கோவில் செயல் அலுவலரின் அலட்சியப் போக்கால் திருமையம் பைரவர் கோவில் உண்டியலில் இருந்த பல லட்சம் ரூபாய் கொள்ளை !
புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறையின் செயல் அலுவலரின் அலட்சியப் போக்கால் கொள்ளை போன திருமையம் பைரவர் கோவில் உண்டியல் பணம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் கீழே அமைந்திருக்கும் காவல் தெய்வமான கோட்டை காலபைரவர் ஆலயத்தில் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலுள்ள சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும் கோவில் வளாகத்தில் ஆலயத்தின் காவலாளி இருக்கும் பட்சத்தில் எப்படி கோவில் உண்டியல் உடைக்கப் பட்டு பணம் கொள்ளையடிக்க பட்டது என்று இது சம்மந்தாக நாம் விசாரணையை தொடங்கினோம்.
அதில் அப்பகுதி மக்கள் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தனர்.
உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போவதற்கு 20 தினங்களுக்கு முன்பே கால பைரவர் கோவிலின் உண்டியல் நிரம்பி விட்டதாக புதுக்கோட்டை திருக்கோகரணம் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். ஆனால் கோவிலின் செயல் அலுவலர் முத்துராமன் உண்டியலில் உள்ள பணத்தை எடுக்க எந்தவித நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக இருந்துள்ளார்.
உண்டியல் பணம் கொள்ளையடிக்கும் முன்பே சில தினங்களாக அப் பகுதி பொதுமக்கள் மத்தியில் ஆலயத்தின் உண்டியல் நிரம்பி வழிகிறது என்ற தகவல் காட்டு தீ போன்று பரவியதாகவும். சில சமூக விரோதிகள் இந்த உண்டியலில் பணம் நிரம்பி இருப்பதை தகவல் அறிந்து திட்டமிட்டு ஆலயத்தில் உள்ள உண்டியலின் பூட்டை உடைத்து திருடி சென்றதாகவும் அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போறதுக்கு முன்பே இந்து சமய அறநிலைத்துறையின் அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைபிடிக்காமல் கவனமாக செயல்பட்டு இருந்தால் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பல லட்ச ரூபாய் கொள்ளை போகாமல் தடுத்து இருக்க முடியும் .இப்படி பல லட்ச ரூபாய் உண்டியல் பணம் திருடு போனதுக்கு அதிகாரிகளின் கவனக் குறைவுதான் காரணம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் காலபைரவர் ஆலயத்தில் அருகிலே உள்ள தேங்காய் பழம் கடை விற்பனை செய்யும் கடையை 5ந்து வருடங்களாக ஒரே தனி நபர் மட்டும் நடத்தி வருவதாகவும் இதனால் இந்து சமய அறநிலைத்துறைக்கு 20 லட்சம் வரை கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போனதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் .தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையைத் துறைக்கு சொந்தமான ஆலயத்தில் நுழைவு வாயிலில் உள்ள தேங்காய் பழம் பூ விற்பனை செய்யும் கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக பொது ஏலம் விடப்பட்டு அதிகத் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு தேங்காய் பழம் பூ விற்பனை செய்யும் கடையை ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் ஏலம் எடுத்த நபருக்கு வழங்கப்படுவது வழக்கம். இது தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள வழக்கம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆனால் புதுக்கோட்டை திருமயம் பைரவர் கோவில் உள்ள கடை மற்றும் கடந்த ஐந்து வருடங்களாக ஏலம் விடப்படாமல் ஒரே ஒரு நபருக்கு மட்டும் தொடர்ந்து கடை நடத்த அனுமதி வழங்கியது எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள் . அப்படி அனுமதி வழங்கிய அதிகாரி யார் என்ற கேள்வி திருமயம் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.மேலும் இந்த கடைக்கு ஏலம் நடத்தி ஐந்து வருடம் ஆகின்றது தற்பொழுது இந்த கடையை வருடத்திற்கு நான்கு லட்சம் வரைக்கும் ஏலம் எடுக்க பொதுமக்கள் தயாராக இருப்பதாகவும் அப்படி அவர்கள் ஏலம் விட்டிருந்தால் இரண்டு வருடம் கொரோனா காலங்கள் போக மிதம் மூன்று வருடத்திற்கும் இந்து அறநிலை துறைக்கு 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருக்கும் என்று பொதுமக்கள் கூறினார்கள் அறநிலைத் துறையில் உள்ள அதிகாரிகள் இந்த கடைக்காரரிடம் ரகசியமாக வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு இந்து சமய அறநிலையத் துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை கிடைக்க விடாமல் செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து துரை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாகும் .மேலும் அவர்கள் கூறுகையில் இந்த ஆலய உண்டியல் திருடு போவதை இவர் மட்டும் இருந்து இருந்தால் நடந்திருக்காது என்றனர் யார் என்று நாம் கேட்டபோது ‘ இந்த ஆலயத்தில் பணிபுரிந்த காவல்காரர் அழகு என்பவர் இந்த கடைக்கு அருகில் ஓரமாக இரவு முழுவதும் உட்கார்ந்து காவல் பணி செய்து வந்தார் என்றும் அவரை இங்கு தங்க கூடாது என்று தேங்காய் விற்பனை செய்யும் கடைக்காரர் கூறியதாகவும் இதனால் அந்த காவல்காரர் இரவு முழுவதும் கடும் குளிரில் வேறு இடத்தில் உறங்கியதால் குளிர் அதிகமானதால் அவரது கை கால் மரத்துப் போய் வலிப்பு நோய் வந்ததாகவும் இதனால் அவர் பெரும் அவதிப்பட்டு வருவதாகவும் சம்பவம் நடந்த அன்று இரவு அலயத்தின் அருகே அந்த கோவில் காவலாளியை உட்கார விடாமல் தடுத்தது யார் என்றும் விசரனை செய்ய வேண்டும் என்றும் இந்த ஆலயத்தில் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . கோவில் செயல் அலுவலர் முத்துராமன் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆலயங்களில் தனக்குக் கொடுத்த வேலையை சரியாக நேர்மையாக செய்யத் தவறிய காரணத்தினால் தான் சில நாட்களாக புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் கோவில்களில் நடக்கக் கூடாத சில சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுக்கின்றனர் . பக்தர்கள் தங்களுக்கு சோதனை வரும் போதெல்லாம் கோவிலுக்கு செல்வார்கள் ஆனால் தற்போது புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில் சில நாட்களாக சோதனை மேல் சோதனை நடந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது நிலையில் இதற்கெல்லாம் அந்த அம்பாள் பிரகதாம்பாள் தான் கண்ணை திறந்து சோதனைகளுக்கு உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்க வேண்டும். ஏனென்றால் கோவிலில் நடக்கும் சம்பவங்களை இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் தெரிந்து கொண்டு மௌனம் மட்டுமே அவர்களின் பதிலாக இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனம்!