காவல் செய்திகள்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடித்து மற்றொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்!?
நடவடிக்கை எடுக்காத சமையநல்லூர் மகளிர் காவல் ஆவ்வாளர் !!
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா !?.

உயிருடன் இருக்கும்  மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டக்காமக்கொடூரன் மீது
நடவடிக்கை எடுக்காத சமையநல்லூர் மகளிர் காவல் ஆவ்வாளர்!!
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா !?.

பாலகிருஷ்ணன் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போட்டோ மற்றும்இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண்ணுடன் புகைப்படம்
கிரேசி சோபியா பாய்
(முன்னாள் ஆயவாளர்)
அனைத்து மகளிர் காவல் நிலையம் சமயநல்லூர். மதுரை மாவட்டம்



சிவகங்கை மாவட்டம்  கண்டாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த முத்துக் கருப்பன் மகன் பாலகிருஷ்ணன் ஆவார். மூன்றாண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி ஊரைச் சேர்ந்த மோனிகா வயது 22( த/பெ சேகர் ) என்றப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.மூன்று வயதில் மகன் உள்ளான்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்தி விட்டு தான் வீட்டுக்கு வருவாராம்.இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆறுமாதம் முன்பு மோனிகா தன் கணவன் பாலகிருஷ்ணன் மீது சமயநல்லூர் காவல் நிலையத்தில் அப்போது இருந்த காவல் ஆய்வாளர் கிரேசி சோபியா பாய் அவர்களிடம்புகார் கொடுத்துள்ளார் . அதன்பின்பு காவல் ஆய்வாளர் புகார் கொடுத்த பெண் வீட்டில் உள்ளவர்களை அழைத்து இது போன்று அடிக்கடி நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் நாங்கள் எதுவும் செய்ய முடியாது நீங்கள் தான் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று கூறி புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் திட்டி அனுப்பி விட்டுள்ளார். அதன் பின்பு பாதிக்கப்பட்ட பெண் மோனிகா செய்வதறியாது  தன் கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை அறிந்துகொண்ட மோனிகாவின் கணவர் பாலகிருஷ்ணன் மோனிகாவின் குடும்பத்தினரிடம் வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு இனிமேல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரமாட்டேன் என்று காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு தன் மனைவியுடன் ஒழுங்காக வாழ்கிறேன் என்று கூறிவிட்டு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல வீட்டுக்கு சென்ற  பாலகிருஷ்ணன் மது அருந்தி விட்டு மறுபடியும் வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பின்பு மோனிகா தன் தாய் வீட்டிற்கு மூன்று வயது குழந்தையுடன் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்பு பாலகிருஷ்ணன் தன் மனைவி மோனிகா கைபேசிக்கு தொடர்பு கொண்டு அசிங்கமாக திட்டி பேசியதாகவும் அதன் பின்பு மோனிகாவின் தம்பி செல் நம்பருக்கு அழைத்து அவரையும் அசிங்கமாக திட்டி அவர் குடும்பத்தில் அனைவரையும் மது போதையில் அசிங்கமாக திட்டுள்ளார்.

அதன் பின்னர் பாலகிருஷ்ணன் தன் முதல் மனைவி மோனிகா இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி மற்றொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து அந்த திருமண போட்டோவை தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்தக் கண்ணீர் அஞ்சலி போட்டோ மற்றும் இரண்டாவது திருமணம் செய்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோனிகா தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா தேவி அவர்களிடம் மோனிகா 24/04/22 அன்று புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உமா தேவி உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இரண்டாவது திருமணம் செய்துள்ள பாலகிருஷ்ணனை அழைத்து விசாரணை செய்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் வந்துள்ளது.

இது சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் மோனிகா உயிருடன் இருக்கும் என்னை இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி இரண்டாவது திருமணம் செய்துள்ள கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியோ ஒரு பெண் தன் கணவரால் துன்புறுத்தப் படுகிறேன் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் உடனே மனைவியை துன்புறுத்தும் நபரை அழைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே தான் பெரும்பாலான கணவர் மனைவி பிரச்சனையில் நீதிமன்றம் வரை செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல்தான் பாதிக்கப்பட்ட இந்த மோனிகா என்ற பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இதுபோன்று மனைவி இறந்ததாக போலி நாடகம் ஆடி இரண்டாவது திருமணம் செய்தவரை சட்டப்படி விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தயங்கும் மதுரை மாவட்டம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா தேவி அவர்கள் இரண்டாவது திருமணம் செய்துள்ள போதை ஆசாமி பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பாதிக்கப் பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

எனவே சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உமா தேவி  மீது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல காவல் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button