மாவட்டச் செய்திகள்

சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரை!

கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 150 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம்! நடைபாதை வியாபாரிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம்!?


சொத்தை விளை கடற்கரை வெறிச்சோடி காட்சியளிக்கும் அவல நிலை.!

சொத்தவிளை கடற்கரை

சர்வதேச சுற்றுலா தளமான அங்கு இயற்கை அழகாக காட்சியழித்தாலும்
அங்கு சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணும் நிலை உருவானதற்கு
காரணம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தான் இன்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதை தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றியதால் அப்பகுதியை வெறிச்சோடி காணப்படுகிறது.

டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இரண்டு மாதத்திற்கு கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைபோல் காணப்படும் என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால் டிசம்பர் மாதம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் கன்னியாகுமரி கடற்கரையை கண்டு களிக்காமல் செல்வதில்லை. அதுமட்டுமில்லாமல் முக்கியமாக டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அங்கு கோலாகலமாக நடைபெறும். அதற்கு முன்கூட்டியே கன்னியாகுமரி கலை கட்டி விடும் . இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வாடிக்கையாகும்.

அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் கடற்கரை செல்லும் வழியில் இருக்கும் சாலை ஓர நடைபாதை கடைகளில் பாசி, மாலைகள், சங்கு, தொப்பி, பேன்சி பொருட்கள் துணிகள் இப்படி பல்வேறு பேன்சி பொருட்கள் சிறு குறு கடைகளில் வாங்கி செல்வார்கள். இதனால் கன்னியாகுமரியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த வியாபாரத்தில் வரும் வருமானத்தை நம்பி வாழ்கின்றனர்.

அது மட்டும் இல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உணவகங்கள் தங்கு விடுதிகள் இயங்குகின்றனர். இதனால் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பெரிய வருமானம் வருவதையும் நாம் மறுக்கவும் மறக்கவும் முடியாது.

கன்னியாகுமரி பூம்புகார் படகு சவாரி


சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு கடல் பயணமாக சுற்றுலா பயணிகள் செல்லும் படகு சேவை உள்ளது. பூம்பூக்கார் படகில் லட்சக்
கணக்கானவர்கள் கட்டணம் செலுத்தி படகு சவாரி மேற்கொள்கின்றனர்

மேலும் பல்வேறு பகுதியில் இருந்து பேருந்து, இரயில் மூலம் கன்னியா குமரியை கண்டு கழிக்க வருகின்றனர்.

சொத்தவிளை பீச், பள்ளம் பீச், லெமோரியா பீச் – ல் இயற்கை அழகு பொங்கி வடிந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதவில்லை
பாதுக்காப்பு கொடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாலை ஓர கடை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் அவர்களை அகற்றுவது சரியான நடவடிக்கையா!?

மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் துணை போவதால் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுபோன்ற மக்கள் விரோத செயலால் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும்
தான் அவப்பெயர்.
கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர்
திமுகவை சார்ந்த குமரி ஸ்டீபன்.
அவருக்கு தெரியாத அரசியலா? எதற்காக இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது.

அரசுக்கு எதிராக கடற்கரை சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தினார்கள் என்றால் கன்னியாகுமரி மாவட்ட வியாபாரிகளின் பொருட்களை சூறையாடி இருக்கலாம்.

தங்கள் வாழ்வாதாரத்திற்கு வயிற்றுப் பிழைப்புக்கு வியாபாரம் செய்ய வந்தவர்களை
முறைப்படுத்த தவறியது பேரூராட்சி நிர்வாகத்தின் மிக பெரிய தவறு.
இதற்கு
பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்தான் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
அப்போதுதான் இந்த திமுக ஆட்சி மீது வரும் விமர்சனங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
பல நூறு ஆண்டுகளாக டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சென்று வரும் பக்தர்கள் தமிழர் திருநாள் பொங்கல் விடுமுறையை கண்டுகளிக்க வரும் லச்சக் கணக்கான சுற்றுலா பயணிகளை நம்பி 1000 குடும்பங்கள் சாலை ஓரங்களில் கடைகள் வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து தங்கள் வாழக்கையை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன் இருந்த ஆட்சியளார்கள் இவர்கள் வாழ்வாரதத்திற்கு துணையாக இருந்துள்ளார்கள் என்பதுதான் நிசரசனம்.

தற்போது உள்ள மாவட்ட நிர்வாகம் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்யும் வியாபரிகள் மீது என்ன கோபமோ??
புரியாத புரிதாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் செயலால்
வேதனை அளிக்கிறது.
மாவட்ட நிர்வாகத்திற்கு
இதனான் ஒரு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி ரவுண்டானா, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம் மற்றும் சுற்று பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட துணி கடைகள், அழகு சாதன பொருட்களின் கடை, உணவக கடைகள் என ஏராளமான தற்காலிக கடைகளை அதிரடிப்படை காவல்துறை உதவியுடன் கன்னியாகுமரி பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர்கள்.

இதனால் வியாபாரிகளுக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது.
தினந்தோறும் உழைக்கும் மக்களுக்கு சரிவர வேலைகள் கிடைக்காததால் இப்படி சாலை ஓரங்களிலில் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக ஆக்கும் அளவிற்கு கன்னியாகுமரி பேரூராட்சி நடந்துக் கொண்டதை கண்டித்து வருகிற 22-12-2022-தேதி கன்னியாகுமரி ஆவின் பாலகம் முன்பாக பேரூராட்சி நிர்வாக செயலை கண்டித்து
அனைத்து பாதிக்கப்பட்ட கடல்கரை வியாபாரிகள் சார்பில் கண்டன போராட்டம் நடத்த இருப்பதாக உள்ளனர் .
வே,அய்யப்பன்
(வழக்கறிஞர்) தெரிவித்துள்ளார் .

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button