி தன்னுடைய நேர்மையான பணியை செய்து பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் காவல்துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் தங்களது சுயலாபத்திற்காக நடக்காத செயலை நடந்ததாக தவறான நபர்களிடம் கூறி வருவதும் அதனால் ஒரு சில நபர்கள் தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொண்டு அந்த செய்தியை தவறாக பொதுவெளியில் வெளியிடுவது தான் வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

Related Articles

Back to top button