சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கும் மூடிக்கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்!
பல கோடி ரூபாய் வீணாய் போன அரசின் பணம்…!!
அதிமுக ஆட்சியில் செய்த ஊழலில் புழுதி காடாக காட்சியளிக்கும் அவல நிலை!!கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட நிர்வாகம்!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கும் மூடிக்கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்
பல கோடி ரூபாய் வீணாய் போன அரசின் பணம்…
அதிமுக ஆட்சியில் செய்த ஊழலில் புழுதி காடாக காட்சியளிக்கும் அவல நிலை! கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட நிர்வாகம்!
பாழான சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட்,
வீணாய் போன அரசின் பணம்…
அதிமுகவினரின் ஊழலில் புழுதி காடானது,


அதற்கு உதாரணமாக
மதுரை மாவட்டம் சோழவந்தான் பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த ஊர். இப்ப துவண்டு போய் கிடக்கிறது, விவசாயம் பொய்த்துப் போனது, வெற்றியிலை விவசாயத்தால் வெளிசசமாய் இருந்த ஊரு, இப்ப தன் நிலைமாறி கேள்விக் குறியாகி இருண்டு கிடக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
காரணம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள், எந்த ஒரு வளர்ச்சி திட்டமும், அரசின் சலுகைகளும் முறையாக மக்களிடம் போய் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் சோழவந்தான் பேரூராட்சி பகுதிக்கு எந்த ஒரு வளர்ச்சி பணியும் நடக்க வில்லை, ஆனால் வளர்ச்சி திட்டத்திற்கு வந்த பணத்தை கொள்ளை அடித்து மோசடி செய்து சாமானிய பொது மக்களை ஏமாற்றி இருக்காங்க என்று அதிமுக கட்சிக்காரர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.
கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியிலே மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் மக்கள் பிரதிநிதி செய்த தில்லுமுல்லு தான் என்கிறார்கள், சாதாரணமா கட்சியில் வார்டு உறுப்பினராக வந்த ஒருவர் தாங்க இப்ப பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு பங்களா வீடு, ஐந்து சொகுசு கார்கள், கோடி கணக்கில் பணம் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது., அதுமட்டுமில்லாமல் தன் குடும்பத்தினருக்கு அரசாங்க வேலை என்ன ஏகபோகமாக வாழ்ந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்களுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் அளவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஜேசிபி மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள டாரஸ் லாரிகள் மற்றும் ரோடு ரோலர் தார்சாலை பிளான்ட் வாடிப்பட்டி கச்சகட்டி செல்லும் வழியில் உள்ளது .
தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் ஊழல் செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும். அளவுக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு போடப்பட்டால் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் பிஜேபி கட்சியில் இணைந்து கொண்டார் என்று கூறுகிறார் சமூக ஆர்வலர்,
சரி இது எல்லாம் எப்படி என்று கேட்டோம்
கடந்த அதிமுக ஆட்சியிலே அதிகார மையமா இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேரை சொல்லி, முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம், இந்த பட்டம் சூட்டாத வார்டு உறுப்பினரும் சேர்ந்து , பேரூராட்சிக்கு ஒதுக்கும், நிதியை எல்லாம் முறைகேடு செய்து கொள்ளை அடித்து விட்டனர், சுடுகாடு முதல் தெருக்கள் சீரமைப்பு தார் சாலைகள் போடுவது, கழிவுநீர் கால்வாய் கட்டுதல், தெரு விளக்கு பராமரிப்பு, மருத்துவமனை கட்டிடம் புதுப்பித்தல் மற்றும் புது கட்டிடம் கட்டுதல் போன்ற எல்லா ஒப்பந்தங்களையும் (டெண்டர் )இவர்கள் தான் எடுப்பார்கள், இவர்கள் எடுத்த டெண்டர் வேலைகளில் அதிகாரிகள் குறைகளை தட்டி கேட்டால் உடனே டிரான்ஸர் தான், அது எல்லாம் விடுங்க மூன்று வருடம் முன்பு நல்லா இருந்த சோழவந்தான் பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு இரண்டு கோடி ரூபாயில் புதுசா பஸ் ஸ்டாண்ட் கட்டுகிறோம் என்று சொல்லி, பேருந்து வந்து போக மாற்று வசதி செய்யாமல், ஏன் பஸ்ஸை நிறுத்தக்கூட இடம் இல்லை, இப்ப சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் சமுக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் மதுப் பிரியர்கள் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து கொண்டு, கஞ்சா அடிப்பது மது அருந்துவது பல சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது. அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வது
இப்படி பாழாய், வீணாகி போனது சோழவந்தான் பேருந்து நிலையம் . இதனால் பல கோடி ரூபாய் அரசின் பணம் தான் வீணாய் போனதுதான் நிதர்சனம்.
ரயில்வே மேம்பால கட்டுமானத்தை காரணம் காட்டி சோழவந்தான் டிப்போ பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் அலட்சியப் போக்கை கண்டித்து பொதுமக்கள் புகார்.
ஏழு வருடமாக நாற்பது கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டி தருகிறோம் என்று சொல்லி வேலையை ஆரம்பித்து தற்போது வரை நடக்குது நடக்குது நடந்து கொண்டே இருக்குது.

மக்கள் தான் தவிக்குறாங்க, இதனால் முறையாக நேரத்திற்கு பஸ்கள் வந்து செல்வது இல்லை, பள்ளிக்கூடம்,கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வைகை குருவாயூர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பயணிகள் தற்போது சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகள் நிற்கும் இடத்தைத் தேடிச் சென்று ஏற வேண்டிய அவல நிலை. அதுமட்டுமில்லாமல் சென்னையிலிருந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் இரவு எட்டு முப்பது மணிக்கு சோழவந்தான் ரயில் நிலையத்தை அடைகிறது. அந்த ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எட்டு மணிக்கு மேல் தங்களது கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எந்த ஒரு பேருந்து வசதியும் அங்கு இல்லை. அப்படியே ஒன்று இரண்டு பேருந்துகள் நின்றாலும் அந்தப் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் பயணிகளை ஏற்றுவது இல்லை ஏனென்றால் டைம் முடிந்துவிட்டது என்று பேருந்தை டிப்போவிற்கு எடுத்துச் செல்கின்றனர். இல்லையென்றால் பேருந்து செல்லும் பொழுது பழுதடைந்து விட்டதாக பேருந்தை நடுவழியில் நிறுத்திவிடுவார்கள் இந்த சோழவந்தான் பேருந்து ஓட்டுநர் எப்போது பார்த்தாலும் வாடிப்பட்டி சோழவந்தான் செல்லும் சாலையில் ஏதாவது ஒரு அரசு மாநகரப் பேருந்து பழுதடைந்து நின்று கொண்டுதான் இருக்கும் .என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் சோழவந்தான் டிப்போ மேலாளர் மற்றும் மதுரை மண்டல மேலாளர்கள் புகார் கொடுத்தும் எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
போன அதிமுக ஆட்சியிலே எல்லாமே தில்லுமுல்லு தான், மழை காலங்களில் சோழவந்தான் எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக இருக்கும் . அதேபோல வெயில் காலங்களில் ஒரே புழுதி காடாக அலங்கோலமாக காட்சி அளிக்கும் நிலைதான் தற்போது இருந்து வருகிறது.
கடந்த பத்து வருட காலமாக கிடப்பில் போடப்பட்ட உழவர் சந்தையை தற்போது உள்ள சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன், அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் முயற்சியால் தான் தினசரி காய்கறி சந்தை திறக்க முடிந்தது, இதனால் ஓரளவுக்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் விலையும் காய்கறிகளை கொண்டு வந்து தினசரி காய்கறி சந்தையில் விற்பனை செய்து ஓரளவுக்கு பெருமூச்சு விடும் அளவுக்கு தற்போது விவசாயிகளின் நிலைமை இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு முறையும் தமிழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சொல்வது நான் தமிழகத்தின் சிறந்த முதல்வராக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை இல்லை. இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். அதை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளர்கள் மனதில் கொண்டு தங்களது பணியை செய்ய வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஆணித்தரமாக சொல்வதை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மற்ற நிர்வாகத் துறை அதிகாரிகளும் செயல்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது!
அதுமட்டுமில்லாமல் தற்போதுள்ள தமிழகத்தின் முதன்மை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அறிக்கையில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை வாசிக்கும் அதிகாரிகள் அந்த மனுவை எழுதிய மனிதர்களையும் ஆழ்ந்து வாசித்தால் தீர்வுகள் மின்னல் வேகத்தில் விளையும். என்று கூறியுள்ளார்.
இனியாவது சோழவந்தான் பேரூராட்சிக்கும், மக்களுக்கும் நல்ல காலம் பிறக்குமா….
மதுரை மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா!?
பொறுத்திருந்து பார்ப்போம்…