காவல் செய்திகள்

செட்டில்மெண்ட் தாசில்தாரர் சுமார் 100கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளது அம்பலமாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்த தகவல்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்)பத்மாமதி (வயது 45. )தற்போது பணியாற்றி வருகிறார்.
இவர் 2020இல் வட்டாட்சியாளர் அரசுப் பணியில் சேர்ந்தார் 2011இல் ஸ்ரீரங்கம் கோவில் அன்னதானத் திட்டத்தை முன்னாள் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்த போது தாசில்தார் ஆக பணிபுரிந்தார் . அதன்பின் ஸ்ரீரங்கம் மனச்சநல்லூர் 2011 முதல் 2014 வரை செட்டில்மெண்ட் தாசில்தாராக பணி செய்து வந்துள்ளார்.தற்போது 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் துணை ஆட்சியராக இருக்கிறார்.
இவர் மீது பல லஞ்ச புகார்கள் வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புகாவல்துறையினர் துணை ஆட்சியர் பத்மாவதி அவருடைய திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை ஓட்டத்தில் பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல். அதுமட்டுமில்லாமல் முன்னாள் அரசு கொரடா தற்போது ஆமா முக மாநில செயலாளர் மனோகரனுக்கு உறவினர் ஆவார்.பத்மாவதிக்கு 2 மகன்கள் உள்ளனர் .பத்மாவதி திருச்சியில் இருந்து மன்னார்குடிக்கு பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் தான் செல்வாராம்.
மூத்த மகன் ஹர்ஷவர்தன் என்பவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு இவர் தற்போது வர்ஷா கன்சக்சன் நிறுவனத்துடன் பங்குதாரராக திருவானைக்கால் அருகே பல அடுக்குமாடி கட்டடம் கட்டி வருகிறார். லால்குடி அருகே ஒரு பெட்ரோல் பங்க் வைத்துள்ளார் . அதுமட்டுமில்லாமல் மணச்சநல்லூர் இல் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் பங்குதாரராக உள்ளார். இரண்டாவது மகன் சென்னையில் டிப்ளமோ படித்து வருவதாக மூத்த மகன் 2017 திருமணமாகி மனைவியோடு கருத்து வேறுபாடு காரணத்தினால் மனைவியை விட்டு அரசரத்தினம் தன் தாய் பத்மாவதி இடம் தற்போது இருந்து வருகிறார்.இரண்டு மகன்கள் பெயரிலும் துணை ஆட்சியர் தனியார் நிறுவனங்களில் கோடிக்கணக்கான முதலீடு செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் விருதுநகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. 100 டேங்கர் லாரிகள் கொடைக்கானலில் பல கோடி பங்களா எஸ்டேட். சென்னை மட்டும் காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்க். மணச்சநல்லூர் அருகே பட்டாணியில் எஸ் எஸ் டியூப் என்ற கம்பெனி உள்ளது. 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.2011 முதல் 2016வரை ஸ்ரீரங்கம் மனச்சநல்லூர் செட்டில்மென்ட் தாசில்தாராக பணியாற்றியபோது துஷ்பிரயோகம் செய்து சட்டத்துக்கு புறம்பாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தற்போது பவானி அவர்கள் வீட்டில் மற்றும் பெட்ரோல் பங்க் பள்ளி போன்ற இடங்களில் சோதனை செய்ததில் ரொக்கப்பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றியதாகவும் பவானி அரசு அதிகாரி பணியை துஷ்பிரயோகம் செய்து தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் விசாரணை செய்து கைது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button