லஞ்ச ஒழிப்புத் துறை

சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் சென்னை மற்றும் மதுரை அலுவலகம் மற்றும் 40 இடங்களில் வருமான வரி சோதனை!



சினிமா பைனான்ஸ் கொடுப்பதில் மிகவும் பிரபலமானவர் மதுரை அன்புச் செழியன் . சில மாதங்களுக்கு பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தன் மகளுக்கு திருமணம் நடத்தினார் என்பதும் அதில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய விக்ரம் 2 கமலஹாசன் திரைப்படத்திற்கு 100 கோடிக்கு மேல் பைனான்ஸ் கொடுத்தார் என்ற தகவலும் வெளிவந்தது.சில நாட்களுக்கு முன்பு வெளியான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தயாரித்து நடித்த லெஜன்ட் திரைப்படத்திற்கு பல கோடி பைனான்ஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரஜினி திரைப்படத்தை வெளியிடுவதற்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாகவும் தகவல்.அதுமட்டுமில்லாமல் மதுரை ஏரியாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளை எடுத்து நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஃபைனான்சியர் மற்றும் திரையரங்கு உரியமையாளர் என பல தொழில்களில் ஈடுபட்டிருப்பவர் அன்புச்செழியன். இவரது கோபுரம் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ.70 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று ரெய்டு நடைபெறுகிறது. அண்மையில் வெளியான தி லெஜன்ட் படத்தை அன்புச்செழியன் விநியோகம் செய்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் தான் இன்று ரெய்டு நடைபெற்று வருகிறது. மதுரை காமராஜர்புரத்தில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அவரது திரையரங்குகள், அலுவலகங்கள், சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு, சென்னையில் உள்ள அலுவலகங்கள் என்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகா் பிரகாசம் சாலையில் இருக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button