சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்திச்செல்லும் வாகன ஓட்டிகள்! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது சோழவந்தான் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய சாலைகளின் அவல நிலை !
பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
பொதுமக்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வணிக வளாகங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் பல இடங்களில் சாலைகளில் ஆங்காங்கே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்கள் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் குறிப்பாக பாரத ஸ்டேட் பாங்க் காமராஜர் நடுநிலைப்பள்ளி திரௌபதி அம்மன் கோவில் பகுதி மாரியம்மன் கோவில் பகுதி மருது மகால் பகுதி வட்ட பிள்ளையார் கோவில் பகுதி மார்க்கெட் ரோடு பகுதி அரசு மருத்துவமனை பகுதிஆகிய பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்பு நடுரோட்டில் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடங்களை அந்தந்த வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் இதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் பொது போக்குவரத்திற்கு மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் குறிப்பாக காமராஜர் நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள வணிக கடைகள் தங்கள் கடைகளின் முன்பு வாடிக்கையாளர்களை கூட்டமாக நிறுத்துவதும் இதன் மூலம் விபத்துகள் அடிக்கடி நடப்பதுமாக உள்ளது இதுகுறித்து நிறுவன உரிமையாளரிடம் கூறினால் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கைகலப்பாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது இதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து சோழவந்தனின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மீறி நிறுத்துவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்