காவல் செய்திகள்

விலை உயர்ந்த செல்போனை தவறவிட்ட தனியார் நிறுவன பெண் ஊழியர்!துரிதமாக கண்டுபிடித்த கொடுத்த மாம்பழம் R1 காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுத்த காவல் துறைக்கு என்றும் நன்றியுள்ளவராக இருப்பதாக ஆனந்த கண்ணீர் விட்ட தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்!


சென்னை தி.நகர் மாம்பழம் R.1காவல் நிலையத்துக்கு உட்பட்ட சவுத்போக்ரோடு சேர்ந்த ஸ்ரீதேவி,என்பவர் ஜாஸ்ல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிகிறார்.
இவர் செப்டம்பர் 16, 2023 அன்று, ஓலா காரில் பயணம் செய்தும் போது தன்னுடைய செல்போனை தவற விட்டதாக மாம்பலம் R1 தி.நகர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். உடனே புகார் கொடுத்த பெண் பயணம் செய்த ஓலோ கார் ஓட்டுனரின், தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, காரில் பயணம் செய்த பயணியின் தொலைபேசி தவற விட்டதாக புகார் கொடுத்துள்ளதாகவும் அது சம்பந்தமாக விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தார்கள். மட்டுமில்லாமல் தொடர்ந்து இரண்டு நாட்களாக தவறவிட்ட செல் போன் எண்ணுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தன், அதே ஓலோ காரில் பயணித்தவர்களுக்கும் பலமுறை தவறவிட்ட தொலைபேசி பெண்ணிற்கு தொடர்பு கொண்டு மற்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார் அதன் பின்பு தவறவிட்ட செல்போன் எங்குள்ளது என்பதைக் கண்டுபிடித்து செல்போனை தவறவிட்டதாக புகார் கொடுத்த பெண்ணை தொடர்பு கொண்டு மாம்பழம் ஆறுமுகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முன்னிலையில் பெண்ணிடம் செல்போனை ஒப்படைத்துள்ளனர்.
தவறவிட்ட செல்போனை பெற்றுக் கொண்ட அந்தப் பெண் புகாரின் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து செல்போனை கண்டுபிடித்து கொடுத்ததற்கு காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததும் இல்லாமல் வருங்காலங்களில் காவல்துறைக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்
என்று தமிழக காவல்துறையின் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button