கோமாவில் இருக்கும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்னவாளவாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதாஸ் தந்தை பெயர் மௌனசாமி என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

அந்த மனுவில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்ன வாளவாடி கிராம நிர்வாக அலுவலர் உட்பட்ட பகுதியில் உள்ள 111/ A2A சர்வே எண்ணில் தாயார் பெயரில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அந்த நிலத்தை தன்மகன் முரளி தாசுக்கு உயில் எழுதிக் கொடுத்ததாகவும். அந்த நிலம் கூட்டு பட்டாவில் சேர்ந்து இருப்பதால் ஒரு ஏக்க நிலத்திற்கு தனியாக சப் டிவிஷன் செய்து தனிப்பட்ட வழங்குமாறு 2011 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 15 முறை

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் உடுமலை வட்டாட்சியர் சப் டிவிஷன் செய்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் நிலத்தை சப் டிவிஷன் செய்து கொடுக்க உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு உத்தரவிடமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணையில் ஒரு மாதத்தில் சம்பந்தப்பட்ட நபரின் நிலத்தை அளந்து சப் டிவிஷன் செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை உடுமலை வட்டாட்சியர் மட்டும் உடுமலை கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்பு நிலத்தை அளப்பதற்கு உடுமலை வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி குறிப்பிட்ட தேதியில் நிலத்தை அளந்தனர். ஆனால் சப் டிவிஷன் செய்து பட்டா வழங்காமல் உடுமலை வட்டாட்சியர் கூட்டு பட்டாவில் இருக்கும் நபர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் சப் டிவிஷன் செய்து பட்டா வழங்க முடியாது என கூறிவிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காத உடுமலை வட்டாட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்
நுகர்வோர் நீதிமன்றத்திலும் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆகையால் 15 வருடங்களாக ஒரு நிலத்தை அளந்து சப் டிவிஷன் செய்து பட்டா கொடுக்காமல் உடுமலை வட்டாட்சியர் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் ஆகியோர் அலைக்கழிப்பு செய்வதால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே நீதிமன்ற உத்தரவை மதிக்காத உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் அது மட்டும் இல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்கொலை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை படித்துப் பார்த்த திருப்பூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற முதல் நாளே தற்கொலைக்கு அனுமதி கேட்டு கொடுத்த மனுவிற்கு என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் மாவட்ட ஆட்சியர் இருந்துள்ளார்.
நிலத்தை அளந்து சப் டிவிஷன் செய்து கொடுக்க உத்தரவிடுவாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இல்லை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கொடுப்பாரா? இல்லை 15 வருடமாக அலைக்கழிக்கப்பட்ட உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் மீது ரீதியாக நடவடிக்கை எடுப்பாரா !?
இல்லை இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் போல் கண்டும் காணாமல் கடந்து போவாரா என்பதை
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.