காவல் செய்திகள்

சங்ககிரியில் போக்குவரத்தை சீா்செய்ய காவலர்கள் இல்லாததால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்! அதிர்ச்சி வீடியோ!


சங்ககிரி

சிறப்பு நிலை பேரூராட்சியிலிருந்து 2025 மார்ச் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மே மாதம் சங்ககிரி நகராட்சி முதல் ஆணையராக சிவரஞ்சனி பொறுப்பேற்றுக்கொண்டார்.தற்போது சங்ககிரி  நகராட்சிக்கு பொறுப்பு ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை 544-ல் (கோயம்புத்தூர்-சேலம் பிரிவு) சங்ககிரியில் அமைந்துள்ளது. ஆனால் சங்ககிரி நகராட்சியாக தரம் உயர்த்தி 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் சங்ககிரியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான

வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் . ஆனால் சங்ககிரி நகராட்சியாக ஆன பின்பு நகராட்சி நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை குறைக்க  சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதுமட்டுமில்லாமல் சங்ககிரியில் போதுமான போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் சங்ககிரி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு

வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றன

சங்ககிரி புதிய எடப்பாடி சாலை பழைய பேருந்து நிலையம், பவானி பிரதான சாலை, திருச்செங்கோடு செல்லும் பிரிவு சாலைகளில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.புதிய எடப்பாடி சாலை, பழைய பேருந்து நிலையத்திலிருந்து பவானி செல்லும் பிரதான சாலைகளின் இருபுறங்களிலும் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள், அதன் பெயா்ப்பலகைகளால் வாகனங்கள் செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது.

சேலம்-திருச்செங்கோடு-நாமக்கல் செல்லும் வாகனங்கள் சங்ககிரி ரயில்வே பாலத்தின் வழியாக செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது, குறிப்பாக போதுமான போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் ரயில்வே பாலம் மற்றும் முக்கிய சாலைகளில், தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பாக
சேலத்தில் இருந்து சங்ககிரி வழியாக திருச்செங்கோடு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஆர்எஸ் வழியாகத்தான் சென்று வருகின்றது. அதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவது தொடர்கதையாகியுள்ளது. அது மட்டுமின்றி எடப்பாடி, மகுடஞ்சாவடி போன்ற பகுதிகளில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல் செல்லும் அனைத்து வாகனங்களும் அந்த வழியை தான் பயன்படுத்தும் சூழல் உள்ளது.
அது மட்டும் இல்லாமல்
சங்ககிரி பிரதான சாலையில்

வாகனங்களை கடைகளுக்கு முன்னால் மற்றும் சாலையோரத்தில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும்
இதனால்
வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சி நீண்ட நேரம்  காத்திருப்பதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் .

சேலம் மாவட்ட காவல் துறை நிா்வாகம் பாரபட்சமில்லாமல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் தொடா்ந்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அது மட்டும் இல்லாமல்
சங்ககிரியில்   போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி
வாகனங்கள் நிறுத்துவதற்கான முறையான இடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க
கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் அதுமட்டுமில்லாமல் சாலையில் இருப்பக்கமும்  இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை எடுத்துள்ளனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் சங்ககிரி நகராட்சி நிர்வாகம் மற்றும்  சங்ககிரி போக்குவரத்து காவல்துறையினரின் நடவடிக்கையை.

Related Articles

Back to top button