மாவட்டச் செய்திகள்

குட்டைகளில் வண்டல் மண் கடத்தல் ! கண்டும் காணாமல் இருக்கும் உடுமலை வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பார்களா!?  புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

திருப்பூர் மாவட்ட புதிய தா.கிறிஸ்துராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மாவட்டங்களில் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக பயன்படுத்த விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது .அதில்
ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.


இந்த அறிவிப்பில், “ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று எடுத்துக் கொள்ள தொழில் துறை, நீர்வள ஆதாரத் துறையின் ஒத்துழைப்புடன், விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினைத் திறம்பட மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், விவசாய நிலங்களின் வளம் கூடி, மகசூல் அதிகரிப்பதுடன், ஏரிகள், குளங்களின் நீர் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும்” என்பதால்.
இது தொடர்பாக, தொழில் துறையால் அரசாணை வெளியிடப்பட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதன்படி நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், ஏரி மற்றும் குளங்கள் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இலவசமாக மண் எடுத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.20 நாட்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழினைப் பெறத் தேவையில்லை.

இந்த அரசின் சட்ட திட்டங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தற்போது உடுமலை தாலுக்கா தளி காவல் நிலையம் உடுமலை காவல் உட்கோட்டம் எல்லைக்குட்பட்ட பெரியவாளவாடி
கிராமத்தில்  சப்ட்டியர் குட்டை
மற்றும் க ச 250 நடுகுட்டை ஆகிய குட்டைகளில் வண்டல் மண்  கிரவல்மண் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்களை வைத்து கனரக வாகனங்களில் கடத்தி செல்லும் அதிர்ச்சி வீடியோ வெளிவந்துள்ளது.

இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கூறிய போது
விவசாயிகள் அனுமதிகோரி 2023 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த விவசாயிகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி
இருந்தனர்.
சங்கத்தின் சார்பாக
விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி பேசி முடிவெடுக்கப்பட்டது.  ஆனால் இது நாள் வரையும்  வருவாய் துறை சார்பில் எவ்வித பதிலும் இல்லாமல் உள்ளது .
தற்போது மேற்கண்ட இடத்திலுள்ள  குட்டைகளில்
எவ்வித அனுமதியும் இன்றி
கிரவல்மண் எடுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளிவந்துள்ளது.

உடுமலைப்பேட்டை பெரியவாளவாடி
கிராமத்தில்  சப்ட்டியர் குட்டை
மற்றும் க ச 250 நடுகுட்டை

இந்த சட்டவிரோதமான செயலுக்கு உடுமலைப்பேட்டை வருவாய்த்துறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர்
கண்டுகொள்ளாமல் உள்ளனர்  .

கிராவல் மண் எடுக்க சமூக ஆர்வலர்கள் என்றபெயரில் ஆட்சேபனை தெரிவித்து வந்தவர்களே தற்போது  முறைகேடாக
சட்டவிரோதமாக மண் எடுத்து
விற்பனை செய்து
வருகின்றனர் என குற்றச்சாட்டை வைத்துள்ளனர் விவசாய சங்க நிர்வாகிகள்.விவசாயிகளுக்கு அதிக விலைக்கு  மண் மற்றும் கிராவலை விற்று வருவதாகவும்
குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்
விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தும்
வருவாய் துறை சார்பில் ஆட்சேபனை செய்து வருவதாகவும் விவசாய சங்கம் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சட்டவிரோதமாக குட்டைகளில்
மண் எடுத்து விற்பனை செய்து வருபவர்கள் மீது உடுமலை வட்டாட்சியர் மற்றும்  கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேர்மையான அதிகாரிகளை உடுமலைப்பேட்டை வருவாய்த்துறை காவல்துறையில் நியமிக்க வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல்
தமிழ்நாடு அரசின் அரசாணைபடி விவசாயிகள்
அனைவருக்கும்.
வண்டல்மண் கிரவல்மண் கிடைக்கும் அடிப்படையில் அனுமதி வழங்க
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த தலைவர்
எஸ்ஆர்மதுசூதனன்
மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கியுள்ளதாக தகவல்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு பல்லடம் விவசாய சங்கங்கள் சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கனிமவள கடத்தல் சம்பந்தமாக வீடியோ ஆதாரங்களை கொடுத்தனர். உடனே மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறை உதவி இயக்குனரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இந்த அதிரடி நடவடிக்கையால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்று உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமான கனிம வளம் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button