சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை குழாய்கள் மூலம் திறந்த வெளியில் வெளியேற்றி விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி! நுரையீரல் தொற்று நோயால் அவதிப்படும் பொதுமக்கள்

உலகளவில் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு மாசுபாடு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்திய தேசிய சுகாதார போர்ட்டலின்படி, காற்று மாசுபாட்டால் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். குறிப்பாக
தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படாமல் ரசாயனங்கள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் போது அந்தக் கழிவு நீர்

நீர்நிலைகளில் கலக்கும்போது, நீர் மாசுபாடு
நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன.
மாசுபாடு என்பது எல்லா இடங்களிலும் கவலைகளை எழுப்பும் ஒரு பெரிய உலகளாவிய அச்சுறுத்தலாகும் – மாசுபட்ட நீர் புதிய தீங்கு விளைவிக்கும் தொற்றுகள் மற்றும் கோளாறுகளை உருவாக்குகிறது. சமீபத்திய காலங்களில் இந்த நிலை மோசமடைந்துள்ளது
இதற்கு விதிவிலக்காக
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும்
பகுதியில் 25 க்கும் மேற்பட்ட தனியார் வஜ்ஜிரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து


சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை அப்படியே திறந்தவெளியில் வெளியேற்றி வருகிறார்கள். முக்தியார் என்பவருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் தொழிற்சாலையில் இருந்து
சுத்தகரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவு நீரை பைப் லைன் மூலமாக திறந்தவெளியில் வெளியேற்றி வருகிறார். வஜ்ஜிரம் தொழிற்சாலையிலிருந்து சுத்தி கரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவு நீரை இப்படி திறந்தவெளியில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து இப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திறந்த வெளியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது சம்பந்தமாக

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்கை கடைபிடித்த
வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து

வேலூர் காந்தி நகரிலுள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய

சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசனுக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்தால் வஜ்ஜிரம் தொழிற்சாலை முதலாளிகளிடம் தனக்கு வேண்டிய தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உடந்தையாக வெங்கடேசன் செயல்பட்டுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ பொதுமக்கள் நலன் கருதி சட்ட விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள் மீது

சென்னை கிண்டியிலுள்ள தலைமை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளான சேர்மனும் , எம்.எசும்..இதில் தனிக்கவனம் செலுத்தி குற்றச்சாட்டு வைத்துள்ள பேரணாம்பட்டு வஜ்ரம் தொழிற்சாலைகளுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றி வரும் வஜ்ஜிரம் தொழிற்சாலைகள் மீது மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதேபோல் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்து தொழிற்சாலைக்கு சீல் வைக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .
பொறுத்திருந்து பார்ப்போம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகளின் நடவடிக்கையை!
மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசனின் வரலாறு!
வேலூர் காந்தி நகரிலுள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசனுக்குசேலம் மாவட்டம், ஓசூர் போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியதும் அங்கு இவருக்கு கீழ் இடைத்தரகர்களை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் ஆய்வு செய்ததாக தரச் சான்று வழங்கி பல லட்சங்கள் கல்லாக் கட்டி வந்ததாகவும் . அதுமட்டுமின்றி இவரை நேரில் சென்று தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் விவசாய பாதிக்கப்படுவதாகவும் அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்டால் ஆபாசமாக பேசுவது மட்டுமில்லாமல் பெண்களிடம் அடிக்கடி உல்லாசமாக இருந்தால் இளமையாக இருப்பதாகவும் வேலையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி வரும் சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசன் தினந்தோறும் மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் ஆகியவற்றை எடுத்து அலுவலகத்தில் உள்ள கடைநிலை ஊழியர்களிடம் வீட்டில் சமைத்து எடுத்து வரச் சொல்லி சாப்பிடுவாராம் என்று வெங்கடேசனின் வரலாறை அலுவலகத்தில் உள்ள நேர்மையான ஊழியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் மாசடைந்த ஒரு அதிகாரியா!? ஆகவே பொறியாளர் வெங்கடேசன்
மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!