Uncategorizedகாவல் செய்திகள்

சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆன்மீக பூமியான பழனி! நடவடிக்கை எடுப்பாரா !?தென் மண்டல ஐ ஜி!

சட்ட விரோதமாக செய்ல்படும் சமூக விரோதிகளின் கூடாரமாக பழனி நகரம்!
அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்திருக்கும் பழனி மற்றும் சுற்றுவட்டார தற்போது கொலை ,கொல்லை,
திருட்டு
விபச்சாரம்,கஞ்சா. போலி மதுபானம் விற்பனை,தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பாக அனைத்தும் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக பல சமூக ஆர்வலர்கள் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் புகார் கொடுத்து வருவதாகவும் அந்த சமயத்தில் மட்டும் காவல்துறை சோதனை நடத்துவதாகவும் ஒரு சிலர் மீது பெயரளவிற்கு மட்டும் வழக்குகள் பதிவு செய்து பொதுமக்கள் மத்தியில் கண்துடைப்பு செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச்சாட்டு உண்மையா என்று கடந்த ஒரு மாதமாக பழனி பேருந்து நிலையம் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை செய்வதாக கூறும் இடங்களில் ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை சிறப்பு புலனாய்வு குழு அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் ரகசியமாக விசாரித்த போது சமூக ஆர்வலர்கள் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் பழனி நகரத்தில் நடப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதேபோல் ஒரு சில தங்கும் விடுதிகளில் நடக்கும் விபச்சாரம்

மற்றும் 24 மணிநேரம் மதுபான விற்பனை

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை

நடக்கும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.இது சம்மந்தமாக மேலும் அப்பகுதி சமூக ஆர்வலர்களிடம் கேட்ட போது பழனியில் நடக்கும் அத்தனை இல்லீகல் வியாபாரத்திற்கு காவல்துறை மறைமுகமாக உடந்தையாக இருப்பதாகவும் அதற்கு ஒரு பெரிய தொகையை காவல்துறை சார்பில் கையூட்ட்டாக வாங்கிக் கொள்வதாகவும் குரச்சாட்டு வைக்கின்றனர்.
இதை எல்லாம் உண்மை என்று நம்பும் அளவிற்கு
சமூக விரோதிகளின் செயல்பாடுகள் வெட்ட வெளியில் தெரிய வந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக
கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி லாட்டரி சீட்டு அச்சடித்து பழனி பேருந்து நிலையம் மற்றும் கோயில் அடிவாரம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் விற்பனை செய்வதாக அந்த புகாரை அடுத்து அப்துல் மற்றும் சரவணன் இரண்டு பேரை பழனி நகர காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பழனி அருகேயுள்ள கிழக்கு ஆயக்குடியில் கடந்த அக்.13-ம் தேதி கனிம வளம் கடத்தல் நடந்து வருவதாக வந்த புகாரின் பெயரில் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் 3 பேர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சட்டவிரோதமாக கனிம வளம் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பால சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் சக்திவேல், பழனியை சேர்ந்த பாஸ்கரன், லாரி உரிமையாளர், ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர்
வாகனத்தை ஏற்றி
கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உடனே அங்கிருந்து தப்பித்து வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆயக்குடி காவல் நிலையத்திற்கு சென்று 6 பேர் மீது புகார் கொடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பாக புகார் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் உடனே கைது செய்ய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதன் அடிப்படையில் ஆயக்குடி தனிப்படை காவல்துறையினர் கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 நபர்களை தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் படி பழனி ஆயக்குடி தனிப்படை காவல் துறையினர் அக்.18 கேரள மாநிலத்திற்கு சென்று கொலை முயற்சியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சக்திவேல் (58), அவரது மகன் காளிமுத்து (35), திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் (45)
உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
6 பேர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்டவிரோத மண் திருட்டு உட்பட 4 பிரிவுகளின் மீது ஆயக்குடி காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரை விரைவில் தேடி கண்டுபிடித்து கைது செய்வதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பழனி தாலுகா காவல் நிலைய நெய்க்காரப்பட்டி பகுதியில் கடந்த 03.10.2023 தேதி பகல் நேரத்தில் பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் திருடு போனதை கண்டுபிடிப்பதற்கு பழனி தாலுகா காவல் நிலைய வழக்கு பதிவு எண்-397/23
U/s 454,380 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு
நவீன்குமார்-22/23
S/o காமராஜ்
953, அண்ணா நகர்
மானூர்
பழனி
கைது செய்து சுமார் 8.5 பவுன் நகை, பணம் ரூபாய் -10,000 மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் கைப்பற்றி எ பழனி JM நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின் பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது.


எது எப்படியோ காவல்துறைக்கு சவாலாக இருக்கும் சட்ட விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளின் கூடாரத்தை முற்றிலும் அகற்றி பொது மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க தென்மண்டல ஐஜி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

குற்றத்தடுப்பு நடவைக்கை குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டம்.


திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பழனி நகரத்தை காவல்துறையினர் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் சமூக ஆர்வாளவர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button