சென்னை தொழிலதிபரை கடத்தி நகை பணம் காரை பறித்துச் சென்று ஒரு வருடமாக தலை மறைவாக இருந்த ரவுடியை தேவகோட்டை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு வருடம் முன்பு சென்னை தொழிலதிபரை தேவகோட்டை ஆறா வயல் பேக்கரி அருகே கழுத்தில் கத்தி வைத்து காரில் கடத்தி சென்று நகை பணம் மற்றும் வீட்டிலிருந்த பணம் மற்றும் காரை பறித்துச் சென்றதாக ரவுடி குரு என்ற சிவகுருநாதன் மீது தேவகோட்டை ஆறா வயல் காவல் நிலையத்தில்
சென்னை தொழிலதிபர் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் 2023 பிப்ரவரி மாதம்
வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு ரவுடியையும் காரையும் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த ரவுடி குரு என்ற சிவகுருநாதன் சென்னை பூந்தமல்லி அருகே தன் மனைவியுடன் வீட்டில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தேவகோட்டை ஆறா வயல் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் (பொறுப்பு ) சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய தனிப்படை காவல்துறையினர் ரவுடி குரு என்ற சிவ குரு நாதனை பிடித்து பருத்தி சென்ற காரையும் பறிமுதல் செய்து
(காரை கலர் மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர்)
தேவகோட்டை ஆறா வயல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ரவுடி குரு என்ற சிவகுருநாதன்
யார் எப்படி ரவுடி தொழிலுக்கு வந்தார் என்று ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை புலனாய்வு குழு கடந்த ஆறு மாதங்களாக விசாரித்த போது
2014 ஆம் ஆண்டு திருச்சி பேருந்து நிலையத்தில் சென்னை செல்லும் ஆம்னி தனியார் பேருந்துகளுக்கு பயணிகளை ஏற்றி விடும் பணிகளை செய்து வந்துள்ளார் .இவரது சொந்த ஊர் கமுதி அருகே சின்ன கிராமம். இவருக்கும் மயிலாடுதுறை அருகே உள்ள சோழியங்காடு ரவுடி கலைவாணன் என்ற நபருக்கும் தொடர்பு இருந்து வருகிறது.
சென்னை தொழிலாளர் வரை கழுத்தில் கத்தியவைத்து கடத்தி காரை பறித்துச் சென்று
சோழியங்காடு கலைவாணன் இடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் குரு என்ற சிவகுருநாதன் மனைவி உண்மை அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருவதாகவும் . தன் மனைவியுடன் வசித்து வருவதாகவும் புலனாய்வில் தெரிய வந்தது.
அது மட்டும் இல்லாமல் ரவுடி குரு என்ற சிவகுருநாதன் 2014 ஆம் ஆண்டு திருச்சியில் தேவர் சிலை வைப்பதில் சட்ட ஒழுங்கு பிரச்சனையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் ஆள் கடத்தல் மற்றும் பண செடியில் ஈடுபட்டும் வந்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.