Uncategorized

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு 3000 ரூபாய் லஞ்சமா!? லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்
மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள்! பாண்டியராஜபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகி மீது பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி 3000 ரூபாய் லஞ்சமா!?லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்
மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம்! பாண்டியராஜபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகி மீது பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!


  வாடிப்பட்டி .டிச .6      

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது இந்த வங்கியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பொதுமக்கள் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் நகைக்கடன் மற்றும் சுய உதவிக் குழுக்கள் பெற்றிருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என  தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது . அதே போல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றவுடன் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நகை கடன் பயிர் கடன் மற்றும் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் உதவிகளை  ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அரசின் இந்த உத்தரவின் அடிப்படையில் பாண்டியராஜபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அந்தப் பகுதி மக்கள் வாங்கி இருந்த நகை கடன்கள் வங்கி நிர்வாகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது .
ஆனால் நகைக்கடன் வாங்கிய மகளிர் சுய உதவி குழுவில் உள்ள  அனைவருக்கும் தள்ளுபடி செய்யாமல் அதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர் .
உதாரணமாக வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பகுதியை சேர்ந்த அங்கம்மாள் என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார் இவர் பாண்டியராஜபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கியில் இரண்டரை பவுன் நகை வைத்து கடன் பெற்று இருக்கிறார். மேலும் சுய உதவி குழுவில் இணைந்து அதிலும் கடன் பெற்று இருக்கிறார். அரசு தள்ளுபடி அறிவித்ததும் அங்கம்மாள் வங்கி நிர்வாகத்தை அணுகி அவர் பெற்றிருந்த சுய உதவி குழு மூலம் கிடைத்த கடனை தள்ளுபடி செய்ய கேட்டிருக்கிறார்.
அதற்கு வங்கி நிர்வாகம் உங்களது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவே சுய உதவி குழு மூலம் பெற்ற கடனை முறையாக செலுத்தும் படி அறிவுறுத்தியுள்ளனர் .
ஆனால் அவருக்கு எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை .
மீண்டும் அவர் வங்கியை அணியை விசாரித்த போது நாங்கள் தலைமை வங்கிக்கு அனுப்பி வைத்த தள்ளுபடி செய்தவர்களின் பட்டியலில் உங்கள் பெயரை இணைத்து  அனுப்பினோம் .
ஆனால் அரசிடம் இருந்து வந்த தள்ளுபடிக்கான பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனவே நீங்கள் பணத்தைக் கட்டி உங்கள் நகையை திருப்புங்கள் அல்லது அதற்கான வட்டியை கட்டி மறு அடமான வைத்துக் கொள்ளவும் என்றும் சுய உதவி குழு மூலம் பெற்ற கடனை விரைவாக பணம் செலுத்தி கணக்கில் முடியுங்கள் என வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
வங்கி நிர்வாகம் கூறியபடி அந்தப் பெண் நகைக்கு வட்டியை கட்டி மறு அடமானம் வைத்திருக்கிறார்

சுய உதவி குழு மூலம் பெற்ற கடனை  தள்ளுபடி செய்யாமல் கடனை கட்டி கணக்கை முடிக்க வங்கி நிர்வாகம் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
பொதுவாகவே சுய உதவிக் குழுவில் உள்ள அனைத்து பெண்களும் வங்கி கடன் பெறுவது வழக்கம் அந்த அடிப்படையில் இந்தப் பெண் இணைந்திருந்த சுய உதவி குழுவில் 12 பெண்கள் உறுப்பினர்கள் இதில் பத்து பெண்களின் கடன் தள்ளுபடி செய்து  ரத்து செய்யப்பட்டுள்ளன .
ஆனால் இவரது கடன் மட்டும் ரத்து செய்யப்படவில்லை இந்தக் குழுவில் ஒரு அரசு ஊழியர் இருந்ததால் அவரது வங்கி கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை.
அரசாணை வரப் பெற்றவுடன் வங்கியில் பணியாற்றும் ஒரு பணியாளர் தள்ளுபடிக்கு தகுதியானவர்களை வங்கிக்கு அழைத்து அவர்களிடம் கையூட்டு பெறுவது குறித்து பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த அங்கம்மாளிடம் 3000 ரூபாய் கேட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இவ்வாறு அவரிடம் கேட்டவுடன் அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை தள்ளுபடி செய்யுங்கள் பிறகு தருகிறேன் என்று கூறியிருக்கிறார் .
பணம் கொடுத்தால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என கண்டிப்பாக கூறி இருக்கிறார் .
அந்த வங்கி பணியாளர் இவர் கூறிய இந்த கூற்று உண்மையா என்று விசாரித்த பொழுது பரவலாக தள்ளுபடி பெற்ற அனைவருமே அவர்கள் பெற்ற தள்ளுபடி கடனுக்குரிய தொகைக்கு ஏற்ப கையூட்டு பணம் கொடுத்ததாக தகவல் வந்துள்ளது .
உதாரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஒருவரின் தந்தை இந்த வங்கியில் நகை கடன் பெற்று இருக்கிறார் அவரிடம் அந்த நகை கடனை தள்ளுபடி செய்ய 2000 ரூபாய் கையூட்டு கேட்டுள்ளார் அந்த வங்கி பணியாளர் அவரும் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் தனது மகனிடம் இதைச் சொல்லியே 2000 ரூபாய் வாங்கி அந்த வங்கி பணியாளரும் கொடுத்து தள்ளுபடி பெற்றிருக்கிறார்.
அரசு வேலை எளிய மக்களின் மீது கருணை கொண்டு அவர்கள் பெற்ற கடன்களை ரத்து செய்ய முன் வந்தாலும் அதையும் இது போன்ற சிலர் தங்களுக்கு சாதகமாக்கி பணம் பார்த்து உள்ளனர் .
இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்கு அரசு கொடுக்கும் சலுகை கூட விலை பேசி விற்கும் இவர்கள் மீது நியாயமான நேர்மையான அதிகாரியை கொண்டு விசாரணை செய்து
தவறு செய்தவர்கள் மீதும் அதற்கு துணை போன வங்கி பணியாளர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கையூட்டு கொடுக்காததால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் அங்கம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
ஏழை எளிய பொதுமக்களுக்கான திட்டங்களில் ஒன்றான கூட்டுறவு வங்கி  கடன் தள்ளுபடி உரிமையை உடனே வழங்க அரசு முன் வர வேண்டும் .

Related Articles

13 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button