காவல் துறையினருக்கு சவாலாக கஞ்சா விற்பனை செய்து வந்த
9 பேரை தட்டி தூக்கிய பழனி காவல் உட்கோட்ட காவல் துறையினர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி

பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின்படி

பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர்
பழனியை சுற்றியுள்ள பகுதிகளில்

கஞ்சா விற்பனை செய்து வரும் நபர்களை களையெடுக்க தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது

பழனி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3, பேறும்,

ஆயக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3, பேறும்,

அடிவாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 2, பேறும்

, பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபரும் மொத்தம்

ஒன்பது பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
அதில் ஒருவர் தப்பிக்க முயற்சி செய்யும் பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டு பின்பு காவல் நிலையம் அழைத்து வந்து ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.