காவல் செய்திகள்

செங்கல் சேம்பரில் பணம் கேட்டு மிரட்டிய   போலி வருமான வரித்துறை அதிகாரி கைது !



திண்டுக்கல் பழனி தாலுகா அடுத்த சத்திரப்பட்டி பகுதியில்  செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள்  காரில் வந்த

சந்திரசேகர் என்பவர் தன்னை வருமானவரித்துறை அதிகாரியாக அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையும் காண்பித்துள்ளார். மேலும் சேம்பரில் வரும் வருமானத்திற்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகார் வந்துள்ளதாக கூறி  பணம் பறிக்க முயன்றுள்ளார். சந்திரசேகரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சூளை மேலாளர் 

சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது செந்தில்குமார் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பணம் பறிக்கும் முயன்றது தெரியவந்துள்ளது. சந்திரசேகரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Back to top button