காவல்துறை பேராதரவுடன் களைகட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ! 24 மணி நேரமும் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை!
செயல்படாத எஸ்பி தனி பிரிவு காவல்துறை!
நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வருவதும் அது சம்பந்தமாக ரகசிய தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து வருகின்றனர். ஆனால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
ஏழை எளிய சாமானிய நடுத்தர கூலித் தொழிலாளிகள் லட்சாதிபதி ஆகலாம் என தங்களது பேராசை காரணமாக சுரண்டல் லாட்டரி (ஒரு நம்பர் மூன்று நம்பர் லாட்டரி மற்றும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி அந்த கடனை கட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து
அதனால் தற்கொலை செய்து கொள்ளும் சில சம்பவங்களும் தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருவதை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.
அதனால் தான் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்
குடும்பங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நல்ல
எண்ணத்தோடு தமிழக அரசு தடை தடை விதித்தும் அந்தத் தடையை காவல்துறையினர் காற்றில் பறக்க விட்டு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக காவல்துறையினர் உடந்தையாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.


குறிப்பாக
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் உட்கோட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது .
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்ல நேரம், தங்கம்னு என பலவிதமான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சூரக்காடு,மறவம்பட்டி பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக’ தங்கு தடையின்றி நடந்து வருவதாகவும்
குறிப்பாக இந்த விற்பனை காவல்துறையினரின் பேராதரவுடன் தினமும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கறம்பக்குடி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை சட்டவிரோதமாக சமூக விரோதிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த லாட்டரி விற்பனை காலை முதல் மதியம் வரை, குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. உங்க தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஆட்டோ டிரைவர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள், சில சலுான் கடைக்காரர்கள், மார்க்கெட் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் என குறிப்பிட்ட சிலரை மட்டுமே, குறிவைத்து விற்கப்படுகிறது.ரெகுலராக வாங்குபவர்களுக்கு மட்டும், லாட்டரி சீட்டுடன், ரிசல்ட் ஜெராக்சும் வழங்கப்படும். புதிதாக லாட்டரி சீட்டு வாங்க வேண்டுமெனில், யாராவது சிபாரிசு செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து, முறையாக சாப்பாடு கூட இல்லாமல் தவிக்கும் வாடகை வாகன ஓட்டிகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி, தினமும் நுாற்றுக் கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். இது தவிர வடமாநில லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்கிறோம் என சிலர் துண்டு சீட்டுகளில் மூன்று முதல் 6 இலக்க எண்களை எழுதி கொடுத்து விற்பனை செய்கின்றனர். இதனை ரூ. 60 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.அதிர்ஷ்டம் விழும், ஒரே நாளில் லட்சாதிபதி ஆகலாம் என்ற பேராசையில் பல கூலித் தொழிலாளர்கள் வாங்குகின்றனர். இது போன்ற லாட்டரிகளை வாங்குவதில் கூலி வேலை செய்யும் பெண்களும் வாங்குவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இதற்காக தாங்கள் கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் பெரும் தொகையை செலவிடுகின்றனர்.
சட்ட விரோதமாக துண்டு சீட்டு’ லாட்டரி விற்பனையால் பலரும் பணத்தை இழப்பதால் குடும்பங்களில் அமைதி கெட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையம்
கறம்பக்குடி நகரின் உள் கடைவீதி மற்றும் கறம்பக்குடி புதுக்குளம்முக்கிய பகுதிகளில் சிலர் சட்டவிரோதமான இந்த செயலை பெரிய வேலைவாய்ப்பாக நம்பி செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் கேரளா மாநிலம் சென்று வேலை செய்வதாக வீட்டில் கூறிவிட்டு, சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் . இதற்காக கறம்பக்குடி காவல் நிலையத்துக்கு லாட்டரி சீட்டு விற்பனையாளர்களிடம் இருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை மாமூல் போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உளவுத்துறை காவலர்கள் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைத் தாராளமாக விற்க அனுமதித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்களிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டால் காவல் நிலையத்துக்கு வாரா, வாரம் மாமூல் போகுது .உன்னால முடிஞ்சத செஞ்சுக்கன்’னு சமூக ஆர்வலர்களை மிரட்டும் தோணியில் பேசுகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாகத் தடை செய்வதுடன், லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கும் காவலர்கள் மீது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

அது மட்டுமில்லாமல் கறம்பக்குடி மற்றும் அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் பகுதியில் கஞ்சா மற்றும் அரசு மதுபானக்கூடங்களில் காலை முதல் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை 24 மணி நேரமும் சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மறைமுகமாகும் நேரடியாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழை எளிய கூலி தொழிலாளிகளின் குடும்பங்களின் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விற்பனைக்கு குழந்தையாக செயல்படும் காவல்துறையினர் மீதும் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது தான் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எது எப்படியோ
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்புப் பிரிவில் உள்ள காவலர்கள், மாவட்டத்தின் சட்ட ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களை விசாரித்தல், மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
இந்தப் பிரிவினர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு, குறிப்பிட்ட சில சிறப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக காவல் கண்காணிப்பாளரின் கீழ் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் காவலர்களை மேற்பார்வையிடும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.
ஆனால் இது எல்லாம் தற்போது கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல் துறையினரின் செயல்பாடுகள்
நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் வகையில் ஒரு சில கருப்பு ஆடுகள் தங்களது சுயலாபத்திற்காக
காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அதேபோல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாக செயல்பட்டு வரும் கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து களை எடுக்க
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை நியமித்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல்பாட்டை.




