குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவரும் ஊர்க்காவல் படை வீரர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்!கண்டுகொள்ளாத மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்!?கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்த அதிர்ச்சி சம்பவம்!!
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி சீதா அதிர்ச்சி சம்பவம்.
தமிழக அரசு பாலியியல்
ரீதியான குற்றங்களை தடுக்க எங்வளவே விழிப்புணர்வு ஏற்படுத்தியும்
திருந்தாத ஜென்மங்கள்
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு பெண் குழந்தைகளுடன் தாய் தீ குளிக்க முயற்சி வேதனை அளிக்கிறது!
தன்னுடைய குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த சகாய லிசி சாந்தினி 34 என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மூன்று பேரையும் மீட்டனர்.
ஊர்காவல்படையை சேர்ந்த ஆன்றோ உதயம் 33 மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறிய அந்த பெண் நாங்கள் அப்பாவிகளாக இருப்பதால் எங்களுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் ஆள் பலம் மற்றும் பண பலம் மிக்கவராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கஅதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இதனால்தான் நாங்கள் உயிருடன் இருப்பதை விட மரிப்பதே மேல் என நினைத்து சாகத் துணிந்தோம் எங்களுடைய சாவிலாவது எங்களுக்கு நீதி கிடைக்கும் என என்னி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
எது எப்படியோ பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்து உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று தற்கொலை முயற்சி வரை செய்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்!