நகராட்சி

கோவில் வளாகத்தில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யாமலே சுத்தம் செய்ததாக தவறான தகவல் கொடுத்துள்ள பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம்!உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சட்டப்படி, நியாயப்படி விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்ட பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம்!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?

முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதை காற்றில் பறக்க விடும் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம்.

ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!


உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதை காற்றில் பறக்க விடும் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டம் பட்டி ஆறாவது வார்டில் தனியாருக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். அப்படி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு கோவில் வளாகத்தை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அது மட்டும் இல்லாமல் T.கோட்டாம்பட்டி வீதி என்10 இல் அமைந்துள்ள அருள்மிகு விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலுக்கு முன்பு இருக்கும் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் அப்படியே பல நாட்களாக தேங்கி நிற்பதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகில் உள்ள நூலகத்திற்கு வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் நடமாட முடியவில்லை என்றும் அந்தப் பகுதியில் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் அது மட்டும் இல்லாமல் கழிவு நீர் கால்வாயில் தேங்கியிருக்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவை விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். இந்தக் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பல பேருக்கு டெங்கு போன்ற நோய்கள் வந்துள்ளது என்றும் இதனால் அப்பகுதி மக்கள் மிக மனவேதனையுடன் வசித்து வருகின்றதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது சம்பந்தமாக பொள்ளாச்சி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்ததற்கு பின்பு கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவித்து வருவதாகவும் இந்த கழிவு நீர் கால்வாய் சம்பந்தமாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

. இந்தக் கழிவுநீர் எப்படி கோவில் வளாகத்தில் வருகிறது என்று விசாரித்தால் கோவிலை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து சட்ட விரோதமாக கோவில் வளாகத்திற்கு உள்ளே வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி சட்ட விரோதமாக குடியிருப்பில் இருந்து வரும்
இந்த கழிவு நீரை அகற்ற வேண்டி 4/05/2022 அன்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பொள்ளாச்சி கோட்டாம் பட்டியைச் சேர்ந்த குப்புசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


ஆனால் அந்த புகார் மனுவிற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று பொது தகவல் உரிமைச் சட்டத்தில் 20/06/2022 தேதி கேட்டுள்ளார்.
பொது தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து வந்த பதில்19/0722 அன்று பொள்ளாச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பதில் கொடுத்துள்ளனர். அதில் தாங்கள் மனுவில் கோரப்பட்ட சம்பந்தப்பட்ட இடத்தில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு விட்டது என்று தவறான தகவலை பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது.

ஆனால் இந்தத் தகவல் தவறானது என்றும் கோவில் வளாகத்தில் கழிவு நீர் கால்வாயில் சுத்தம் செய்யப்படவில்லை என்றும் பொள்ளாச்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீர் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் என்ற உணர்வு இல்லாமல் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாக ஆணையர் தனுமூர்த்தி மற்றும் தலைவர் சியாமளா மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர் சுதா மூன்று பேரும் ஆய்வு செய்யாமல் கடமைக்கு இருப்பதாகவும் மெத்தனப் போக்கால் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும் பொள்ளாச்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் எப்படி சீர்கெட்டு இருந்ததோ அதே போல் தான் தற்போதும் பொள்ளாச்சி நகராட்சி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் பொள்ளாச்சிக்கு மட்டும் சப் கலெக்டர் என்று ஒருவர் இருக்கிறார் ஆனால் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பதுதான் நிதர்சனம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உங்களுக்கு முதலில்தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்து மக்கள் பணியை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதை காற்றில் பறக்க விடும் நகராட்சி நிர்வாகம்.
மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சித் அமைப்புகள் தான். அந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் மக்களிடம் நேரடியாக பணியை பெற முடியும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சட்டப்படி, நியாயப்படி விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனமாக நடந்தால் நான் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தின் எதிர்காலம் என்பது திமுக கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு கழங்கம் ஏற்படுத்தும் செயலை செய்யக்கூடாது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலைகுனியக்கூடாது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உங்களுக்கு முதலில்தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்து மக்கள் பணியை உறுதி செய்ய வேண்டும்
. ஒற்றுமையாக இருங்கள் ஊருக்காக உழையுங்கள்.

அடிப்படை கருத்தினை கொண்டது தான் திராவிட அரசு. இலக்கை நோக்கி உழையுங்கள். அனைத்து சமூக மக்களையும் கவனிக்க வேண்டும். கொள்கையும், கோட்பாடும் தான் நிரந்திரமானது. நமது இயக்கம் தமிழக விடியலுக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆகவே தற்போது அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் பொள்ளாச்சி நிர்வாகத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button