சாலைகள் போட அரசு புறம்போக்கு குட்டையில் கிராவல் மண் எடுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ! உடுமலைப் பேட்டை வருவாய்த் துறையினர் பல லட்சம் லஞ்சம்!?நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்டம் ஆட்சியர்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா பெரிய வாளவாடி ஊராட்சியில் சாலைகள் போடுவதற்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் அரசு புறம்போக்கு குட்டையில் கிராவல் மண் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாக வீடியோ ஆதாரங்களுடன் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் ஒன்றிய செயலாளர் விஜய சேகர் உடுமலை வட்டாட்சியர் இடம் புகார் கொடுத்துள்ளார்.
கிராமப்புற சாலை போடுவதற்கு அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குட்டையில் மண் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை எனவும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் கூறியுள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் உடுமலைப்பேட்டை மாவட்ட கவுன்சிலர் கணவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான மொடக்குப் பட்டி பாபு என்பவர் அமைச்சரிடம் கூறிவிட்டுத் தான் குட்டையில் மண் எடுக்கிறோம் என விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் கூறியுள்ளார்..
மேலும் கிராவல் மண் எடுத்துச் செல்லும் வாகன டிராக்டர் உரிமையாளர்களிடம் மண் எடுத்துச் செல்ல யார் தடுத்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் வருவாய்த் துறை காவல்துறை நான் பேசிக் கொள்கிறேன் எனக் கூறி தொடர்ந்து கிராவல் மண் வெட்டி எடுத்துச்செல்ல வற்புறுத்தி வருவதாக தமிழக விவசாயிகள் சங்கம் உடுமலைப்பேட்டை செயலாளர் குற்றச் சாட்டு வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கடந்த 10 மாதங்களில் 10வது முறையாக வாளவாடி பெரிய வாளவாடி குட்டையில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாதக குறிப்பிடத்தக்கது… சமீபத்தில் வருவாய் துறை அமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ஏரிகள் குட்டைகள் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆகவே இதனால் இயற்கை சீற்றங்கள் உருவாவதாகவும் இதனால் பேரிழப்பு ஏற்படுவதாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது ஆகவே உடனடியாக அரசு புறம்போக்கு கொட்டைகள் ஏரிகளில் சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்தும் சமூக விரோதிகளை தடுத்து நிறுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.