சாலையின் குறுக்கே சட்ட விரோதமாக உயர் இரும்பு நடை மேம்பாலம் அமைக்க 30 லட்சம் லஞ்சம்! மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை யின் நடவடிக்கை பாயுமா!?
ஒரு மருத்துவமனை அமைக்க உரிமம் மற்றும் தேவையான அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் பல முறைகள் கடைபிடிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் பல உரிமங்கள் பல அனுமதிகள் பெற வேண்டும் .
அதில் முக்கியமாக கட்டுமானத்திற்காக மண்டல இணக்கத்திற்கான அனுமதிகள். கட்டிட உரிமங்கள் மற்றும் அனுமதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மற்றும் நிறைவுச் சான்றிதழ் , தண்ணீர் மற்றும் உட்பட மின் இணைப்பு அனுமதி மற்றும் கழிவுநீர் அகற்றும் அனுமதி, நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் உயிருக்கு மருத்துவமனை ஆபத்தை ஏற்படுத்தாது என மாநில சுகாதாரத் துறையின் அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு துறையின் ஆட்சேபனை (NOC) சான்றிதழ் மருந்துக உரிமம் மற்றும் மருத்துவக் கழிவு அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மருத்துவமனை வசதியை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குவதற்கு முன்பு சுகாதார உரிமம் அவசியம். மருத்துவமனை அமைக்க தேவையான நிலத்தின் பரப்பளவு மருத்துவமனையின் அளவு மற்றும் திட்டமிட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை பொருத்தது. இருப்பினும் இந்திய பொது சுகாதார தர நிலைகள் (IPHS) மற்றும் மருத்துவமனைகளுக்கு தேசிய அங்கீகார வாரியம் (NABH ) போன்ற சில வழிகாட்டுதல்கள் உள்ளன. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட நிபுணர் குழுவைக் கொண்ட அனைத்து நோய்களுக்கும் நோய்களுக்கும் வசதிகளைக் கொண்ட ஒன்றாகும். நோயாளிகள் குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் உள்ளே கேன்டீன்கள் மற்றும் . வசதிகள் இவற்றை உள்ளடக்கியிருக்கலாம் ஆனால் இவை மட்டும் அல்ல:
பொது மருத்துவம்
பொது அறுவை சிகிச்சை
நரம்பியல் மருத்துவர்
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
காஸ்ட்ரோ மருத்துவர்
இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர்
இதய நோய் நிபுணர்
கார்டியோடோராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்
நுரையீரலியல்
கண் மருத்துவம்
வாதவியல்
ஹீமாட்டாலஜி/ஆன்காலஜி
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்
மகப்பேறு மருத்துவர்
மகப்பேறு மருத்துவர்கள்
குழந்தை பராமரிப்பு
சிறுநீரக மருத்துவர்
சிறுநீரக மருத்துவர்
உட்சுரப்பியல் நிபுணர்
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்
பல் மருத்துவர் ஆகிய அனைத்து மருத்துவர்களும் இருக்க வேண்டும்.
ஆனால் இந்த சட்ட திட்ட விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட வார்டு 2 இல் பட்டமங்கல தெருவில் அருண்பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்கள் கட்டப்பட்டுள்ளது . இந்த கட்டிடம் கட்டுவதற்கு குடியிருப்பு கட்டடத்திற்கான கட்டுமான வரைவு அனுமதி தான் (house building plan approved) மயிலாடுதுறை நகராட்சி வழங்கி உள்ளது. ஆனால் குடியிருப்பு கட்டிட அனுமதி வாங்கிவிட்டு சட்ட விரோதமாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது என்றும் இது சம்பந்தமாக நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் சுகாதாரத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மருத்துவமனை கட்டிட உரிமையாளர் டாக்டர் செல்வம் இடம் பெரிய தொகையை கையூட்டாக பெற்றுக்கொண்டு உடந்தையாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த மருத்துவமனையின் பின்புறத்தில் மகாதான தெருவில் (பிளாக் எண் 18 நகரளவு எண் 669 சர்க்கார் புறம் போக்கு நிலம்.( இதில் சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டு வருவாய் துறை மற்றும் நகராட்சி பராமரிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது.
நகராட்சி பின்புறம் மகா தான தெருவில் அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மற்றொரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இரண்டு கட்டிடத்திற்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுலபமாக சென்று வர மற்றும் நோயாளிகளை கொண்டு செல்ல தெருவின் குறுக்கே சுமார் 25அடி உயரத்தில் இரும்பு நடை மேம்பாலம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு நடை மேம்பாலம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இரு கட்டிடங்களுக்கும் சாலையின் குறுக்கே சுலபமாக செல்வதற்கு தெருவின் குறுக்கே 25 அடி உயரத்தில் இரும்பு நடை மேம்பாலம் அமைப்பதற்கு மயிலாடுதுறை மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு சுமார் 20 லட்சமும் நகராட்சி ஆணையர்க்கு பத்து லட்சமும் சுமார் 30 லட்சம் வரை அருண்பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் நகர் மன்ற கூட்டத் தொடரில் இரும்பு நடை மேம்பாலம் அமைப்பதற்கு ஆட்சேபனை இல்லை என ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நடை இரும்பு மேம்பாலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாத வாடகையாக வசூல் செய்ய நிர்ணயித்தும் நகர மன்றம் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அருகே புல எண் 636 ல் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மிக அருகில் மின் கம்பிகள் செல்வதால் எப்போது வேண்டுமென்றாலும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயமான சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் மற்றும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கும் வகையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்கம்பிகளை கொண்டு சென்றுள்ளதாகவும் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்கள் அருகே மருத்துவமனைக்கு மின் இணைப்பு கொண்டு செல்ல மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் எடுத்துச் செல்ல அருகில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் ஆட்சேபனை இல்லை என சான்றிதழ் எழுதி வாங்கப் படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்கள் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் கட்டுவதற்கு கட்டிடத்திற்கு குடியிருப்பு கட்டடத்திற்கான கட்டுமான வரைவு அனுமதி தான் (house building plan approved) மயிலாடுதுறை நகராட்சி வழங்கியுள்ளது. ஆனால் குடியிருப்பு கட்டிடத்தில் சட்ட விரோதமாக மருத்துவமனை இயங்கி வருகிறது என்றும் இது சம்பந்தமாக நகராட்சி ஆணையர் சங்கர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மருத்துவமனை கட்டிட உரிமையாளர் டாக்டர் செல்வம் இடம் பெரிய தொகையை கையூட்டாக பெற்றுக்கொண்டு உடந்தையாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் அருண்பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் அமைந்துள்ள சர்வே எண் 669 இல் உள்ள அரசிற்கு சொந்தமான சாலையின் நீளம், அகலம் என்ன. அந்த சாலை எவ்வளவு ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என நகராட்சி அதிகாரிகள் சர்வே செய்தார்களா? அருண்பிரியா மருத்துவமனை பின்புறம் செல்லும் மின் கம்பிகளை சாலையின் குறிக்க மேலே செல்லாமல் இருக்க சட்டவிரோதமாக சாலையில் கீழே தோண்டி வெட்டி எடுத்து அடியில் செல்லுமாறு செய்து கொடுத்ததற்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் ஒரு பெரிய தொகையை கையூட்டாக பெற்றுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சாலையின் இருபுறமும் தனி நபர்களின் கட்டிடம் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கட்டிடங்களுக்கு செல்வதற்கு சுலபமாக செல்வதற்கு சாலையின் குறுக்கே இரும்பு நடை மேம்பாலம் அமைக்க நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் அனுமதி வழங்குமா? தற்போது ஏ. ஆர். சி. கடை எதிர் எதிராக உள்ளன. அவர்கள் சாலையின் குறுக்கே பாலம் அமைத்து இரு கடைகளையும் இணைக்கும் வகையில் நடை இரும்பு நடை மேம்பாலம் அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குமா!? பணபலம், அரசியல் பலம், அதிகார பலம் இருந்தால், நகர மன்றம் என்ன, அரசாங்கமே சல்யூட் அடித்து, விதி முறைகளை குப்பை தொட்டியில் வீசி சலுகைகளை செய்யும் என்பதற்கு உதாரணம் தான் இந்த இரும்பு நடை மேம்பாலம். இந்த சட்ட விரோத செயல்களை நகர் மன்ற கூட்டத்தில் எதிர்த்து குரல் கொடுத்த நகர மன்ற உறுப்பினர் யாராவது இருந்தால் அவர்கள் பொதுநலவாதியாக கருதப்படுவார்கள்! மீதமுள்ள அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் சுயநலவாதிகள் என அழைக்கப்படுவார்கள்! எதிர் காலத்தில் இந்த இரும்பு நடை மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பார்கள் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகமா!? அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகமா!? மயிலாடு மாவட்ட நிர்வாகமா? இல்லை தமிழக அரசா? நகராட்சிக்கு சொந்த மான சாலை என்பதால் நாளை தனி நபர்களுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்ய கூட தயங்க மாட்டார்கள் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் உடந்தையுடன் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்! எது எப்படியோ மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக இருக்கும் சங்கர் இதற்கு முன்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ஆணையராக இருந்தபோது அவர் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார் என்பது யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. அதே போல் சீர்காழி நகராட்சி பொறுப்பு ஆணையராக சில மாதங்கள் இருந்தபோது சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விலை நிலங்கள் வீட்டு மனைகளாக அனுமதி வழங்க ஆட்சேபனை இல்லை என நகராட்சி நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்குவதற்கு அந்த இடத்தில் ஒரு பிளாட் கொடுக்க வேண்டும் என கேட்டதாக சீர்காழி நகராட்சி பொறுப்பா ஆணையராக சங்கர் இருந்தபோது குற்றச்சாட்டு எழுந்ததையும் மறக்க முடியாது. தற்போது மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக இருந்து கொண்டு சட்ட விரோதமாக பல லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் பஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஆணைய சங்கர் மீது பொதுமக்கள் நலன் கருதி தமிழக முதல்வர் நடவடிக்கை இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் குடியிருப்பு கட்டிடம் என அனுமதி வாங்கிவிட்டு அந்தக் கட்டிடத்தில் மருத்துவமனையாக செயல்பட்டு வரும் அருண் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மற்றும் மருத்துவமனை உரிமையாளர் மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறான அறுவை சிகிச்சையால் 12 வயது சிறுவன் உயிரிழந்த பின்பு ரமணா திரைப்படம் போல இறந்த சிறுவனின் மயிலாடுதுறை அருண் பிரியா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வைத்துக் கொண்டு உறவினர்களிடம் நாடகம் ஆடிய மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் செல்வம் என்பதை மருத்துவ முடியாது மறக்கவும் முடியாது!