தமிழ்வழிக் கல்விச் சான்று வழங்க பணம் மற்றும் சாக்பீஸ் பாக்ஸ் லஞ்சம் கேட்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்!! கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் அரசு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித்துறை!?
தமிழ்நாட்டில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவர் மாணவிகள் பலர் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ்வழிக் கல்விச் சான்று கட்டாயம் என்று அறிவித்த நிலையில் அனைத்து மாணவர்களும் அவர் அவர்கள் படித்த பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விச் சான்று பெற செல்கின்றனர்.
அப்போது ஒருசில அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை நாளை வாருங்கள் நாளை மறுநாள் வாருங்கள் என்று அலைக்கழித்து வருவதுடன் ஏதாவது அன்பளிப்பாக 100 ,200, 500 ரூபாய் வரை கேட்டு பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மாணவ மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பாலான மேல்நிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி உடனே சான்றிதழ் கொடுத்து விடுவதாகவும் ஆனால் ஒரு சில பள்ளிகளில் ஏதாவது அன்பளிப்பு கேட்பதாகவும் தகவல் வந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தமிழ்வழிக் கல்வி சான்று பெறுவதற்கு தாங்கள் படித்த சோலவந்தன் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் தீபா அவர்களை அணுகி உள்ளனர். அப்போது தினந்தோறும் தமிழ்வழிக் கல்விச் சான்று பெற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்து கொண்டிருக்கின்றனர் என்று தலைமையாசிரியர் தீபா அவர்கள் பள்ளிக்கு தமிழ்வழிக் கல்விச் சான்று வாங்க வரும் முன்னாள் மாணவர்களை உங்களால் அன்பளிப்பாக வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும் சாக்பீஸ் வாங்கிக் சாக்பீஸ்பற்றாக்குறையாக இருப்பதால் இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அலுவலருக்கு கேட்டும் இதுவரை போதுமான சாக்பீஸ் வழங்கவில்லை.ஆகவே தாங்கள் சாக்பீஸ் பாக்ஸ் வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளார். எது எப்படியோ தற்போது நடந்து வரும் சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரை மணி நேரம் தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறையை பற்றி பேசியதை தமிழகமே புகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் தற்போது பள்ளிகளில் கரும்பலகையில் எழுதும் சாக்பீஸ் கூட பற்றாக்குறையாக இருப்பது வேதனையாக இருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆகவே இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஆளாகாமல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் குரூப் 4 மற்றும் தமிழக அரசு பணிக்கு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு படித்த பள்ளியில் தமிழ் வழிக் கல்வி சான்று வழங்க எந்த நிபந்தனையும் வழங்கக் கூடாது எந்த கால தாமதம் செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே இதுபோன்ற பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதுதான் நிதர்சனம்.