மாவட்டச் செய்திகள்

தாய் தந்தையை இழந்த 13 வயது மாணவனுக்கு கல்விக் கட்டணம் இல்லாமல் படிக்க பள்ளிக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.


விருதுநகர் மாவட்டம்
திருச்சுழி வட்டம், குரவைகுளத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த செல்வன்.வெற்றிவேல் என்ற மாணவனின் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர்.


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (03.09.2021) திருச்சுழி வட்டம், குரவைகுளத்தை சேர்ந்த தாய்,தந்தையை இழந்த செல்வன்.வெற்றிவேல் என்ற மாணவனின் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவி செய்து, மாணவனுக்கு டிக்ஸ்னரி, பொது அறிவு களஞ்சியம் புத்தகம், மற்றும் செல்போன் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மாணவனின் வாழ்க்கையில் நல்ல எதிர்காலம் அமைவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.


விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், குரவை குளத்தை சேர்ந்த செல்வன்.வெற்றிவேல் என்ற 13 வயது மாணவன், எனது தந்தை கடந்த 07-12-2019 அன்று உயிரிழந்து விட்டதாகவும், தனது தாய் கடந்த 10-06-2021 அன்று உயிரிழந்தாகவும், தாய் தந்தையை இழந்து தவித்து வருவதாகவும், தற்போது, தனது பாட்டி திருமதி.பூமி என்பவரது அரவணைப்பில் இருந்து வருவதாகவும், எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்றும், குடும்ப வருமானம் இல்லாததால் கல்வி பயில இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
அதனடிப்படையில், இந்த மனு குறித்து, சம்மந்தப்பட்ட மாணவனின் நிலை குறித்து, வருவாய் துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விசாரணை செய்து, அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கட்டணம், விடுதி கட்டணம்  ஏதும் இன்றி கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், மாணவன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று கல்வி கற்பதற்கு ஏதுவாக, ஒரு செல்போன் ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த மாணவனுக்கு டிக்ஸ்னரி மற்றும் பொது அறிவு புத்தகத்தை பரிசாக வழங்கி, சிறப்பாக கல்வி பயின்று நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அந்த மாணவன் மற்றும் அவரது பாட்டி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button