காவல் செய்திகள்

காவல்துறைக்கு சவாலாக இருந்து வரும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பழனி நகர டிஎஸ்பி!






திண்டுக்கல் மாவட்டம்,
பழனிக்கு  பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கோவில் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக தைப்பூசத்திற்கு பழனி கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருவதால் பழனி நகர் மற்றும் கோவில் அடிவாரப் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.


இதை சாதகமாக பயன்படுத்தி பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நகை மற்றும் பணம் பறிப்பு என சமூக விரோதிகள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த சவாலை சமாளிக்க குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க
பழனி நகர் பகுதி மற்றும் கோவில் மலை அடிவாரம் பகுதிகளில் 

கூடுதல் ஏடிஜிபி டேவிட் ஆசீர்வாதம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழனி நகர டிஎஸ்பி ஆகியோர்

ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பழனி நகர் பகுதி மற்றும் கோவில் அடிவாரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

தைப்பூசத்திற்கு முன்பே
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பழனி நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சம் இல்லாமல் சாமி தரிசனம் செய்து திரும்ப

50 லட்சம் மதிப்பீட்டில்
நவீன தொழில்நுட்பம் கொண்ட  4 மெகாபிக்சல் திறன்கொண்ட 290 சிசிடிவி கேமராக்கள்

அமைக்கப்பட்டு
முக்கிய இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு, 290 கேமராக்களில் பதிவு செய்யும் காட்சிகளை  கண்காணிக்க
பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில்
நவீன முறையில் அமைக்கப்பட்டிருந்த


காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு
கடந்த 9 ஆம்  தேதி


அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் பயன்பாட்டிற்காக
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


நவீன கேமராக்கள்
பழனி நகர் முழுவதும் உள்ள
முக்கிய வீதிகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சந்தைகள், கோயில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முக்கிய இடங்களும், இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும்.
இதில் குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை எளிதில் கண்டறியும் வகையில் நவீன முறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான தமிழ்க்கடவுள் இருக்கும் பழனி நகருக்கு
ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் உட்பட திருவிழாக்காலங்களில் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு
வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், வாகன போக்குவரத்தை சீராக அமைப்பதற்காகவும்,
நகர் முழுவதும் நவீன  தொழில்நுட்பத்துடன் கூடிய சுமார் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவான காட்சிகள் பாதுகாக்கப்படுகின்றன.
சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டின் சில விவரங்கள்:
காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது பதினெட்டு மாதங்களுக்குப் பாதுகாக்கப்படும்.
கேமராக்கள் பழுதடையும் பட்சத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பொறுப்பு நிர்ணயிக்கப்படும்.
காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள் பற்றிய சில தகவல்கள்:
சிசிடிவி கேமராக்கள், குறிப்பலைகளை வீடியோ கேமிராக்களின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தொடர்புபடுத்துவதாகும்.
சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மானிட்டருக்கு வெளிப்படையாக அனுப்பப்படுகின்ற குறிப்பலைகளைக் கொண்டவையாகும் . 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சமீபகாலாகுமாக குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.
இந்த சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் துரிதமாக செயல்படுவதால்  இனிமேல் வரும் காலங்களில்
பழனி நகர் மற்றும் பழனி கோவில் அடிவாரப் பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை முழுவதுமாக தடுத்து நிறுத்த முடியும் என பழனி நகர டிஎஸ்பி தனஜெயன் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இனிமேல் பழனி கோவிலுக்கு குடும்பத்துடன் வரும் பெண் பக்தர்கள் அச்சம் இல்லாமல் சாமியை தரிசனம் செய்து செல்லலாம் என உறுதியளித்துள்ளார்.

Related Articles

Back to top button