சோபா கட்டில் மெத்தை தயாரிக்கும் குடோனில் திடீர் தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
கோவை சின்னவேடம்பட்டி அருகே சுப்பநாயக்கன் புதூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில், மரங்களை கொண்டு நவீன மர சாமான்கள், கட்டில்கள், பிரோ, குஷன் மெத்தை சோபாக்கள்,தயாரிக்கும் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் மரப் சாமான்கள் தீயில் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி, பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் மூக்கையன் (53). இவர் அப்பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார், இந்த குடோனின் வைத்து பல்வேறு வீட்டு உபயோக மரசாதனங்கள் ,கடைகளுக்கு தேவையான சோபாக்கள்,கட்டில்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார், பர்னிச்சர் தயாரிக்கும் தொழில் கூடத்தில் இருபதுக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்களுடன் உள்ளூர் வேலையாளர்களும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் காலை வழக்கம் போல் குடோனில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்து கொண்டு இருந்தனர். அப்போது பகல் 1.00மணி அளவில் மர குடோனின் ஒரு பகுதியில் திடீ ரென்று தீ விபத்து ஏற்பட்டது. மலமலவென தீ எரிந்து கரும் புகையை கிளப்பியது, இதனை கண்ட தொழிலாளரகள் உடனடியாக வெளியேறினர், இதனால் உயிர் சேதம் இன்றி தப்பினர், இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அருகே உள்ள கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ அணைக்க முற்பட்டனர் ,நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் அதற்குள் பெரும் பொருட்கள் தீயில் கருகி போனது , இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பஞ்சு, மர சாமான்கள்,ரெக்சின், மிஷின்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது என கூறப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக தீ விபத்து குடோனின் மேல் பகுதியில் தாழ்வாக, மின் சார கம்பிகள் செல்லுவதால், அந்த நேரத்தில் அதிகமான காற்று வீசியதால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக சொல்ல படுகிறது, இருப்பினும் தொடர்ந்து காவல் துறையினர், மின்சார வாரியத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, தீயை அணைத்த தீயணைப்பு அலுவலரின் தகவல், தொழிலாளர்கள் கூறும் தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த மரக்குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே பெரும் கரும் புகையால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டும், வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்கு வரத்து இடையூறு ஏற்பட்டது.