தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு ‘தமிழக முதல்வர் கோப்பை” (Chief Minister’s Trophy) வழங்கப்பட்டுள்ளதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழக முதல்வர் கோப்பை” (Chief Minister’s Trophy) விருது வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் 34வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று (02.09.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சபாபதி அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி இதே போன்று என்றும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து அவர்கள் உடனிருந்தார்.