காவல் செய்திகள்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அதிர்ச்சி தகவல்!திண்டுக்கல் பேருந்து நிலையம்!திண்டுக்கல் மாவட்ட காவல் SP & DIG, நடவடிக்கை பாயுமா!?

விபச்சாரம், கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கல் நகரில் பெரும்பாலான இடங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறுவது என்பதுதான் நிதர்சனம். அதுவும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருடர்கள் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் இவர்களின் ஆதிக்கம் பெருமளவு இருப்பதாக பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள ஒரு சிலர் தகவல் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இது, சுமார் 6½ ஏக்கர் பரப்பளவு கொண்டது.

திண்டுக்கல்லில் இருந்து இதனால் ரெயில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்னை, பெங்களூர் பாண்டிச்சேரிகேரளா திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை என்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதேபோல் திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பிற மாநிலங்களின் பெருநகரங்களுக்கு திண்டுக்கல் வழியாக பஸ்கள் செல்கின்றன.

திண்டுக்கல் பேருந்து நிலையம்

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் வழியாக தான் செல்ல வேண்டும்.இதுதவிர திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.அந்த வகையில் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

இதன்மூலம் உள்ளூர், வெளியூர் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஸ் நிலையத்தில் குவிகின்றனர்.24 மணி நேரமும் விடிய விடிய பேருந்து வந்து செல்வதால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் .

இதை பயன்படுத்திக் கொண்டு பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டம் வெளிமாநிலம் மற்றும் தங்களது சொந்த கிராமத்திற்கு செல்ல காத்திருக்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் .ஆகவே பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளை குறிவைத்து அவர்களிடம் நைசாக பேசி அவர்களை உல்லாசத்திற்கு அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில் இருக்கும்

தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என உல்லாசமாக இருந்து ஆயிரம் முதல் 5000 வரை பணத்தை பெற்றுக் கொண்டு வந்த நபர்களை அனுப்பி விடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த விடுதியில் நடக்கும் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருக்க

பேருந்து நிலையம் அருகே உள்ள காவல் நிலையம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கும் தனியார் தங்கும் விடுதி நடத்தும் உரிமையாளர்

மாதம் பெரும் தொகை கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தின கூலித் தொழிலாளிகளை குறிவைத்து  தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பயணிகளின் உடமை மற்றும் செல்போனில் திருடும் சமூக விரோதிகள் கூட்டம் அதிகமாக நடமாட்டம் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.இது சம்பந்தமாக பல புகார்கள் சமூக ஆர்வலர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் நிலைய காவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதற்கு காரணம் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் காவல்துறை சார்பாக விளக்கம் அளித்துள்ளனர்.  ஆதாரம் எப்படி இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.

பேருந்து நிலையத்தில் முக்கிய பகுதிகளில் பழுதடைந்து இருக்கும் சிசிடிவி கேமரா

ஏனென்றால் பேருந்து நிலையத்தில் சுற்றி 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து காணப்படுவதால்  இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாட்சிகள் ஆதாரங்கள் இல்லை என்று காவல்துறை தங்களை காப்பாற்றி வருவதாகவும் இதை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் தங்களது சட்டவிரோதமான செயல்களை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் நகரில் பெரும்பாலான இடங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறுவது என்பதுதான் நிதர்சனம். அதுவும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருடர்கள் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் இவர்களின் ஆதிக்கம் பெருமளவு இருப்பதாக பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள ஒரு சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வைத்திருக்கும் செல்போன் மற்றும் உடைமைகளை திருடிச் செல்வது வாடிக்கையாக இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு இதே போல் கொடைக்கானல் சென்று வந்த இரண்டு மாணவர்கள் அவர்கள் சொந்த கிராமத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தபோது அசந்து தூங்கியதால் அப்போது அந்த பயணிகளிடம் அருகில் படுத்து தூங்குவது போல் நடித்து பணம் மற்றும் பைகளை நுதன முறையில் அவர்களிடமிருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் இரண்டு ஐபோன்கள் திருடிச் சென்றுள்ளனர். அதன் பின்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு வாரமாக புகார் கொடுத்தவர்களை அலைய விட்டு அதன் பின்பு திருடிய நபர்களை பிடித்து விசாரணை செய்ததாகவும் தகவல் வந்துள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள காவல்துறை பூத்தில் உள்ள காவலர்களிடம் புகார் கொடுத்தால் அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு பொதுமக்களை தட்டிக் கழித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடக்கும் திருட்டு மற்றும் விபச்சாரம், கஞ்சா வியாபாரம் ,தடை செய்யப்பட்ட  கேரளா லாட்ரி வியாபாரம் விரோதமாக நடப்பதை தடுக்க.  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்  40க்கும் மேற்பட்ட பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை மாற்றி புது கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் அது மட்டுமில்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க 24 மணி நேரமும்   காவலர்களை ரோந்து பணியில் இருக்குமாறு நியமிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அச்சம் இல்லாமல் பொதுமக்கள் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button