பணம் பறிக்கும் நோக்கில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீராச்சாமியை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா .சாமிநாதன்
இவர் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் பைனான்ஸ் மற்றும் பல்வேறு தொழில் செய்து வருகிறார்.
அர.சக்கரபாணி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் நெருக்கம் காட்டி திமுகவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்
மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூரில் போட்டியிடுவதற்காக வேடசந்தூர் தொகுதி முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு தேர்தல் பணிகளையும், நிதி உதவிகளையும் செய்து வருகிறார்
.இந்நிலையில் இன்று காலை வேடசந்தூர் எரியோடு மத்தனம் பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் வீரா .சாமிநாதனை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

வந்தவர் சால்வை போட்டுவிட்டு அவர் மறைத்து வைத்திருந்த கோழி சண்டைக்கு பயன்படுத்தும் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார் சுதாரித்துக் கொண்ட சாமிநாதன் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்து
தப்பி ஓடிய இளைஞரை வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்
காயமடைந்த வீராசாமிநாதன் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் மணிகண்டன் எதற்காக கத்தியால் குத்தினார் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.கத்தி குத்துக்கு காரணம் என்ன? வேடசந்தூர் திமுக பிரமுகர் விளக்கம்
தம்மை கத்தியால் குத்திய இளைஞர் தமது நிறுவனத்தில் பணிபுரிந்தவர் இல்லை; தமக்கும் அவருக்கும் பணப் பிரச்சனை எதுவும் இல்லை” என்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
வேடசந்தூர் அருகே என் வீட்டுக்கு முன்புதான் அலுவலகம் இருக்கிறது. அங்கு நேற்று இருந்தேன். அங்கே வந்த இளைஞர், கடந்த மூன்று நாட்களாக உங்களுக்கு சால்வை போட முயற்சிக்கிறேன் என்று சொன்னார்.
அதற்கு, நிறைய பேர் வந்து அப்ரோச் செய்யுறாங்க.. சால்வை போடுறாங்களே.. நீங்க எந்த ஊரு தம்பி என விசாரித்தேன்.
எரியோடு அருகே உள்ள மத்தனம்படி, பெயர் மணிகண்டன் என்று சொன்னார்.
முத்துப்பாண்டியும், “ஆமாம்… நம்ம பையன்தான்” என்றார்.
இதனால், சால்வை போட அனுமதித்தேன்.. சால்வை போடும் போது, அந்த பையன் இடுப்பில் லேசாக கை வைத்தான்… நானும் என்னடா என யோசிச்சு விட்டுவிட்டேன்.
அப்போது குளத்தூர் காளனம்பட்டியைச் சேர்ந்த கட்சிக்காரராகிய நாச்சிமுத்து, மருமகள் வளைகாப்புக்காக அழைக்க வந்திருந்தார். அவரிடம் பேசியபடியே சால்வை போட்ட பையனின் செல்போன் எண்ணை பதிவு செய்து போனடித்தேன்.. ரிங் போனது.. ஆனால் போனை அந்த பையன் எடுக்கவில்லை.
”என்னப்பா போன் எடுக்கவில்லையே” என்று கேட்ட போது, ‘சைலண்ட் மோடில் பாக்கெட்டில் இருக்கிறது’ என்று சொன்னார் அந்த இளைஞர்.
அப்போது சட்டென இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் என் கழுத்தை நோக்கி தாக்க முயன்றார். உடனே தலையை குனிந்து கொண்டு இடது கையால் தடுத்தேன்.
பின் வயிற்றில் கத்தியால் குத்த முயற்சித்தார் அந்த இளைஞர்.. ஆனால் கட்சிக்காரரான நாச்சிமுத்து அதைத் தடுக்க அவரது வயிற்றில் கத்திக் குத்து விழுந்தது.
தொடர்ந்து அந்த இளைஞர் என்னை தாக்க முயன்ற போது எனக்கு விலா எழும்பில்
கத்திக்குத்து விழுந்தது.
என் வீட்டில் மதுரை பிஎல்ஏ முகவர்கள் மாநாட்டுக்காக 3,000 பேருக்கு உணவு சமைக்கும் பணியில் இளைஞரணி தம்பிமார்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய போது, “வீரா சாமிநாதனை மிரட்டினால் பணம் கிடைக்கும் என்பதால் கத்தியால் குத்தினேன்” என கூறியிருக்கிறார். போலீசார் அந்த இளைஞரை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.



