காவல் செய்திகள்

கொள்ளிடம் அரசு மணல் கிடங்கில் போலி அனுமதி சீட் வைத்து சட்ட விரோதமாக மணல் கடத்தும் மாஃபியா கும்பல்!! துணைப் போகும் ஆணைக்காரன் சத்திரம் காவல் உதவி ஆய்வாளர்!!?
நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்!?

சமீபகாலமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக வீடியோ ஆதாரங்களுடன் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கையாக மதுவிலக்கு காவல்துறையினர் 16 பேரை மற்ற மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தார். அதில் ஒரு ஆய்வாளர் ஒரு காவலர் உட்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்தார். அதுமட்டுமில்லாமல் சீர்காழி காவல் நிலையத்தில் பணி செய்த காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் கள்ளச்சாராயம் இருக்கும் பெண்மணியிடம் செல்போனில் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து தற்போது சீர்காழி ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஒரு சில மாதம் முன்பு அரசு மணல் விற்பனை கிடங்கு அமைக்கப் பட்டது. அங்கு ஆன்லைன் பதிவு முறையில் மணல் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் ஆன்லைன் பதிவு செய்ததாக போலி அனுமதி சீட் வைத்து சட்டவிரோதமாக மணல் கடத்தல் மாஃபியாக்கள் மணலை கடத்துவதாக தகவல் வந்துள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .அதுமட்டுமில்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை சட்டவிரோதமாக நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

( தற்போது மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் சார்பில் மணல் குவாரி அமைத்து மணல் குவாரி அருகே மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இந்த மணல் கிடங்கு அமைப்பதை தடை செய்ய விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு உடந்தையாக யார் இருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வந்துள்ளது.

மணிகண்ட கணேஷ்
காவல் உதவி ஆய்வாளர்

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டமாக இருந்தபோது சீர்காழி ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையத்திற்கு 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர் மணிகண்ட கணேஷ். (இவர் சொந்த ஊர் திருவாரூர்.) உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த நேரத்தில் கள்ளச்சாராயம்,கஞ்சா, போலி மது பாட்டில் விற்பனை மணல் கடத்தல் , தடை செய்யப்பட்ட லாட்டரி, கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம் செய்யும் மாஃபியாக்களுக்கு சிம்ம சொப்பனமாக நேர்மையான காவல் அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது இவரை பாராட்டாத பொதுமக்கள் யாருமே இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால் 2014 ஆண்டிற்கு பிறகு அந்த மாவட்டத்தில் உள்ள அரசியல் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியுள்ளார் என்றும் அதன்பின்பு மணல் மற்றும் சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகள் கொடுக்கும் மாமூல் பணத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையான காவல் அதிகாரியாக இருந்த மணிகண்ட கணேஷ் பொதுமக்களிடம் தன் மேலுள்ள நம்பிக்கையை இழந்து வந்துள்ளார் என்று கூறுகின்றனர்.. அதன் பின்பு ஆளும் அரசியல் கட்சி முக்கியப் புள்ளியின் ஆதரவுடன் 2011 ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை 8ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்திய மணிகண்ட கணேஷ் முதல் மூன்றாண்டுகள் நேர்மையான காவல் அதிகாரியாகவும் அதன் பின்பு ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில் பல புகார்கள் குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப் படுகிறது.அதன் பின்பு பணியிட நாகபட்டினம் மாற்றம் செய்யப்பட்டார் என்று கூறுகின்றனர்.

2019/2020 ஆண்டு வரை நகபட்டினம் மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவில் இரண்டு வருடம் பணியில் இருந்ததாக தெரிகிறது.

(28/12/2020அன்று தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்தது. அப்போது சீர்காழி ,மயிலாடுதுறை ,குத்தாலம் ,கொள்ளிடம் ,தரங்கம்பாடி ஐந்து தாலுகா உள்ளடக்கிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவானது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார்கள். அப்பொழுது இருந்த அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போலி மதுபாட்டில்கள் வியாபாரம் அமோகமாக விற்பனை நடந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் IPS பொதுமக்கள் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.அதன்பின்பு தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களின் புகாரின் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அனைவரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டது மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.)

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிறப்பு காவல் படை துணைக் காவல் கண்காணிப்பாளர் குழுவிற்கு ஆறு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் சீர்காழி வந்தவுடனே ஏற்கனவே தொடர்பில் இருந்த அரசியல் முக்கிய புள்ளிகள் மற்றும் மணல் மாஃபியாக்களுக்கு மற்றும் சாராய வியாபாரி களுடன் தொடர்பு மீண்டும் ஏற்பட்டதாகவும் அவர்கள் ஆதரவுடன் தற்போது ஆணைகாரன் சத்திரம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் இருக்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு காரணம்

ஒரு காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக அதே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் என்றாலே சமூக ஆர்வலர்கள் பலர் சந்தேகக் கேள்விகளை எழுப்புவர்.
ஆனால்
இதற்கு முன்பு ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் உதவியாளராக மணிகண்ட கணேஷ் பணியில் இருந்தபோது மணல் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் கணேஷ் இருந்தார் என்ற குற்றச்சாற்று இருக்கும் பட்சத்தில் தற்போது அதே காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளதை அரசியல் முக்கிய புள்ளிகள் உதவியுடன் தான் இருக்கும் என்ற தகவல் வந்துள்ளது.
○எது எப்படியோ ஒரு காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக எட்டு வருடங்கள் பணிபுரிந்த காவல்நிலையத்தில் மீண்டும் அதே காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக மணிகண்ட கணேஷ் பணியில் சேர முனைப்பு காட்டியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளை மற்றும் சாராய வியாபாரம் செய்யும் சமூக விரோதி களுக்கு ஆதரவாகதான் இருக்க முடியும் என்றும் நேர்மையான அதிகாரியாக பணி செய்ய முடியாது என்றும் இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button