காவல் செய்திகள்

சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் அமோக விற்பனை!! கட்டவிழ்த்துவிட்ட பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!? கண்டுகொள்ளாத கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? தமிழக டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா!?

மே 1 தொழிலாளர் தினமான இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்று அரசு அறிவித்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சரளபதி
ஒடையகுளம் போன்ற இடங்களில் அனுமதி இல்லாத போலி மது பாட்டில் விற்பனை நடக்கிறது.
கள்ளத்தனமாக போலி மது பாட்டில் சட்ட விரோத மாக அமோகமாக விற்பனை செய்யும் சமூக விரோதிகளிடம் மாதம் ஒரு லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உடந்தையாக ஆனைமலை உதவி ஆய்வாளர் காளிதாஸ் செயல்படுகிறார் என்ற குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுசம்மந்தமாக களத்தில் விசாரித்த போது போலி மது பாட்டில் விற்பனை செய்யும் நபர்களிடம் அமராம்பாளையம் ஊரை சேர்ந்தவர் மகேந்திரன் FOP ( பிரன்ஸ் ஆப் போலீஸ்)இவர்தான் பணத்தை வசூல் செய்து ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ் சொல்லும் இடத்தில் சொன்ன நேரத்தில் கொடுத்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.


அதுபோல் ரேசன் அரிசி கேரளாவுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் ஆத்துப் பொள்ளாச்சி காலியாப்பக்காகவுண்டனூர், மணக்கடவு போன்ற இடங்களிலிருந்து அரிசி மூடைகளை கண்ணன் என்பவர் கடத்திச் செல்வதாகவும் இவருக்கு உடந்தையாக ரகுமான் என்பவர் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இரண்டு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்வதற்கு ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ் அவர்களுக்கு மாதம் 35 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை லஞ்சம் கொடுபதாகவும் போலி மது பாட்டில் விற்பனை செய்பாவர்களிடம் மாதம் 50ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாகவும் தகவல் வந்துள்ளது. அது போல் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு பாதுகாப்பு காவல் துறையினருக்கு மாதாம் 25 ஆயிரம் ரூபாய் முதல் 50ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

அது போல வேட்டைக்காரன்புதூர் ஒடையகுளம் மீனாட்சிபுரம் கணபதி பாளையம் கோழிப்பண்ணை சேத்துமடை ஆகிய பகுதிகளில் போலி மது பாட்டில் விற்பனை நடக்கிறது என்றும் இது சம்பந்தமாக புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் கள்ளாக்கட்டும் கோவை மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் ஆனைமலை மற்றும் கோட்டூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் இருப்பதால்.

கண்ணன்
ரேசன் அரிசி கேரளாவுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் கடத்துபவர்.

டாஸ்மாக் கடை மூடிய பின் அருகில் உள்ள தோப்பில் சட்ட விரோதாமாக கள்ளத்தனமாக போலிமதுபாட்டில்களை எந்த நேரமும் விற்று வருவாதவும் அதுமட்டும் இல்லாமல் வேட்டைக்காரன் புதூர் (அழுக்குச் சாமி சித்தர் கோவல் அருகில்) மற்றும் ஒடைகுளம் (தென்னத்தோப்பில் )சரளபதி, சேத்துமடை( பஸ்டாப் அருகில்)ஆகிய இடங்களிலும் சட்ட விரோதமாக போலி மது பாட்டில்கள்

விற்று வருவதாகவும் இதில் கள்ளச் சாராயம் கலந்த மது பாட்டில்கள் விற்று வருவதாகவும் இதை வாங்கிக் குடித்தவர்கள் மன நிலை பாதிக்கப் பட்டு ஒரு சிலருக்கு கண் பார்வை இல்லாமால் போனதாகவும் இது சமந்தாமாக சமூக ஆர்வலர்கள் பொள்ளாச்சி துணை வட்டாட்சியர் மற்றும் பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனைவரிடமும் புகார் கொடுத்தும் இதுவரை சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச் சாட்டு எழுப்பி உள்ளனர்.

இது சம்பந்தமாக உண்மை நிலவரம் பற்றி நம் நிருபர் விசாரணை செய்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். அது என்ன வென்றால். ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் ஒடையகுளம் மீனாட்சிபுரம் கணபதி பாளையம் கோழிப்பண்ணை சேத்துமடை ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் 24 மணிநேரமும் மது விற்பனை நடக்கிறது .இது சம்பந்தமாக புகார் அளித்தும் கண்டு கொள்ளாமல் இருகின்றனர் காவல் துறையினர். கோவை மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் ஆனைமலை கோட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மது விற்பனை படுஜோராக நடக்கிறது .ஆனைமலை போலீசாரின் ஒத்துழைப்போடு கோவை மாவட்ட மதுவிலக்கு போலீசாரின் ஆசியோடு படுஜோரக நடக்கும் மதுவிற்பனை பார் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய்வரை ஆனைமலை போலீசாரும் கோவை மதுவிலக்கு போலீசார் ரூபாய் 45 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கள்ளதனமகாக மது விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர் விடுமுறை தினங்களில் இந்த மாமூல் பணம் 2 மடங்கு அதிகமாக வசூலிப்பதாகவும் ஆனைமலை போலீசார் இந்த மாமூல் பணம் வசூல் செய்ய சுப்பேகவுண்டன் புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரை நியமித்து அவர் மூலமாக ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர் காளிதான் பணம் வசூல் செய்வதாகவும் ரேஷன் அரிசி கடத்தல், செய்ய மாதம் 25ஆயிரம் ரூபாய். என நிர்ணயம் செய்யப்பட்டு யார் யார் இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக கடத்தல் தொழில் செய்கிறார்களோ அவர்களிடம் பணம் வசூலிக்க முக்கிய ஆளாக மகேந்திரன் என்பவர் தான் உள்ளார் இவர் வாங்கும் பணத்தில் ஒரு சில ஆயிரங்களை தனக்கு எடுத்துக்கொண்டு மீத தொகையை உதவி ஆய்வாளர் காளிதாஸ் வசம் ஒப்படைத்துவிடுவார் இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்பவர்களை போலீசார் கண்டும் காணாமல் விட்டுவிடுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்க எந்த ஒரு தொலைபேசி எண் கொடுக்க விலை என்றும் இதற்கு முன்பு இருந்த கோவைமாவட்ட கண்காணிப்பாளர் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் தொலைபேசி எண் கொடுத்திருந்ததால் மிக எளிதாக தொடர்பு கொள்ள வசதி இருந்தது .ஆனால் தற்போது உள்ள கோவை மாவட்ட காவல் கண்ணிப்பாளர் இருந்தும் இல்லாதது போன்றே உள்ளதால். கோவை மாவட்ட காவல்நிலையங்களில் இஷ்டத்திற்கு மாமூல் பணம் வசூலிக்க படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர் .

Loஇதற்கு முன்பு இருந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகரத்தினம் அவர்கள் இருந்த போது புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார் என்றும் தற்போது (மார்ச் மாதம்)புதிதாக பொறுப்பேற்றுள்ள
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
எதையும் கண்டுக் கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் ( மது விற்பனை, கஞ்சா விற்பனை ,மூணு நம்பர் லாட்டரி விற்பனை ரேசன் அரிசி கடத்தல். இது போன்ற சட்டவிரோதமாக ஈடுபடுபவருபவர்களுக்கு காவல் துறையினர் உடந்தையாக இருப்பதாக வரும் குற்றச்சாட்டிலிருந்து இன்னும் மாறவில்லை என்பதைத்தான் காண முடிகிறது.
தமிழ்நாட்டிலே கோவை மாவட்டத்தில் தான் அரசுக்கு எதிரான சட்டவிரோதமான செயல்களை சமூக விரோதிகள் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக பரவலாக செய்தித்தாள்களிலும்
அதுமட்டுமில்லாமல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் மூலம் புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ தமிழ்நாட்டில் சட்டவிரோதமான ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி போட்ட உத்தரவை மதிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு சட்ட விரோதமாக போலி மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக இருந்து கொண்டு கல்லாக்கட்டும் மதுவிலக்கு மாற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு பாதுகாப்பு காவல் துறையினர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button