சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் காத்திருப்போர் பட்டியல் !தென்மண்டல ஐஜி அதிரடி நடவடிக்கை!
மதுரை மாவட்டம் T.வட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி செய்த சில்வியா ஜாஸ்மின் காத்திருப்போர் பட்டியலில் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்த தென்மண்டல ஐஜி.
காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தற்கு
பொதுத்தகவல் அதிகாரி பதில்
காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக பதில் அனுப்பியுள்ளார்.
சட்ட விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்ததாகவும், மாதம் 5 லட்சம் வரை சமூக விரோதிகளிடமிருந்து லஞ்சமாக பெற்று வந்ததாகவும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி அவர்களுக்கு பல சமூக ஆர்வலர்கள் புகார்கள் அளித்து வந்தனர்.
கள்ளச்சாராயம் ,சூதாட்டம், மற்றும் கஞ்சா,விடுதிகளில் விபச்சாரம் . சட்டவிரோதமாக லாட்டரி நடப்பதாக பல புகார்கள் காவல்நிலையத்தில் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் சில்வியா ஜஸ்மின் சட்ட விரோதமாக செயல்படுபவர்களிடம் பல லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு வருடமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் செல்வி ஜாஸ்மின் தனி இராஜ்ஜியத்தை உருவாக்கி வாடிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கு உடந்தையாக இருந்து வந்துள்ளதாகவும் புகார்கள் வந்தது.
இந்த சமூக விரோதிகள் திருட்டு வழிப்பறி ,கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாகவும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் காவல் ஆய்வாளராக இருந்த சில்வியா ஜாஸ்மின் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
இது சம்பந்தமாக பல பத்திரிகைகளில் செய்திகள் வந்ததும் அந்த செய்திகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களுக்கும் தென்மண்டல ஐஜி அவர்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையில் வாடிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து சமயநல்லூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
பின்பு அதற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததும் தென் மண்டல ஐஜி அன்பு அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் காவல் நிலையத்திற்கு அதிரடியாக பணி மாறுதல் வழங்கினார்.
இருந்தாலும் சில்வியா ஜாஸ்மின் அவர்கள் மீது வந்த புகார்கள் அனைத்தையும் விசாரணையில் உறுதி செய்த பின் தற்போது காத்திருப்போர் பட்டியல் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார் தென்மண்டல ஐஜி என்ற தகவல் வந்துள்ளது.
ஆனால் சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்கள் நேர்மையான முறையில் விசாரணை செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் காவல் ஆய்வாளர் செல்வியா ஜாஸ்மின் மீது கண்டிப்பாக பணிநீக்கம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.