காவல் செய்திகள்

தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போலி மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!
மாதம் 5 லட்சம் வரை கல்லாக்கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம்!  கண்டுகொள்ளாத திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!நடவடிக்கை எடுப்பார்களா  தென்மண்டல ஐஜி மற்றும் காவல்துறை டிஜிபி!!

தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போலி மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!
மாதம் 5 லட்சம் வரை கல்லாக்கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம்!  நடவடிக்கை எடுப்பார்களா  தென்மண்டல ஐஜி மற்றும் காவல்துறை டி ஜி பி!!

கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாகவும் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

கஞ்சா மட்டும் போலி மது பாட்டில்கள் விற்பனைக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை  காவல் உட்கோட்டம் என்று பல தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வருவது வழக்கம்.
கஞ்சா மற்றும் குட்கா, போதை பொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. இவற்றை தடுப்பதற்கு ஆங்காங்கே கஞ்சா வழக்குகளும், போதை பொருள் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதேபோல் செயின் பறிப்பு, மணல் கடத்தல், மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்தல், போதைப்பொருள் கடத்தல் என ஏராளமாக நடக்கிறது. இந்நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இருந்தாலும் குற்றவாளிகள் ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் ஜாமீன் பெற்று மீண்டும் வந்து அதே தொழிலை செய்கின்றனர்.
இதனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை. குற்றவாளிகளால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.


கடந்த 04/04/ 2023 அன்று மகாவீர் ஜெயின் அரசு விடுமுறை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்பட்டது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அனைத்து இடங்களிலும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் அமோகமாக விற்பனை நடப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குள்ளலக்குண்டு கிராமம் ரயில்வே கேட் அருகில் இருந்த டாஸ்மாக் கடை அருகே ராமமூர்த்தி என்பவர் அது கடையில்  மாலை நேரத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை நடப்பதை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு போட்டுள்ளது என்று தகவல் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து  இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக அதிக விலைக்கு  போலி மதுபாட்டில் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
அதைவிட அதிர்ச்சி வீடியோ ஒன்று வந்துள்ளது.
கொடை ரோட்டில் உள்ள டாஸ்மார்க் ஏசி பார் அருகில் அலுவலகம் வைத்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் மிகக் குறைந்த தூரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நிலக்கோட்டை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது காவல்துறை. இந்த கஞ்சா விற்பனையால் பல பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 50 சதவீதத்திற்கு மேல் கஞ்சாவிற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலையும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட சூதாட்டமும் அமோகமாக நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அம்மைய நாயக்கனூர் நிலக்கோட்டை அணைபட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு  டாஸ்மாக் கடையின் பின்புறம் 24 மணி நேரமும் சூதாட்டம் நடைபெறுவதாகவும் அதுமட்டுமில்லாமல் அம்மைய நாயக்கனூர் நக்கம்பட்டி காவியன் பள்ளி பின்புறம் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாகவும் அதேபோல் பள்ளப்பட்டி கான்மாய் கரை அருகில் கல்லடிப்பட்டி சோழவந்தான் செல்லும் சாலையில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சூதாட்டம் நடத்துபவர்கள் மாதம் ஒரு லட்சம் வரை நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கப்பம் கட்டுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பலமுறை சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்தும் பெயருக்கு ஒரு சில வழக்குகளை பதிவு செய்து கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி கஞ்சா போலி மது பாட்டில் விற்பனை சூதாட்டம் இவை அனைத்துக்கும் ஒரு காவல் நிலையத்திற்கு மாதம் 5 லட்சம் வரை  லட்சத்திற்கு மேல் கப்பம் கட்டி வருவதாகவும் இவை அனைத்தும் எல்லா அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடப்பதாகவும் இதற்கு பின்பு அரசியல்வாதிகளும் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
ஆகவே திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்தில்  கஞ்சா லாட்டரி போலி மது பாட்டில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வரும் சமூகவிரோதிகளின் மீது தென்மண்டல ஐஜி மற்றும் காவல்துறை டிஜிபி நடவடிக்கை எடுக்க நேர்மையான காவல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் . அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்  இதனால போதைக்கு அடிமையாகி இருக்கும் பல இளைஞர்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button