2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடாமல் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சோழவந்தான் பேருந்து நுழைவு வாயில் அலங்கார வளைவில் பதிக்கப்பட்ட டைல்ஸ் உடைந்து விழுவதால் அச்சத்தில் பயணிகள்! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டம், சோழவந்தானில்பழைய பேருந்து நிலையத்தை இடித்து மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. சோழவந்தான் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வந்தான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கொரியர் கணேஷ் உட்பட ஆறு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் சோழவந்தானில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் பணி முழுமை அடையாத நிலையில் திமுக ஆட்சி 2021 வந்து பின்பு 100% பணிகளை முடித்து 2024 ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடங்களும் திறக்கப்பட்டது . எது எப்படியோ திட்டமிடாமல் தரம் இல்லாமல் கட்டப்பட்ட சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் போதிய பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லாத நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டுமில்லாமல் பேருந்து நிலையத்திற்குள் கட்டப்பட்டுள்ள வணிக வளாக பயன்படுத்தாத நிலையில் வணிக வளாக மதில் சுவர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது . குறிப்பாக பேருந்து நிலையத்தின் இரு புறங்களிலும் உள்ள நுழைவு வாயில் அலங்கார வளைவுகளில் உள்ள டைல்ஸ் திடீர் திடீரென அடிக்கடி பெயர்ந்து விழுவதால் எந்நேரமும் பொது மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர் 19/09/2024 வியாழக்கிழமை பேருந்து நிலைய கிழக்கு புறத்தில் உள்ள நுழைவு வாயிலில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் நுழைவு வாயில் அருகே பேருந்து மற்றும் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது ஒருவேளை பொதுமக்களோ பேருந்தோ இருந்திருந்தால் கண்டிப்பாக உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் . திட்டமிடாமல் தரமற்ற முறையில் பல கோடி ரூபாய் செலவில் மற்ற நிலையில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் கட்டிடம் மற்றும் நுழைவு வாயில்களை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல பேருந்து பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் வணிக வளாக கட்டிடங்களை முழுமையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் பேருந்து நிலையத்தை முழுவதுமாக சீரமைத்து பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு விடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை கொடுத்துள்ளனர்