மாவட்டச் செய்திகள்

கேரளாவுக்கு கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம் கேட்கும் பொள்ளாச்சி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !?

மதுரையை ஆட்சியாளர் சர்ச்சையை தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருட்டு மண் கடத்தும் மாபியா கும்பலிடம் 5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதிர்ச்சித் தகவல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக திருட்டுகிராவல் மண் எடுத்து கேரளாவுக்கு கடத்தி சென்ற டிப்பர் லாரியியை பொள்ளாச்சி காவல்துறையினர் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு கிராவல் மண் எடுத்துச் சென்ற டிப்பர் லாரி

பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் சென்னைக்கு அலுவல் பணியாக சென்று இருப்பதாக தகவல்.

ஆகையால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் தற்போது அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.
சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் இதற்கு முன்பு பல பலதுறைகளில் பணி செய்தவர் ஆவார்.

தற்போது பொள்ளாச்சி காவல் துறையினரால் பிடித்து பறிமுதல் செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட டிப்பர் லாரியை சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து டிப்பர் லாரியை விடுவிக்க டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பேரம் பேசி வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

தற்சமயம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் திருட்டுத்தனமாக கிராவல் மண் கேரளாவுக்கு கடத்திய போது பறிமுதல் செய்த டிப்பர் லாரியை விடுவிக்க திருட்டு மணல் கடத்தும் மாபியா கும்பலிடம் நேர்முக உதவியாளர் லஞ்சம் கேட்டு வருவது மிகவும் வேதனையான செய்தி ஆகும் என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எது எப்படியோ சில நாட்களாக திருட்டுத்தனமாக கிராவள் மண் கேரளாவுக்கு கடத்துவதாக பல புகார்கள் சமூக ஆர்வலர்கள் கொடுத்து வந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணியிடமாற்றம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே கடத்தல் புகார் பற்றி தகவல் கொடுக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் நேர்முக உதவியாளர்கள் இதுபோன்று சட்டவிரோதமாக மணல் கடத்தும் மாபியாக்கள் உடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இதே போல் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் இரண்டு பேர் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் கொடுத்தார் நேர்முக உதவியாளர் இரண்டு பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து தற்போது பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொள்ளாச்சி மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடாசலத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button